Monday, 30 March 2020

ஈழத்தில் ஒரு கீழடி

ஈழத்தில் ஒரு கீழடி

ஈழத் தமிழர்கள் புராதன நாகரிகத்துக்கு சொந்தக் காரர்கள்.ஈழதேசத்தின் கிழக்கின் தொல்லியல் களஞ்சியமாய் விளங்கும் கொட்டியாரம் நம் முன்னோர்கள் வழி வரலாற்றை பறை சாற்றும் பல ஆதி கால சான்றுகள் நிறைந்து காணப்படுகிறது.

சேனையூர்,கட்டைபறிச்சான்,சம்பூர்,பள்ளிக்குடியிருப்பு,நல்லூர்,மல்லிகைத்தீவு,மூதூர்,இலங்கைத்துறை,கிளிவெட்டி,ஈச்சலம்பற்று,மேங்காமம்,கங்குவேலி ,வெருகல் என விரிந்திருக்கும் கிராமங்கள் தோறும் வரலாற்றுத் தடங்கள் விரவிக் கிடக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகமாக மொகஞ்சதாரோ ஹரப்பா தமிழர் முது நாகரிகத்தை சொல்கிறது.தென்னக வைகைக் கரையில் நாம் சங்க இலக்கியத்தில் படித்த நாகரிகம் மிக்க தமிழர் வாழ்வை அண்மைக்கால கீழடி ஆய்வுகள் நிருபிக்கின்றன.

ஈழத் தமிழர் தொன்மை வாழ்வு மாவலி நதிக்கரையில் செழிப்போடு இருந்ததற்கான சான்றுகள் நமக்கு திருக்கரசை திருமங்கலாயில் ஆழப் புதைந்த பதிவுகள் கட்டிட இடிபாடுகளாய் நம் கண் முன் திருக்கரசை புராணம் இலக்கியமாய் ஈழத் தமிழர் தொன்மை நாகரிகத்தை எடுத்தியம்பும்.
No photo description available.இன்று கல் வெட்டுகளும் அடித்தள கட்டு மானங்களும் திருக்கரசையில் புதைந்து கிடக்கும் அந்த நாகரிகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
ஒரு பெரும் பழந்தமிழர் நகரமே இங்கு புதைந்து கிடக்கிறது இலங்கையில் பொலநறுவையும்,அனுராதபுரமும் புராதன நகரங்களாக கொண்டாடப் படுகின்றனவோ திருக்கரசை நகரும் கொண்டாடப்பட வேண்டும்.
ஒரு செழிப்பு மிகு நாகரிகம் இங்கு இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்பிருந்தே தொடர்கிறது என்பதை ஆரம்ப ஆய்வுகள் நிருபிக்கின்றன.இன்னும் நாம் மேலும் மேலும் அகழ்வாய்வுகளை மேற்கொள்கிற போது நம் நாகரிகத்தின் பழமையயை ஆணித்தரமாக உறுதிப் படுத்த முடியும்.

No photo description available. உலக வரலாறு நதிக்கரைகளையும் ஆற்று படுக்கைகளையும் அண்டியே வளர்ந்திருக்கிறது.திருக்கரசை பெரும் கங்கை சமவெளியாய் நீண்டு கிடக்கிறது மணல் படுக்கைகளாய் உறைந்து கிடக்கும் பெரு நகரம் ஒன்று மறைந்து கிடக்கும் திருக்கரசையின் பண்டைப் பண்பாட்டை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

கீழடி ஆய்வுகள் எப்படி இந்திய வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் போட்டிருக்கிறதோ அதே போல திருக்கரசையிலும் அதனைச் சூழ உள்ள மகாவலி ஆறுப் படுக்கையிலும் அகழ்வாய்வு சரியான முறையில் மேற்கொள்ளப் படுகிற போது ஈழத் தமிழர் வரலாற்றின் புதிய அத்தியாயங்களை எழுத முடியும்.


பாலசுகுமார்
t
e

தோழர் தம்பி தில்லை முகிலன்

தோழர் தம்பி தில்லை முகிலன்

புரட்சிகர செவ்வணக்கம்

தோழனே உன்னைப் பற்றி என்ன எழுத எதை எழுத எதை விட தோழமையும் உரிமையுமாய் நீண்ட பயணங்கள் .
திருமலை நகரில் எழுபதுகளின் ஆரம்பத்தில் முன்னோடிகள் சங்கப் பலகை நிகழ்வுகளில் முற்போக்கு முகம் கொண்டு மாக்சிய கருத்துக்களை அள்ளி வீசிய அந்த தருணங்கள்.உன் கம்பீரக் குரல் மிடுக்கேறிய உன் தோற்றம் பார்த்த மாத்திரத்திலேயே என்னை ஆதர்சித்த உன் தோற்றம் பின்னாளில் பல கவிதை அரங்குகளில் உன் புரட்சிகர முழக்கம் திருமலையில் ஒரு முற்போக்கு முகாமுக்கான முன்னறிவிப்பாய் அமைந்தன.
ஈழப் புரட்சி அமைப்பு கொட்டியாரப் பிரதேசத்தில் கட்டைபறிச்சான் கங்குவேலி ஆகிய இடங்களில் நடாத்திய மே தின விழாக்கள் மணல்சேனையில் நடத்திய உழவர் விழா தம்பலகாமத்தில் நடத்திய மேதின விழா எல்லாவற்றிலும் நாடகமும் கவிதையுமாய் நீ சுழன்ற அந்த கலை எழுச்சி அதிலும் உன் நாடகங்கள் சொன்ன சோசலிச சித்தாந்த சிந்தனை பகிர்வு கவிதை மூலம் காட்டமாக முன் வைத்த கடவுள் மறுப்பு.
1977 தேர்தலில் ஈழக் கோரிக்கைக்காய் ஊர் ஊராக செய்த பிரச்சாரம் இடதுசாரித்துவத்தை தமிழ் இன உணர்வுடன் பார்த்த அந்த நாட்கள் தொடர்ந்தும் அதன் வழிப் பட்ட உன் பயணம் .
எண்பதுகளில் நாடகம் கலை இலக்கியம் என நீ காட்டிய அக்கறை செயல் பாடு.பாடசாலை தமிழ் தினப் போட்டிகளுக்கு உன் நாடகப் பிரதிக்காகா தவம் கிடந்த பாடசாலைகள் உயிர்த் துடிப்பான உன் நாடக இயக்கம் உன் வழி உருவான பல கலைஞர்கள்.
Image may contain: 1 person தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் புதிய நாடக முயற்சிகள் பல் குரல் மன்னனாய் குழந்தைகளுடன் குதுகலிக்கும் அந்த பொழுதுகள் சிவாஜியை அப்படியே கொண்டுவரும் உன் குரலும் பாவங்களும்.தோழர் பற்குணத்துடன் இணைந்து சமூக அக்கறையுடனான கலை இலக்கிய செயல் பாடுகள் .
தோழனே பல்கலைக் கழக விரிவுரயாளனாய் நான் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலை திருகோணமலையில் நானும் மெளனகுரு சேரும் நடத்திய நாடகப் பட்டறைகளில் கலந்து கொண்டு தெரியாததை அறியத் துடிக்கும் கர்வமற்ற கலைஞனாய்.
வான்மதிக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போது மட்டக்களப்பு வந்து உன் மகளாக அவளைப் பார்த்துக் கொள் என்று சொல்லி நெகிழ்ந்த தருணங்கள்
அவள் இராவணேசனில் பங்கு பற்றி பாராடுப் பெற்ற போது உன் இலட்சியம் நிறைவேறியதாக நீ கொண்ட பூரிப்பு.
மகள் இறந்த போது உன் துயரை பகிர்ந்து கொண்ட அந்த நாட்கள்.
Image may contain: 2 people
நான் கடத்தப் பட்டதை அறிந்து நீ பட்ட துயரத்தை பின்னாளில் ஒரு நால் என்னிடம் சொல்லிய போது நான் நெகிழ்ந்த அந்த பொழுது.
யாரிடமும் எதையும் யாசித்து பெற்றதில்லை நிமிர்ந்த நடை நீ எங்கள் பாரதி .ஈழம் தந்த செல்லி
இறப்பு உனக்கில்லை தோழனே








பாலசுகுமார்

தாமரைத் தீவான்

தாமரைத் தீவான்

ஆலங்கேணிக்கு அடையாளம் தந்தவன்
வாழ்த்துவோம் நம் வர கவியை
இன்று 24.07.2019 நம் கவிஞனின் பிறந்த நாள்.
தன் வாழ் நாளில் இப்போதும் எழுத்தாய் வாழும் ஈழத்தின் மூத்த கவி.
ஆலங்கேணி மகா வித்தியாலயம் மூதூர் சென்ற அன்ரனிஸ் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர்.
மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஆசிரியராக பணியாற்றி உலகம் முழுவதும் அவர் பெயரை சொல்லும் நல் மாணாக்கர்களை உருவாக்கியவர்.
நான் லண்டன் வந்த போது யாழ் பல்கலைக் கழகத்தில் எனக்கு பேராசானாய் இருந்த கலாநிதி நித்தியானந்தன் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்படி ஒரு சந்திப்பில் தன்னுடைய ஆசிரியர் தாமரைத் தீவான் என்றும் தனக்கு தமிழ் படிப்பித்தவர் என்பதையும் அவரது நல்ல குணங்களையும் விதந்துரைத்தார்.
எனக்கு அறிமுகமான சந்தற்பங்கள் பல பல கவியரங்க மேடைகளில் கவிஞனாய் அவரை அவர் கவிதைகளை ரசித்தும் சுவைத்தும் மகிழ்ந்த பொழுதுகள்.
Image may contain: 1 person, close-up பின்னர் திருகோணமலையில் என் மனைவியின் பாட்டன் பேர் ஆசிரியன் சிப்பிரியான் பெர்னாண்டோ அவர்களின் மாணவனாக அறிந்து அவரோடு உரையாடிய நாட்கள் நினைவில் திருமலையில் ஐயாவை பார்க்க அடிக்கடி வருவார்.அது ஒரு நல்ல நட்பாய் இன்றும்.
தாமரைத் தீவான் ஒரு கொள்கை வாதி திராவிடக் கொள்கையில் காதல் கொண்ட தமிழ் உணர்வு மிக்க படைப்பாளி.தன்னுடைய பிள்ளைகளுக்கு திராவிட சாயலில் பெயர்களை வைத்து திராவிட உணர்வை பிரதிபலித்தவர்
தமிழ் அரசு திராவிடம் என தன் ஆரம்ப கவிதைகளில் உணர்ச்சிப் பிழம்பாய் தெறித்து நின்றவர்.
சமூக பிரச்சனைகளை தன் படைப்புகளின் மூலம் இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கும் படைப்பாளி சிறுமை கண்டு பொங்கும் பாரதியின் வாரிசு.
ஆலங்கேணி அவரால் பெருமையுறுகிறது அவர் வழியில் பல கவிஞர்கள் இன்று வரை ஆலங்கேணியில்
ஆலையூரான்
கேணிப் பித்தன்
அன்பழகன்
என பலர்
ஒரு மகா கவிஞனை வாழ்த்தி மகிழ்வோம் இன்னாளில்
ஆலங்கேணிக்கு அடையாளம் தந்தவன்
வாழ்த்துவோம் நம் வர கவியை
இன்று 24.07.2019 நம் கவிஞனின் பிறந்த நாள்.
தன் வாழ் நாளில் இப்போதும் எழுத்தாய் வாழும் ஈழத்தின் மூத்த கவி.
ஆலங்கேணி மகா வித்தியாலயம் மூதூர் சென்ற அன்ரனிஸ் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர்.
மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஆசிரியராக பணியாற்றி உலகம் முழுவதும் அவர் பெயரை சொல்லும் நல் மாணாக்கர்களை உருவாக்கியவர்.
நான் லண்டன் வந்த போது யாழ் பல்கலைக் கழகத்தில் எனக்கு பேராசானாய் இருந்த கலாநிதி நித்தியானந்தன் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்படி ஒரு சந்திப்பில் தன்னுடைய ஆசிரியர் தாமரைத் தீவான் என்றும் தனக்கு தமிழ் படிப்பித்தவர் என்பதையும் அவரது நல்ல குணங்களையும் விதந்துரைத்தார்.
எனக்கு அறிமுகமான சந்தற்பங்கள் பல பல கவியரங்க மேடைகளில் கவிஞனாய் அவரை அவர் கவிதைகளை ரசித்தும் சுவைத்தும் மகிழ்ந்த பொழுதுகள்.
Image may contain: 1 person, close-up
பின்னர் திருகோணமலையில் என் மனைவியின் பாட்டன் பேர் ஆசிரியன் சிப்பிரியான் பெர்னாண்டோ அவர்களின் மாணவனாக அறிந்து அவரோடு உரையாடிய நாட்கள் நினைவில் திருமலையில் ஐயாவை பார்க்க அடிக்கடி வருவார்.அது ஒரு நல்ல நட்பாய் இன்றும்.
தாமரைத் தீவான் ஒரு கொள்கை வாதி திராவிடக் கொள்கையில் காதல் கொண்ட தமிழ் உணர்வு மிக்க படைப்பாளி.தன்னுடைய பிள்ளைகளுக்கு திராவிட சாயலில் பெயர்களை வைத்து திராவிட உணர்வை பிரதிபலித்தவர்
Image may contain: 3 people, people standing and people sitting தமிழ் அரசு திராவிடம் என தன் ஆரம்ப கவிதைகளில் உணர்ச்சிப் பிழம்பாய் தெறித்து நின்றவர்.
சமூக பிரச்சனைகளை தன் படைப்புகளின் மூலம் இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கும் படைப்பாளி சிறுமை கண்டு பொங்கும் பாரதியின் வாரிசு.
ஆலங்கேணி அவரால் பெருமையுறுகிறது அவர் வழியில் பல கவிஞர்கள் இன்று வரை ஆலங்கேணியில்
ஆலையூரான்
கேணிப் பித்தன்
அன்பழகன்
என பலர்
ஒரு மகா கவிஞனை வாழ்த்தி மகிழ்வோம் இன்னாளில்



பாலசுகுமார்

குலராஜ் எனும் ஓவிய ஆளுமை

குலராஜ் எனும் ஓவிய ஆளுமை


தமிழ் சார்ந்த ஓவியர் குலராஜ்.ஓவியம் தமிழர்கள் மத்தியில் பல்லாயிரம் வருச மரபு சார்ந்ததாக இருந்தாலும் ஓவியம் பற்றி பேசிய தமிழ் ஓவியர்கள் பலர் மேலைத்தேய ஓவியங்களின் வழி வந்தவர்களை மட்டுமே கொண்டாடினர்.தமிழ் மரபு சார்ந்து பேசியோர் மிக மிக குறைவு.நவீன ஓவியம் என பேசியோர் மனதுக்கு உற்சாகம் தராத வண்ணங்களையே பயன் படுத்தினர் ஒருவகையான. அழிந்த வண்ணங்களாய் இருந்தன.தமிழ் மரபு இந்திய மரபு வான வில் போன்ற வண்ணக் கலவை மிக்கது ஒளிரும் வண்ணங்களாய் அவை நம்மை மகிழ்ச்சிப் படுத்தும்.

குலராஜ் நம் மண் சார்ந்த சிந்தனை வயப் பட்ட ஓவியர் ஓவியத்தை உயிராய் நினைப்பவர் ஓவியத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர் அல்ல.தமிழ் நாட்டின் புகழ் பெற்ற தஞ்சாவூர் ஓவியத்தின் சாயலில் ஈழத் தமிழர் பண்பாடு வரலாறு ஆகியவற்றை ஓவியங்ஜளில் கொண்டு வந்தவர் குலராஜ்.
குலராஜ்ஜின் ஓவியங்கள் கிழக்கு மண்ணின் சடங்குகளை பேசின தான் வாழ்ந்த சூழலின் பண்பாட்டை தன் வரை கலையில் கைகளுக்குள் களி நடம் புரிந்தன அவர் ஓவியங்கள்.

நம் கூத்தும் பறை மேளமும் வசந்தனும் கொக்கட்டி சோலையும் தோரணமும் குலராஜ்ஜின் ஓவியங்கள் வழி புது கலா பூர்வமான அர்த்தத்தை பெற்றன.எத்தனை வண்ணம் கொண்டாய் என அதிசயிக்க வைக்கும் ஓவியர் அவர்.

மட்டக்களப்பின் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் அவர் ஓவியங்களின் புதிய அர்த்தம் பெற்றன.நம் மரபின் அடையாளங்களை ஓவியங்களின் வழி உலகுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் குலராஜ்.

மரபு வழி ஓவியத்தை நவீன தமிழ் ஓவிய செல் நெறியாய் மாற்றலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் குலராஜ் அவர்கள்.சுனாமி பற்றிய அவரது ஓவியங்கள் அன்றைய சூழலை.நம் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
ஈழத் தமிழ் நவீன ஓவியத்தின் தமிழ் முகம் குலராஜ்.
ஈழத் தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய நம் ஓவியர் குலராஜ்.அவரது ஓவியக் கண் காட்சிகள் பரவலாய் நடத்தப் பட வேண்டும்.
புலம் பெயர் நாடுகளில் அவரது ஓவியங்களின் கண்காட்சியையும் பயில் அரங்குகளையும் நடத்த முடியும்

வாழ்த்துகள் குலராஜ்

பாலசுகுமார்


ஓவியர் குலராஜின் அண்மைக்கால ஓவியங்கள் இரண்டு
-----------------------------------------------------------------------------
ஓவியர் குலராஜின் அண்மைக் கால ஓவியங்கள் இரண்டைக்காணும் சந்தர்ப்பம் கிடைத்தது
.மனதையும் கருத்தையும் கவர்ந்த ஓவியங்கள் அவை
ஒன்று சக்தி சிவனோடு இணைந்து அர்த்தநாரியாக காட்டும் தோற்றம்
மற்றது அதேசக்தி சிவனை விட்டுபிரிந்து காதலியாக அவருக்கு அன்பு ஊட்டுவதும்,தாயாகி மகனுக்கு பாலூட்டுவதும்
No photo description available.
பெண்மையின் இரண்டு நிலைகள் என தன் கருத்தியலை கலையாக்கியுள்ளார் குலராஜ்
பெணமை இணந்தும் பிரிந்தும் செயற்படும்,அந்தச் செயற்பாட்டில் பல அர்த்தங்கள் இருக்கும்
குலராஜின் சிவன் அல்லது ஆண் என்றும் கரும் பச்சை நிறமானவன்,
அவரது சக்தி அல்லது பெண் சிவந்த நிறமுடையள்
அர்த்த நாரியாகக் காட்சிதரும் சக்தியின் சிவனின் கண்கள் காட்டும் பாவம் வேறு,.
குடும்பமாகக் காட்சிதரும்
சக்தியின்
சிவனின் கண்கள் காட்டும் பாவம் வேறு
முன்னையதில் கொடுமைகளைப் பொசுக்கும் அல்லது அழிக்கும் கோப உணர்வை-ரௌத்ர உணர்வை அக்கண்கள் வெளிப்படுத்துகின்றன
குடும்பப்பெண்ணாகக் காட்சிதரும் சக்தி கணவனை நோக்குகையில் அவள் கண்களிலே காதல் கொப்புளிக்கிறது.
சிவனின் கண்களிலும் அதே காதல் கொப்புழிக்கிறது
. குழந்தையை அணைக்கும் அவளது வலது கரத்தில் பாசம் தெரிகிறது
பாசம் பொழிகிறது
ஆண்களைக் கருமை நிறத்திலும்
பெண்களைச் சிவந்த நிறத்திலும்
படைத்திருக்கிறார் குலராஜ்
ஆணையும் பென்ணையும் குலராஜ் நிறம் கொண்டு வேறுபடுத்துகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது
அதற்கான வலுவான காரணங்கள்
அவரிடம் இருக்கவும் கூடும்
குலராஜுக்கு கிளிகள் மீது ஒருகாதல்
எங்கு நோக்கினும் கிளிகள்
முதல் படத்தில்
அம்மையின் கையிலே கிளி
,இர்டண்டாம் படத்தில்
அம்மையப்பனின் காதலை யும் பாசத்தையும் ரசிக்கும் கிளிகள்
குலராஜின் பாணியலமைந்த கோடுகளும்,வர்ணங்களும் எம்மைக் கவருகின்றன
இந்திய சிற்பங்களில் காணப்படும்
அழகு
,மென்மை
,நளினம்
ஆழம்
என்பன இவ்வுருக்களில் தோன்றி மரபை எமக்கு அழுத்தமாக உணர்த்துகின்றன
நன்றாக உற்றுப்பாருங்கள்
ரசியுங்கள்
இவ் ஓவியங்கள் இன்னும் பல உணர்வுகளைக் கருத்துக்களை உங்களுக்குத் தரக்கூடும்
ஓவியம் பேசுவது என்பது இதுதான்
ஓவியம் பேசாது
,ஆனால் அது நமக்குள் நம்மை பேச வைக்கும்
குலராஜின் இவ் ஓவியங்கள் மரபாகத் தோன்றும் அதே வேளை
நவீனமாகவும் காட்சிதருகிறது
மரபினடியாக இவர் உருவாக்கும் நவீனம் இது
இந்த தனித்துவம்தான் குலராஜிடம் எனக்கு மிகப் பிடித்த அம்சம்
அவர் கால்களும் சிந்தனையும் மிக அழுத்தமாக மண்ணில் ஊன்றி நிற்பதனால் இத்தகைய புதுமைகளை அவரால் படைக்க முடிகிறது
அவரிடமிருந்து நமது ஓவிய மாணவர்கள் கற்பதற்கு நிறைய இருக்கிறது
இந்த மரபுவ்ழி ஓவிய உணர்வையும்,சிந்தனையையும் குலராஜ் மாணவர்க்கு ஊட்ட வேண்டும்
உயர்கல்வி நிறுவனங்கள் அவரை நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்


மௌனகுரு

தர்சி எனும் நர்த்தகி

தர்சி எனும் நர்த்தகி


Image may contain: 2 people
நான் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றிய காலங்களில் விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தவர் சிவ தர்சினி அவர் படிக்கும் காலங்களில் அவரின் திறமை மேடையில் பளிச்சென மின்னும்.பரத நாட்டியம் கதகளி இவற்றில் கற்பனையோடு புத்தாக்க்கம் செய்திறன் வாய்க்கப் பெற்றவர் தர்சி.
ஒரு குழு நடனமாக இருந்தாலும் அதில் அவர் திறமை தனித்து தெரியும் .இன்று உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் நடன ஆசிரியராக இருக்கும் தர்சி தனித்துவமான தன் படைப்புகளால் திருகோணமலை கலை வரலாற்றில் நடன நாட்டியத் துறையில் வித்தியாசமான நடன அளிக்கைகளால் தனி முத்திரை பதிக்கும் ஒருவராக கணிக்கப் படுகிறார்.
Image may contain: 5 people, people smiling அண்மைக் காலமாக அவர் படைப்புகளை வீடியோ வழி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தமை பெரிதும் மகிழ்ச்சிக்குரியது.
வேல் ஆனந்தன் ஆசிரியர் வழியாக கனடாவில் நிகழ்ச்சிகள் செய்து திருமலை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்.
Image may contain: 4 people
இலங்கை இந்தியா புலம் பெயர் நாடுகள் என பல நூறு நடன கலைஞர்களின் படைப்புகளை கண்டு களித்திருக்கிறேன் ஆனாலும் தர்சியின் ஆடலும் அபி நயமும் பாவமும் தனித்து தெரிபவை.
தர்சியின் படைப்புகள் கண்டு மகிழ்வதோடு தமிழர் நடன வரலாற்றில் சாதனைகள் படைக்க வேண்டும் என வாழ்த்தி நிற்கிறேன்
இந்த வேளையில் தர்சியின் தகப்பனார் சுப்ரமணியம் அவர் மனைவி திருமகள் இருவரையும் நினைத்துப் பார்க்கிறேன் .(படங்களுக்கு நன்றி சசிகுமார்)

பாலசுகுமார்


Saturday, 28 March 2020

என்னை ஆராதித்த மட்டக்களப்புத் தமிழகம்

என்னை ஆராதித்த மட்டக்களப்புத் தமிழகம்

மட்டக்களப்பு எனும் பெரு நிலம் வெருகல் தொடங்கி பாணமை வரை நீண்டு தமிழ் கூறும் நல்லுலகம்.

பன்னெடுங்கால பழந்தமிழ் நிலம்.
மட்டக்களப்பு தமிழகம் தனித்துவமான பண்பாடுகளால் ஏனைய தமிழர் பிரதேசங்களிலிருந்து வேறு படுகிறது.பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவதைப் போல மட்டக்களப்பு பண்பாட்டு மானிடவியலாளர்களின் சுரங்கம்.பண்டிதர்.வி.சி.கந்தையா அவர்களின் மட்டக்களப்பு தமிழகம் எனும் நூல் அதன் தனித்தன்மையயை வெளிப் படுத்தி நிற்கிறது.அதேபோல பேரா.மெளனகுருவின் மட்டக்களப்பின் மரபு வழி நாடகங்கள் எனும் நூல் கூத்தும் அதனோடிணைந்த கலைகளையும் நம் முன் கொண்டு வருகிறது.மட்டக்களப்பின் வரலாற்றைப் பேசும் பலர் வித்துவான் கமலநாதன்,விஜயரத்னம் எட்வின்,வெல்லவூர் கோபால்,செல்வி.தங்கேஸ்வரி,
சுவாமி விபுலானந்தர் பண்டிதர் பூபாலபிள்ளை,சோமசுந்தர தேசிகர்,புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை,பண்டிதர் வி.சி.கந்தையா என் நீண்டு செல்லும் அறிஞர் பரம்பரையும் அவர் தம் முதுசங்களும்.
மட்டக்களப்பு எனக்கொரு கனவு தேசம்1961ம் ஆண்டு எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது அம்மாவுடன் முதல் மட்டக்களப்பு விஜயம் அப்புச்சி அப்போது மட்டக்களப்பு சிறையில் ஒரு வழக்கு தொடர்பாய் விழக்க மறியலில் இருந்தார்.இன்னமும் மாறாத நினைவு அது .
தொடர்ந்து வெருகல் திருவிழா போகும் போதெல்லாம் வெருகல் ஆற்றைக் கடந்து மட்டக்களப்பின் எல்லையயை தொட்டு நாவல் பழம் ஆய்ந்து தாமரைக்காய் பறித்து அங்கு பூத்திருக்கும் அல்லிப் பூவில் மயங்கிய நாட்கள்.வெருகலுக்கு வரும் மட்டக்களப்பின் பூந்தி கடைகளின் வாசமும் ருசியும் மனதை மயக்கும்.
அப்புச்சி அடிக்கடி சொல்வார் கல்லாத்தில் சொந்த காரர்கள் இருப்பதாக.எங்கள் ஊரில் சின்ன மட்டக்களப்பு என்ற இடமே உள்ளது அந்தளவுக்கு மட்டக்களப்புக்கும் எங்களுக்கும் நெருங்கிய தொடர்பு.ஆனாலும் எனக்கு மட்டக்களப்பு ஒரு கனவாகவே இருந்தது.
1971ம் ஆண்டு எங்கள் சேனையூர் மகாவித்தியாலய முதல் சுற்றுலா
அதிபர் கணேஸ் மாமா ஏற்பாடு செய்தார் என்னிடம் பண வசதியில்லை ஆனாலும் எனக்குரிய சுற்றுலா பணத்தை கணேஸ் மாமாவே கட்டினார்.அற்புதமான பயணம் அது.இலங்கை முழுவதும் சுற்றிப் பார்த்தோம்.மட்டக்களப்பில் வாழைச்சேனை கடதாசித்தொழிற்சாலை ,மட்டக்களப்பு நகரம் எங்கள் கண்களில். சித்தாண்டி கந்தலிங்கம் அய்யா வீட்டில் சாப்பாடு புட்டும் தயிரும் மறக்க முடியா மண் மறவா சாப்பாடு.என்னுள் மட்டக்களப்பு பற்றிய கனவை மேலும் மெருகூட்டிய பயணம் அது
1977யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மட்டக்களப்பிலிருந்து பலர் வந்து சேர்கின்றனர்.எல்லோரும் நண்பர்களாகின்றனர்.1978 புயல் பல்கலைக்கழகமிருந்து முதல் குழுவாக திருகோணமலையிருந்து
கடல் பயணம் மட்டக்களப்பு கல்லடியில் நிவாரணப் பொருட்களுடன் இறங்க ஏனையவர்கள் தரை மார்க்கமாக மட்டக்களப்பு வருகின்றனர் புயல் பாதித்த வாகரையிருந்து அக்கரைப்பற்று வரை எங்கள் பயணம் நிவாரணப் பணிகளில் நாங்கள்.
கனவு தேசமான மட்டக்களப்பு சிதைந்து சின்னாபின்னமான காட்சிகள்.
பின்னர் அடிக்கடி நண்பர்களுடன் மட்டக்களப்பு நோக்கிய பயணங்கள் எங்கள் சக மாணவி சந்திரமணியின் பாட்டி மரண வீடு காரைதீவு சென்றமையும்,காரைதீவு கண்ணகி ,விபுலானந்தர் இல்ல தரிசனம் என என் கனவின் மீதி நிஜமாகிய நாட்கள்.
பின்னய விடுமுறை நாளில் நண்பர்களுடன் சம்மாந்துறையில் மன்சூர் ஏ காதர் வீடும் அவர்கள் ஆற்றில் குளித்ததும் அடுத்த நாள் கல்முனைக்குடியில் எச்.எம் பாறுக் வீட்டுச்சாப்பாடும் எங்கள் ஆசான் பேராசிரியர் நுஹ்மான் வீட்டுக்கு சென்று வந்தமையும் சந்தோசப் பொழுதுகள்.
வாழைச்சேனை ராஜ்குமார் வாகரை கபிரியல் மாஸ்ரர் மகள் மட்டக்களப்பு ராஜலட்சுமி,ரூபி,பாண்டிருப்பு தவமணி,ஜெயந்தி,குருமண்வெளி பாக்கியராஜாஇன்னும் பல நண்பர்கள். என நண்பர் நண்பிகளின் சந்திப்பு.
ஈழப் புரட்சி அமைப்பாய் இயங்கிய போது காத்தான்குடி கபூர்,மட்டக்களப்பு பொன்னம்பலம் கஜன்,கிருபா என எத்தனை தோழர்கள்.
திருமணம் மட்டக்களப்புக்கே நான் மருமகனாதல் குருமண்வெளியூர் சோமசுந்தர தேசிகர் பேத்தி என் மனைவியாக வந்தமை மட்டக்களபினூடான என் பந்தத்தை உறவு ரீதியாக உறுதிப் படுத்தியது.
1991ல் நான் திருகோணமலை மேற்கு தமிழ் வித்தியாலைய பிரதி அதிபராக இருந்தேன் அப்போது மாகாண மட்ட தமிழ்தின போட்டிக்காக வந்த போது 1978புயலின் அழிவிலிருந்து மீண்டு மீண்டும் தன்னை தகவமைத்துக் கொண்ட மட்டக்ககப்பு அழிந்து கிடந்த அவலம் 1990ல் யுத்தத்தின் கோரம் திண்று துப்பியிருந்தது என் மனம் துணுக்குற்று அழுத நாட்கள் அவை.தமிழ் தின போட்டியில் இசைநாடகத்துறையில் முதல் பரிசைப் பெற்றோம்.பின்னர் அந்த நாடகம் அகில இலங்கை மட்டத்திலும் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத் தக்கது.அந்த நாடகத்தை நானே எழுதி இயக்கியிருந்தேன்.
கூத்தும் இசையும் கும்மியும் வசந்தனும் பறைமேளமும் சொர்னாளியும் சடங்கும் கண்ணகை அம்மனும் நம்மை களி கொள்ள வைக்கும் தருணங்கள்

பாலசுகுமார்

கிராமம் எங்கும் வீசிய அக்கினிச் சுவாலை வில்லுப்பாட்டு வீரசிங்கத்தார்

கிராமம் எங்கும் வீசிய அக்கினிச் சுவாலை
வில்லுப்பாட்டு வீரசிங்கத்தார்
---------------------------------------------------
குடத்துள் விளக்கு, குன்றின் மேலிட்ட தீபம் என இரு சொற்றொடர் தமிழில் உண்டு.
குடத்துள் விளக்கு என்பதன் அர்த்தம் குடத்துக்குள் மற்றவர்க்குத் தெரியாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்கு என்பதாகும்.

குன்றின்மேலிட்ட தீபம் என்பது மலைக்குமேலிருந்து அனைவரும் காண ஒளி வீசும் விளக்காகும்
.ஒன்றை விளக்கு என்பர்
மற்றதைத் தீபம் என்பர் ,
இந்தச் சொற் பிரயோகத்தைக்கவனிக்க வேண்டும்
விளக்கு எனும் சொல் தீபம் என்பதைவிடக் குணாம்சத்தில் சற்றுக் குறைவுடையதாயினும் இரண்டிலும் காணப்படுவது நெருப்பு,அது சார்ந்த ஒளி எனும் பொதுப்பண்பே
குடத்துள் விளக்காக இருந்து மறைந்து விடும் கலைஞர்களுமுண்டு
.
குன்றின் மேல் தீபம் என ஒளிர் விடும் கலைஞர்களுமுண்டு
கொட்டியாரப்பற்றில் உதித்து அங்கு புகழோடு வாழ்ந்த வீரசிங்கத்தை நாம் இதற்குள் எதற்குள் அடக்கலாம்?
விளக்கா?
தீபமா?
அவரது வாலாயமான துறை அவரைப் பிரபல்யப்படுத்திய துறை வில்லுப்பாட்டுத்தான்
,அவரது சிறப்பான வில்லுபாட்டிற்கு அவரது இனிமையான குரல் திறனும்,நடிப்புத் திறனும் பாட்டுக்கட்டும் திறனும் உறுதுணையாக இருந்துள்ளன
நான் அவரது வில்லுப்பாட்டினைக் கேட்டதில்லை.
ஆனால் பால சுகுமார் அவர் திறனை என்னிடம் வெகுவாகச் சிலாகிப்பார்
அவரது வில்லுப்பாட்டில் மக்கள் கிறங்கிப்போய் இருப்பர்களாம்
பால சுகுமாரின் மகள் அனாமிகாவின் நினைவு நாள் ஒன்றில் வீரசிங்கம் தானே ஒரு பாட்டுக்கட்டி அதற்குத் தானே இசையமைத்து உடனே பாடினார்’
அவர் திறனை நேரடியாகத் தரிசித்த கணங்கள் அவை
சிறப்பான சொற்கள்,
கணீர் என்ற குரல் வளம்
பாவம்,அசைவு கமகம் நிறைந்த இசை
உள்ளத்து உணர்ச்சிகளை அப்படியே காட்டும் அவரது முகபாவம்
அனைத்தும் அப்பாடலைப் பாடும்போது தெரிந்தன
அவர் குரல் நடித்தது
அவர் வில்லுப்பாட்டு எத்தனை சிறப்பாக இருந்திருக்கும் என்பதை பதச் சோறாகக் காட்டிய நிகழ்ச்சி அது
அவர் ஊரில் ஒரு வைத்தியர்
அத்தோடு ஒரு மந்திரவாதி,
ஊர்க்கோவில் பூசாரியார்.
தெய்வங்களுக்குரிய கிராமிய மெட்டில் அமைந்த அம்மானை,கும்மி பாடல்களை அழகாகப்பாடும் ஓர் இசைகலைஞர்
இத்தனைக்கும் மேலால் .ஒரு மேடை நாடக நடிகர்
பூசாரியார் குரல் வளமும்,நடிப்புத் திறனும் கொண்டவராக இருந்து விட்டால் பூசாரித்தனம் மேலும் சுடர் வீட்டு பிரகாசிக்கும்.
மந்திர உச்சாடனங்களைத் தெளிவாகச் சொல்லி உருவேற்றும் பூசாரிகள் மீது தெய்வம் ஏறி உருக்கொண்டு ஆடுவோருக்குப் பெரு விருப்பு ஏற்படும்,மக்களிடையே அவருக்கு மிகுந்த மரியாதையும் இருக்கும்
தெய்வம் ஏறி ஆடுவோரிடமும் மக்களிடமும் பெரு மதிப்பும் மரியாதையும் பெற அவரிடம் காணப்பட்ட இத்திறன்களே காரணமாகும்
வீரசிங்கத்தாருக்கும்
பூசாரித்தனமும்
குரலும் குடும்பமுதுசம்
அவரது தந்தையாரும் ஓர் பூசாரியே அண்ணனாரும்
ஓர் பூசாரியே.
தன் இளம் வயதிலிருந்தே அவர்கள் அருகிலிருந்து இக்கிரியைகளைப் பார்த்து வளர்ந்தவர் விஸ்வலிங்கம் என அறிகிறோம்,
கிராமக் கோவில்களில் மடை வைத்தல் என்பது முக்கியமான ஒருகிரியை\
.மடை வைக்கும் முறை பல வகைப்படும்.
வெற்றிலை,கமுகம் பாளை,வாழைப்பழம்,வேப்பிலை பலவித பல வித பூக்கள் பொங்கல் கொண்டு அமைக்கப்படும் இம்மடைகள் மடை அமைப்போரின் திறனுக்கும் கற்பனைக்கும் ஏற்ப அலங்காரமாக அமையும்.
மடை கிராமக் கோவில்களின் ஓர் அடையாளம்
ஒரு வகையில் இது அடுக்குச் சாத்துதலுக்கு நிகரானது
.
ப்ல்வேறு
பூக்களையும்
இலைகளையும்
சேலைகளையும் இணைத்து அம்மன் முகக்களைக்குஅல்லது தெய்வச் சிலைகளுக்கு அடுக்குச் சாத்துவர் பூசாரிமர்
இது பெரும் கோவிகளில் சாத்துப்படி எனவும்
வழங்கப்படும்,அங்கு இதனைச் செய்பவர்கள் அங்கு பூசை புரியும் பிராமணர்களே
இது அவர் அவரவர் அனுபவத்தையும் கற்பனையும் பொறுத்துள்ளது
வீரசிங்கத்தார் மடை வைத்தலில் ஒரு தேர்ச்சி பெற்றவராகத் திகழந்தார் என அறிகிறோம் அவர் வைக்கும் மடைகள் தெய்வம் ஏறி ஆடுவோரைக் குளிர வைக்கும், பக்தர்களின் கண்களை விரிய வைக்கும் .
குலவித்தை கல்லாமல் பாகம் படும் என்பார்கள்.
சிறு வயதிலிருந்தே தந்தை அண்ணன் வைத்த மடைகளைப்பார்த்து வளர்ந்த இவர் அவர்களையும் விடச் சிறப்பான மடைகள் வைத்தார் என அறிகிறோம் அவர் வைக்கும் காத்தவராயர் மடை வீரபாகு மடை என்பன முக்கியமும் பிரசித்தமும் வாய்ந்தவை.
இவற்றை அழகாகவும் சிறப்பாகவும் செய்யக்கூடிய ஒரே ஒரு பூசாரி என்ற பெயரையும் அவர் கிராமத்தில் பெற்றிருந்தார்
வீரசிங்கத்தாரின் இரத்தம் நாடி நரம்பு சதைகள் எல்லாம் இந்த மந்திரம் கிரியைகள் மடை வைத்தல் என்பன ஊறிக்கிடந்தன
,
வீடுகள் தோறும் நடக்கின்ற கும்பம் வைத்தல்,பத்தினிஅம்மன் வேள்வி,, வீரபத்திர வேள்வி மற்றும் கிராமத்தின் வீடுகள் தோறும் நடக்கின்ற கரையல் படையல் ஆகியவற்றில் ஊரவரின் பெரு நம்பிக்கைக்கும் அபிமானத்திற்குமுரியவராக இருந்தார்
கிராமத்து நாடக மன்றங்களுக்குக் கிரமத்தில் ஓர் தனி மவுசு உண்டு
,கிராமத்து நாடகங்களில் புகழ்பூத்த ந்டிகனாக வலம் வந்தார் என அறிகிறோம்,
இவரது பாட்டுத் திறனும் நடிப்புத் திறனும் கற்பனைத்திறனும் நல்லதோர் ந்டிகனாக வர இவருக்கு உதவின
வில்லிசையே இவரின் அடையாளமாயிற்று
வில்லிசை வீரசிங்கம் என்ச்ப் பிரபல்லியம் பெற்றார்
இத்திறமையினால் பட்டங்கள் பலவும் பெற்றார்
.வில்லுப்பாட்டில்
தமிழுணர்வுக் கருத்துக்கள்,
சமூக முன்னேற்றக் கருத்துக்கள்
சீர் திருத்தக் கருத்துக்கள் என்பனவற்றை பாடி அவற்றை மக்கள் மத்தியில் விதைத்து ஒரு சமூக நலனாட்டக் கலைஞராகப் பிரகாசித்தார்
அப்பிரகாசம் அண்மையில் அடங்கி விட்டது
வீரசிங்கத்தார் குடத்துள் விளக்கா?
குன்றின் மேலிட்ட தீபமா?
அக்கினிக்குஞ்சின் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ? எனக் கேட்டான் பாரதி
வீரசிங்கத்தார் கிராமத்தில் வாழ்ந்த ஒரு அக்கினிக் குஞ்சு
,அதன் சுவாலை கிராமம் ந்கரம் எங்கு வீசியது
நாம் அவரைக் கிராமம் எனும் குன்றின்மேலிட்ட தீபம் என அழைக்கலாம்
மௌனகுரு