Thursday 19 August 2010

எட்டாவதுஸ்வரம்


முரட்டுத் தனமான அந்தத் தரைவிரிப்பில் அவன் அமர்ந்திருந்தான். தபேலா வாத்தியத்தின் மீது விதவிதமான தாளக்கட்டுக்களை முடிவற்ற பரிணாம சுருதியோடு அவனது கம்பீரமான நெடிய விரல்கள் உருவாக்கிக் கொண்டிருந்தன. அணுபிசகாத லய நிர்ணயத்தோடு சதுஸ்ரகதியில் தபேலாவில் நர்த்தனமாடிய விரல்கள் அதேகால அளவுகளோடு திஸ்ர, கண்ட நடைகளிலும் சுதிபேதத்துடன் நர்த்தனமாடின.
அணுக்களசைந்து அங்கு ஒலியாய் இன்னிசையாய்ப் பிரவாகிக்க, அந்தப் பிரவாகத்தினுள் மூழ்கித் தான் பாடுவதையும் மறந்தவளாய் வயித்திருந்தாள் கங்கா. புல்லாங்குழலின் உச்சஸ்தாயியில் அவளது சாஸ்திரிய சங்கீதம் நீக்கமற வியாபித்திருந்தது. பாடல்கள் முடிவுற்றதும், பீறிடும் ஒளிச்சிதறல்கள் நிறைந்து ஸ்படிகமான நீர்வெள்ளத்தினடியில் நின்று மெதுவாக மிதப்பவர்களைப் போலுணந்தார்கள் ரசிகர்கள். அவர்களறியாதவொடு பிராணாயாமம் நிகழ்ந்து ஆத்மானுபூதி வெளிப்பட்டிருந்தது அங்கு.
எதிர்பார்ப்புடன் அவள் அவனைப் பார்த்த போது சிந்தனையின் பரவசத்திலவன் கண்கள் மிதக்க, அவளுக்கோ அங்கு வார்த்தைகள் தேவையற்றிருந்தன. எவ்வளவு அழகாயிருக்கிறான் மகன். மொசைத் தரையில் விரிக்கப்பட்ட மரகதக் கம்பளத்தின் மேலிருந்து இசைக்க வேண்டிய இவனது தலைவிதியை எண்ணியவளாள் வருத்தப்படத்தான் முடிந்தது. அவளது தீவிர சிந்தனையைத் சிதைப்பதற்கென்றே வந்தவன் போலந்த மூன்றாமவன் நீண்டதொரு கைதட்டலுடன் அங்கு நுழைந்தான்.
‘அருமை... அருமை அருமையிலும் அருமை கங்கா. என்ன சொல்’வதென்றே தெரியவில்லையெனக்கு. இன்றைய தேதியில் உனக்கிணையாக இந்த நாட்டில் பாடக்கூடியவர் எவருமில்லையென்பது என் கணிப்பு. ஆனாலிந்த அபூர்வமான குரலை வைத்துக் கொண்டு நீ என்னதான் செய்யப் போகிறாயோ என்பதுதான் என் கவலை. எங்கோ இருக்க வேண்டியவர்கள் நீங்கள்” என்ற அவனது குரலில் தொனித்த ஆதங்கம் முதலில் அவளைத் தொட்டது.
“ஏன் நானென் குரலை சரியாகப் பயன்படுத்தவில்லையென்கிறாயா?” என்றானவன்.
“உண்மையைச் சொல்வதென்றால்... இல்லையென்றுதான் சொல்வேன். பிள்ளைகளுக்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுத்து உள்ளூர் கச்சேரிகள் செய்து என்னதான் சாதிக்கப் போகிறாய்? உலகத்தரமான குரலுக்குச் சொந்தக்காரியான ஒருத்திக்கு வாழ ஒழுங்கான வீடொன்று கூட இல்லையென்பது வேதனையான விடயம்தானே. உனது திறமைக்கேற்ற கெளரவத்தை வழங்காதது கூட சுத்த அயோக்கியத் தனமில்லாயா....!” எனப் பீடிகையோடவன் தொடர்ந்தான்.
நெற்றிப் பொட்டில் அறைந்தது போன்றிருந்தன அவளுக்கு அவன் வார்த்தைகள். இதுவரை அவள் பற்றி எவருமே சொல்லியிராத அந்த விமர்சனம் அவளைக் கிறங்கடித்தது. இலேசாக வானத்திலெழுந்து பறப்பது போன்ற உணர்விலும் பிரமையிலும் அவள். இவையனைத்தையும் விட, அவனது வார்த்தைகள் அவளது ஆன்மாவைத் தொட்டதென்பதே பொருந்தும்.
அதற்கான நானென்ன செய்ய வேண்டும் என்கிறான் அவள்.
“வெறொன்றுமில்லை. உன்பாடும் முறையைக் கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டும் அவ்வளவே”
“புரியவில்லை”
“உலகெங்கும் இசை வியாபாரஞ்செய்யும் நண்பனொருவனை எனக்குத் தெரியும். அவன் மூலமாக உன்னைப் பிரபல்யப்படுத்த விரும்புகிறேன். மேற்கத்தையப் பாணிக்கேற்கப நீ சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். பெரிதாக வேறொன்றுமில்லை”
தபேலாவை நகர்த்திவிட்டு சிம்மம் போல் எழுந்தான் மகன். அவனது பார்வையில் அனல் தெறித்தது. அந்த மூன்றாமவனை அவன் பார்த்த பார்வையிருக்கிறதே.... அதை வார்த்தைகளால் விளக்கிட முடியாது” உன்னைப் போல் எங்களையும் வியாபாரிகளென்றா எண்ணிக் கொண்டாய். எங்களிசை.... எவ்வித விட்டுக்கொடுப்புக்கோ, மேற்கத்திய அடி பணிதலுக்கோ உட்படாத உன்னத சங்கீதம் அதை முதலில் புரிந்துகொள்” என்றாள். மூன்றாவனை முகத்துக்கு நேர் எதிர்கொண்டு.
கங்கா முதலில் இதனை எதிர்பார்க்கவேயில்லை. மகனை அமைதியடையச் சொல்கிறாள். என்னதானவன் சொல்லுகிறானென்று கேட்போமே என்கிறாள் மகனிடம் மன்னிக்கும் தொனியில். மூவருள்ளும் இனம்புரியாதவொரு மெளன இடைவெளி மெல்லவிரவுகிறது. இந்தச் சம்பாஷணையை இத்தோடு நிறுத்துவதா இல்லை தொடர்வதா என்பதற்குக் கிடைத்த அவகாசமாக அந்த மெளனம் நிலவியது. தேவையற்ற அந்த மெளனத்தை அவளே கலைக்கிறாள்.
“சரி... என்ன வகையான விட்டுக் கொடுப்புகளை என்னிடம் எதிர்பார்க்கிறாய்” என்ற கங்காவின் கேள்விக்குப் பதிலளிக்குமுன் அம்மனிதன் மகனைப் பார்க்கிறான். அவனோ, மூவருக்குமிடையில் இடைவெளியொன்றை ஏற்படுத்திக் கொண்டு வேறொருவனாய்த் தனித்து நிற்கின்றான்.
கங்கா! நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன். டிஸ்கொதே, றொக்கிசை கலந்த கீழ்நாட்டுச் சங்கீதம் போன்றவைதான் இன்று வெளிநாடுகளில் பிரபலம். அவர்களுக்குப் புதிய புதிய இசைதேவை. இதை நீயும் அறிந்திருப்பாய். ஏன்... கேட்டு ரசித்தும் இருப்பாய். இல்லையா?” என்றானந்த மூன்றாமவன்.
“கேட்கவே வருத்தமாயிருக்கிறது. மகன்’ சொல்வதுதான் சரியெனப்படுகிறது எனக்கு” என்றாள். அவள் மகனின் பக்கம் திரும்பி நின்றவாறு. ஆனாலந்த மூன்றாமவனோ விடுவதாயில்லை.
“நீங்களிருவரும் என்னதான் பேசுகிறோமென்று தெரிந்துதான் பேசுகின்aர்களா? இசை பொதுவானது. அது நாட்டுக்கு நாடு வேறு படலாம். அந்த ஏழுஸ்வரங்களும் இசையென்கிற மகத்தான கோர்வைக்குள் மனிதர்களை இணைத்து வைத்திருக்குமந்த மகத்தான அதிசயத்தையின்னும் புரிந்து கொள்ளவில்லை நீங்களென்பதே உண்மை.” என்றவன் உணர்ச்சிமேலீட்டில் சொன்ன போது கங்கா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“சாஸ்திரிய இசை பயின்றவர்கள் அதை மட்டும்தான் பாட வேண்டுமென்பதில்லையே. எத்தனையோ வித்துவான்கள் மேற்கத்தையப் பாணியில் பரீட்சார்த்தமாய் பாடியிருக்கிறார்களே. தெரியாதா உனக்கு. ஏன்... அன்றைய நாட்களில் எம். எல். வி. கூட திரையிசையில் அத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ‘ஐயா நரிக்கொம்பிருக்கு வாங்கல்லியோ...” என்று பாடவில்லையா? அந்தப் பாடலை பாடியதால் எம். எல். வியின் இசையென்ன அழிந்தா போய்ற்று? அதற்கப்பால் சித்தார் இசை மேதை பண்டிற் ரவிசங்கர் ‘பீட்டில்ஸ்’ இசையுடன் இரண்டறக் கலக்கவில்லையா? இதனையும் ஒருவகை இசையென்று நீங்களேன் ஏற்றுக்கொள்ளக் கூடாது...” என்று சொல்லி நிறுத்திவிட்டு அவனைக் கூர்ந்து நோக்கி “இவ்விடயத்தில் நீ பிடிவாதமாயிருந்தால் நிறைய இழக்க வேண்டிவரும். ஆம்... நிறை... ய” என்றான் ஒருவித கண்டிப்பு கலந்த குரலில்.
“புரியவில்லை.” என்றாள் கங்கா அப்பாவியாய்.
“எனது ஐரோப்பிய நண்பனொருவன் தயாரிக்கும் இசையல்பம் உனக்கு நிறைய வருமானத்தை அள்ளித் தரும். ஏன்... லட்சக்கணக்காக” என்று கூறிவிட்டு அவனது முகத்தில் எதையோ தேடுகிறான். அதில் சலனரேகைகள் ஸ்தூலமாகப் படர்வது தெளிவாகத் தெரிந்தது அவனுக்கு. “ஏன் வீou சீay லீvலீr gலீt away any awarனீ என்கிறான் கிசு கிசுத்து ஆங்கிலத்தில். “ஒரு காலத்தில் ஹரேராமா ஹரே கிருஷ்ணா பாடல்கள் அமெரிக்காவில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட நீ அறிந்தவள்தானே. இல்லையா?”
அவன் சொல்வதொன்றையும் மறுக்க முடியாதவதாய். அவனது சாமர்த்தியமான காய் நகர்த்தல்கள் அவளுள் வியாபித்துக் சர்ப்பவடிவில் எழுந்தாடிக் கொண்டிருந்தன. மதிப்புடன் போற்றிப் பேணப்பட்டவையெல்லாம் ஒரு கணத்தில் ஆர்த்தெழந்து புதிய புதிய தளங்களில் இயங்கத் தொடங்குவதை உணர்ந்தாள்.
“அதற்கு நானென்ன செய்ய வேண்டும். சொல்” அவளது குரலில் எதிர்பார்ப்புகள் நெளிந்தன. அநேகமாக அவள் தனது பிடிக்குள் விழுவாளென்பது மூன்றாமவனுக்குப் புரிந்தது.
“ஒரு சின்ன’அட்ஜஸ்ற்மென்ற்’ உனது குரலைச் சிறிது ‘இம்புறொவைஸ்’ செய்து பாட வேண்டும். அவ்வளவே”
“இம்ப்புறோவைசேஷனென்பது குரலை மாற்றிப் பாடுவது... அல்லது பொய்க்குரலில் பாடுவதென்றுதானே அர்த்தம்”
இதனைக் கேட்டதும் மூன்றாமவனின் தலை ஆட்சேபனையில் அங்குமிங்குமாடியாது. அதில் உலகிலுள்ள அத்தனை ‘இல்லை’ களும் பொதிந்திருந்தன.
“கங்கா... நீ அதை பொய்க் குரலென்கிறாய்.. எல்லாமே உனது குரலில்தான் வரும். பயப்படாதே”
அவளுக்கோ நம்பிக்கையின்னும் ஏற்பட்டதாய்க் தெரியவில்லை. தனது குரலில் அளவிட முடியாத நம்பிக்கை கொண்ட அவள் சட்டென அவனைப் பார்த்துக் கேட்டாள். அவனது இம்ப்புரொவைசேஷ‘ னுக்கு உதாரணங்கள். தர முடியுமாவென்று. அவனோ தோள்களைக் குலுக்கிவிட்டு, ‘ம்... தாராளமாக, ‘முருகா’ என்ற சொல்லை முர்கா என்று பாடவேண்டும்” பாடிக் காட்டுகிறான். ‘முருகாவில் வரும் ‘கா’ வைப்பாடும் போது, நாக்கு மேலண்டத்தில் தொட்டவாறு ஆங்கில மி என்கிற உச்சரிப்பைத் தரவேண்டும்...”
கங்கா தலையை ஒருபக்கம் சரித்தவாறு ‘வேறு’ என்கிறாள்.
“அரோ ஹராவை’ அரஹாரா என்று பாட வேண்டும். சுலோகங்களையும் அவ்வாறே என்றவன் தீவிரத்துடன். சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது பார்வை மகன் பக்கந் திரும்பியது. அது அவனது அபிப் பிராயத்தையறியும் முகக் குறிகளால் நிரம்பியிருந்தது. மகனோ, அவர்களுக்கும்.
தனக்கும் இடையேயிருந்த இடைவெளியை நிரந்தரமாக்க வேண்டி அறையைவிட்டு வெளியேறுகிறான். விறைப்பான அவனது முழு உடலின் அங்க அசைவுகளில் தொனித்திருந்தது அபிப்பிராயம் பேதம்.
அவளுக்குத் தெரியும் மகனை எந்த விதத்திலும் வழிக்குக் கொண்டுவர முடியாதென்று. சாஸ்திரிய சங்கீதத்தில் அவனுக்கிருக்கும் ஈடுபாடும் வாஞ்சையும் அளிவிட முடியாதவொன்றென அவளறிவாள் திரிசங்கு சொர்க்க நிலையிலிருந்து அவள் தன் பார்வையை மீண்டும் மூன்றாமவன் மீது பதிக்கிறாள்.
‘கங்கா’ உன் மகன் சிறியவன். அவனுக்கு இதெல்லாம் இப்போது புரியாது. நமது இசையில் பற்றுள்ளவனாய் அவளை நீ உருவாக்கியிருப்பது பெருமைக்குரியது தானென்றாலும், அது மட்டும் போதாது. கங்கா... திறமைமட்டும் ஒருவனுக்குக் களத்தைத் திறந்து விடுவதில்லை.
அதற்குமப்பால் சூட்சுமங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஏன்! பணம், செல்வாக்கு ஏதுமின்றிப் பிரபல்யமடையாது மூலையில் சுருண்டு கிடக்கும் உன்னையே எடுத்துக்கொள் உதாரணத்துக்கு. அனுபவ ரீதியாக இவைகளை உணரும் போது உன் மகன் உன்னை மட்டுமல்ல என்னையும் ஏற்றுக் கொள்வான்” என்று சொல்லி நிறுத்தினான்.
அந்நேரம் அவளது முகத்தில் படிந்திருந்த அவஸ்தையின் ரேகைகளும், மனப் போராட்டத்தின் சுவடுகளும் அந்த மூன்றாமவனைக் கூட கஷ்டத்தில் ஆழ்த்தின. அதற்குப் பின்னருமவன் அவளை நிர்ப்பந்திக்க முயலவில்லை. இருமன நிலையிலிருந்து தத்தளிக்கும் அவளுக்கு நிறையவே அவகாசம் தேவைப் படுகின்றதென்பதனையும் புரிந்து கொண்டவனாய் ‘கங்கா... நீ உடனே பதில் தரவேண்டுமென்பதுமில்லை.
நிறையவே அவகாசம் எடுத்துக்கொள். மேலும் மகனின் எதிர்காலத்தின் ஆதாரஸ்துதி நீ தான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள். கங்கா! இந்த உலகில் ஏழுவஸ் வரங்கள்தானுண்டு என இதுவரை எண்ணியிருந்த எனக்கு நீயென்னவோ எட்டாவது ஸ்வரமாகத்தான் தென்படுகிறாய்” என்று சொல்லிவிட்டு இன்னும் எதையோ அவளுக்குச் சொல்லி விட எத்தணிப்பவன் போல் யோசித்துவிட்டு நின்றவாறே அங்கிருந்து அகன்றான். தனிமையில், அவன் சொல்லிவிட்டுச் சென்றவைகளில் லயித்து நின்றாள் கங்கா.
மகனைச் சமாளித்துக் கொள்ளலாம். தனக்குக் கிடைக்கவிருக்கும் அனுபவங்களை வைத்து அவனால் புரியவைக்கலாம். ஆனாலவள் இந்த ஆக்கினை யிலிருந்து விடுபடும் மன எத்தனத்தின் விளிம்பில் நின்று தனக்குள் சுயதிருப்தி யடைய வேண்டுமே!
பிரமைகளின் கோர்வைகள் அவனை ஆட்கொள்ள, விலக்கப்பட்ட கனியின் முன் அன்று ஏவாள் நின்றதுபோல் கங்கா. மேற்கத்திய சங்கீதம் விலக்கப்பட்டகனியா? அதையுண்டால் தன் சங்கீதம் இறந்துவிடுமா...? அவள் முன் சர்ப்பமாய்ப்படமெடுத்து நின்ற கேள்வி இதுதான். சுடுமணலில் தகிக்கும் பூனையாய் மனம்.



சர்வதேச விருதுகள், இசை அல்பங்கள் என அவள் மனத்திரையில் வரிவடிவாய்ப் புதுப்புதுக் கனவுகளின் சிதறல்கள், அவளை ரகசியவாதைக்குள்ளாக்கிச் சிதறடிக்கவென்றே வந்தவன் போல் அந்த மூன்றாமவரின் வார்த்தைகள்... ஒரு நீண்ட மனப்போராட்டத்தின் பின், தாம்பூராவுடன் பாடிய அவளது ரகசிய மனது ‘கிற்றார்’ இசையுடன் பாடிப்பார்க்கிறது. எல்லாச்சுருதியும் ஒரே சுருகியாய், எல்லா லயமும் ஒரே லயமாய் நாதவெள்ளமென வந்தவளை மூழ்கடிக்கிறது.
ஏழுஸ்வரங்களுக்குமப்பால் உலகிலுள்ள அத்தனை இசைக் கோலங்களுக்குள்ளும் முக்குளிதது எழவேண்டும் போலிருக்கிறது அவளுக்கு.
பூவுலகின் சங்கீதங்களில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்கிற மாயைகளிலிருந்து விலகி, இசையின் ஆதாரத்தொனியின் அடிவேரை நோக்கிய அவளது அறிவு பூர்வமான பயணம் தொடங்குகிறது.
எட்டாவது ஸ்வரத்துக்குக் ‘கங்கா’ என அவள் மனது பெயரிட பேதமற்ற மூன்றாவது ஸ்வரமாக இசைவானில் அது

No comments:

Post a Comment