Thursday 19 August 2010

கே.எஸ். சிவகுமாரன்

பக்தி எழுத்துக்களின் தொகுப்பே ""சொன்னாற்போல 01 என்ற நூலாகும். யாம் பெற்ற
இன்பம் இவ்வையகம் பெறுக என்ற மானுடக் கரிசனையோடு இலக்கிய ஊழியம் செய்யும்
கே.எஸ். சிவகுமாரன் இந்நூலாசிரியர் ஆவார். தமிழ், ஆங்கில வாசகர்களுக்கு நன்கு
அறிமுகமாகி இருக்கும் இவர் தான் வாசித்த சிறுகதை, நாவல் கட்டுரை, கவிதை
ஆகியவற்றையும் பார்த்து இரசித்த நாடகம், சினிமா என்பவற்றையும் ஊன்றி ஆராய்ந்து
அச்சு இலத்திரன் ஊடகங்களால் தனக்கென ஒதுக்கப்பட்ட பத்திகளிலும், தனிக்
கட்டுரைகளிலும் பரம்பல் செய்யும் பக்குவர். சொல்லப் போனால் அரை
நூற்றாண்டுக்கும் கூடுதலாகத் தொடரும் இவரது இந்த இலக்கிய ஊழியம், கலை
இலக்கியவாதிகளுக்கு காத்திரமான ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர் தம்
ஆக்கங்களுக்கும் விசாலமான பரம்பலையும் ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் தமது
எழுத்துருக்களை முதல் கட்டமாக அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலமாக வாசகரைச்
சென்றடையச் செய்வது சகலரும் அறிந்ததே.

சில சந்தர்ப்பங்களில் இரண்டாவது முறையாக அதே ஆக்கங்கள் நூல்களாக வாசகர்
பார்வைக்கு வருவதுமுண்டு. ""புத்தகப் பூச்சி' எனச் சுட்டத்தக்க கே.எஸ்.
சிவகுமாரன் வெளியீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது தன் சொந்தத் தேடலாகவோ
இந்நூல்களைப் பெற்று ஆக்கங்களை படித்துத் தன் கண்ணோட்டத்தைப்
பிரசித்தப்படுத்துவதுண்டு. இம்மார்க்கமாக படைப்பாளிக்கும் படைப்புக்கும்
மூன்றாவது வாசகர் பார்வை அமையும். அடுத்த கட்டமானது கே.எஸ். சிவகுமாரன் தன்
கண்ணோட்டத்தை அடக்கிய தனது எழுத்துருக்களை தொகுப்பு நூலாக்கல். இது நான்காம்
நிலை.

இவ்வகையில் நூலொன்று கே.எஸ். சிவகுமாரனின் பார்வைக்கு எட்டும்போது இரு மேலதிக
ஆதாயங்கள். படைப்பாளிக்கும் படைப்புக்கும் சுவறும் இதே ஆதாயத்தை ""சொன்னாற்போல
01'' என்ற நூலில் இடம் பெறும் படைப்புகளும் கலை, இலக்கியவாதிகளும் பெறுவர்.
இந்நூலில் திரட்டப்பட்டிருக்கும் எழுத்துருக்கள் தினக்குரல் வார வெளியீட்டில்
வெளியான ""சொன்னாற்போல'' என்ற பத்தியில் எழுதப்பட்டவை.

நூலாசிரியரின் விளக்கவுரையில் பத்தி எழுத்துகளின் வரைவிலக்கணத்தை ""இந்த
எழுத்து முறை விரிவான ஆய்வாகவோ திறனாய்வாகவோ, விரிவான கட்டுரையாகவோ அமைய
மாட்டாது. ஆயினும் திறனாய்வு சார்ந்த மதிப்பீடுகளாகவும் தகவல் களஞ்சியமாகவும்
விளங்கக்கூடியவை'' எனச் சுட்டப்பட்டிருக்கிறது. இக்களஞ்சியத்துள் காணப்படும்
அரிதான சில தகவல்கள் அவைகளின் பெறுமானம் கருதி கீழே தரப்பட்டிருக்கின்றன.
தமிழாக்கம் பெற்ற பிரான்சிய இலக்கியங்களின் சிறு பட்டியலொன்று
தரப்பட்டிருக்கின்றது. பிரான்சிய மொழியாக்கப் பெற்ற தமிழ் நூல்களையும் அறிதல்
செய்ய முடிகின்றது. யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த புகலிட எழுத்தாளர் க.
கலாமோகன் பற்றிக் கூறுகையில், ""பிரான்ஸ் நாட்டு தமிழ் இலக்கியத்துக்கு ஆரம்
சேர்ப்பது மாத்திரமன்றி பிரெஞ்சு மொழியிலும் கவிதைகளை எழுதிவருவது
பாராட்டக்குரியதே'' (பக் 28) என ஈழ நாட்டவரை சிலாகித்திருக்கிறார் நூலாசிரியர்.

புனை கதைப் படைப்பில் தமிழகத்தாரையே வியக்க வைக்கும் ஈழத்து எழுத்தாளர்
சாந்தன், ஆங்கில எழுத்தாளராகவும் சாதனை புரிந்திருப்பது தமிழ் வாசகர் சிலருக்கு
புதினமாக இருக்கும். ஆங்கிலத்தில் சாந்தன் வெளியிட்டிருக்கும் சிறுகதை
தொகுப்பினை ""IN THEIR OWN WORLD"" என்ற நூலுக்கு இலங்கை கலைகழகத்தின் பரிசு
கிடைத்துள்ளது. இப்பரிசைச் சாந்தனோடு ஜீன் அரசநாயகம் என்ற ஆங்கிலப் பெண்
எழுத்தாளர் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கிலமொழி தேர்ச்சியுள்ள
ஏனைய படைப்பாற்றலாளரும் சாந்தன் வழியைப் பின்பற்றுவது தமிழினத்துக்குச்
செய்யும் பேருதவியாக இருக்கும். எமது பிரச்சினைகள், வேற்றினங்களையும் சென்றடைய
உதவுவதோடு நோபல் பரிசு, புக்கேர்ஸ் பரிசு போன்றவைகளின் கவனத்தையும் ஈழத்து
இலக்கியம் சுகிக்கும். "சாதி வெறியாட்டம் இன்னும் சில இடங்களில் இருந்து வருவதை
மறைக்க முடியாது' என இன்றைய ஈழத் தமிழ்ச்சமூகத்தை நோக்கும், நூலாசிரியர் சாதி
வெறி இருப்பதை வெளிப்படுத்துகிறார். (பக் 68) ஆகும். சாதி ஒழிப்பின்
முன்னோடியான இந்திய நாட்டவரான அம்பேத்கர் குறித்து சில வரிகளைப் பதித்து இன்றைய
மக்கள் இலக்கிய அபிமானிகளுக்கு யார் இந்த அம்பேத்கார் என்ற அறிதலைப்
புகட்டுகிறார்.

எழுத்தாளர் கனகசபை தேவகடாட்சம் தனது புத்தகங்களின் விற்பனை மூலமாகக் கிடைக்கும்
நிதியைத் தர்ம நிறுவனங்களுக்கு அன்பளிப்புச் செய்வதாகக் " குருதி மண்' என்ற
அவரது சிறுகதைத் தொகுதி குறித்த எழுத்துருவில் அறிய முடிகின்றது. ஆக்கரியந்தான்
34 ஆண்டுகளோடு தனது பூவுலகப் பயணத்தை முடித்துக் கொண்ட தீவக எழுத்தாளர்
அங்கையன் கைலாச நாதன் குறித்துக் கருத்துரைக்கையில் '' அருமையான எழுத்தாளர்,
வயதுக்கு மீறிய அனுபவமும், ஆற்றலும் கொண்டு விளங்கியவர். பத்திரிகை, வானொலி
ஆகிய இரு ஊடகங்களிலும், புதுப்புனைவாக அமையும் விதத்தில் பங்களிபுகள் செய்தவர்
(பக் 51) என்கிறார். நூலாசிரியர்.

பேராசிரியர் தில்லைநாதன் நாடக வல்லமை பேசப்படாத விடயம்' தகுதி என்ற நாடகத்தை
எழுதி நெறிப்படுத்தியிருப்பது இந்நூலின் மூலமாக தெரியவருகின்றது.

இப்பத்தி எழுத்துக்கு ஊட்டமாகச் சில தமிழ் அபிமானிகளின் கடித மூலமான
எழுத்துக்களும் அமைந்திருக்கின்றன. இதற்கு ஆதாரம் தெஹிவளையைச் சேர்ந்த
சா.ஆ.தருமரத்தினம் என்பவரது தகவல் குறிப்பு, அதன் காத்திரத் தன்மையை உள்வாங்கி
நூலாசிரியர் இந்நூலிலும் அக்குறிப்பை சேர்த்துள்ளார். தமிழுலகால் நன்கு
அறியப்பட்ட ராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை, சின்னப்பா கிங்ஸ்பெரி, வண.
பிரான்சிஸ் கிங்ஸ்பெரி ஆகியோர் சம்பந்தப்படும் தகவல் குறிப்புகள் சா. ஆ. தவின்
குறிப்பில் படிக்கக் கிடைக்கின்றன. இவர்கள் மூவரும் தொப்புள் கொடி உறவினர்
தாமோதரம், சின்னப்பா கிங்ஸ் பெரியின் மூத்த சகோதரர். வண. பிரான்சிஸ் கிங்ஸ்பெரி
தாமோதரரின் மைந்தர், சிவை தாமோதரம்பிள்ளை நூல் தேடலர் என்பதைத் தமிழுலகுக்கு
சொல்லத்தேவையில்லை தெரியும். தொல்காப்பியம் பொருளதிகாரம் இல்லவே இல்லையென
தமிழுலகம் கைவிரித்த வேளை தன் ஓய்வற்ற தேடலால் அதை கண்டடைந்து நூலாக்கித்
தந்தவர் தாமோதரர். சின்னப்பா கிங்ஸ் பெரி ஈழத்தின் முதல் நாவலைப் படைத்தவரென
ஆய்வறிஞர்கள் செப்புகின்றனர். கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில்
தமிழ்ச்சங்கத்தை நிறுவிய முன்னோடி தான் வண பிரான்சிஸ் பெரி அடிகளார். இப்படியாக
இந்நூலுக்குள் நுழைந்து இன்னும் பல பெறுமதியான தகவல்களைப் பெறலாம்.

இந்நூல் மீரா பதிப்பகத்தின் 74 ஆவது வெளியீடு வடிவமைப்பில் அதீத கவனமெடுத்துப்
பொருத்தமான அட்டைப்படத்தோடு வெளியிட்டிருக்கின்றனர். ஈழத்தின் மற்றுளொரு
முன்னணித் திறனாய்வாளரான ஆ. இரத்தின வேலோன் தனது பதிப்புரையில் கே.எஸ்.
சிவகுமாரனின் திறனாய்வுக்குட்படாத புனைகதை இலக்கியங்களே ஈழத்தில் இல்லை
என்னுமளவிற்கு அறுபதுகள் முதல் இன்றுவரை வெளிவந்த நூல்களில் கணிசமானவற்றைத் தன்
கவனத்துக்குட்படுத்தியிருக்கும் ஈழத்தின் ஒரேயொரு திறனாய்வாளர் கே. எஸ்.
சிவகுமாரனாகத்தான் இருக்க முடியும் என்பதில் இருகருத்து இருக்க முடியாது' என
இந்நூலாசிரியரின் நூல் திறனாய்வு இருப்பின் முதிர்ச்சியைக் கவனத்துக்குகொண்டு
வந்துள்ளார்.

ஆகவே, இந்நூலைத் தகவல் களஞ்சியமென நிறுவும் நூலாசிரியரின் கூற்றை
அங்கீகரிக்கும் அதேவேளை படைப்புக்கள், நூல்கள் குறித்து அவர் கருத்து
பரிவர்த்தனை செய்யும் போது அவற்றுள்ளிலிருக்கும் இடைக்கிடை மின்னலாகத்
தெறிக்கும் கருத்துக்கள் வாசகர்களுக்கு நல்ல சிந்தனைகளை ஊட்டத் தக்கவை என்ற
உண்மையைத் தெரியப்படுத்தியே ஆக வேண்டியிருக்கின்ற

2 comments:

  1. Through the Facebook my friend Thevaraa Mukunthan linked your website. I was delighted to read your comments about me and my book.My sincere thanks to you. I didn't know the existence of your website earlier. Kindly give more information about the editor and who wrote that piece on me.

    Pleae write to me either by email or by post or telephone me.Thanks. Details: 21 Murugan Place, Havelock Road, Colombo 06. Telephone: 2587617 or077 039 2234. email:siva1@hotmail.com.
    Are you also on the Facebook?
    Kind Regards
    K S Sivakumaran

    ReplyDelete
  2. DEAR FRIENDS OF KILAKU MUNN:
    many thanks for your comments on my book and me. please let me know how I can contact you. my email address is: ks.sivakumaran@yahoo.com
    kind Regards

    ReplyDelete