Monday 16 August 2010

பூ.ம.செல்லத்துரை:

பெயர்: பூபாலபிள்ளை மயன் செல்லத்துரை
புனைபெயர்கள்: வண்ணன், நளன், கண்ணா, மயன்
பிறந்த இடம்: பெரிய போரதீவு (05.06.1936)

படைப்பாற்றல்:கவிதை, இசைப்பாடல்கள், சிறுகதை, கட்டுரை, நாடகம்

படைப்புக்கள்:

    * தமிழனே கேள் - 1958
    * தமிழரும் தாத்தாவும் - 1962
    * இலங்கைத் தமிழ் வரலாறும் இன்றைய நிலையும் - 1999
    * இலங்கையில் விஸ்வகர்மா – 2000
    * சிங்களவர் பூர்வீகம்
    * இலங்கையில் சமாதானத் தேடல்

விருதுகள்:

    * சமூகஜோதி என்னும் விருது – பெரிய போரதீவு இளைஞர் இந்து கலாமன்றம்
    * கலைவேந்தன் பட்டம் - பெரிய போரதீவு பிரம்ம கலா ஆதீனம் - 1996
    * ஆச்சாரியா விருது – தினக்குரல் ஆசிரியர் திரு.சிவநேசச் செல்வர்

இவர் பற்றி:

    * இவர் 40 க்கும் மேற்பட்ட நாடகங்களைப் படைத்து நெறிப்படுத்தி நடித்துள்ளார். 1995 இல் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்று மாதோட்டம் என்னும் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். பல கவிதைகள், மெல்லிசைப் பாடல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள்  படைத்துள்ளார். இவரது படைப்புக்கள் தாயகம், நேர்வழி, சமநீதி, தேனாடு முதலிய மாத ஏடுகளில் வெளிவந்துள்ளன.

No comments:

Post a Comment