Wednesday 18 August 2010

மட்டக்களப்பு

மட்டக்களப்பு இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப் படுகின்றது. இதன் எல்லைகளாக திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகி



 புவியியல்

இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தினை கடல் எல்லையாகக் கொண்டமைந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பாகும். இது சராசரியாக கடல் மட்டத்தயுலிருந்து 5 மீட்டர் உயரமுடையதகும். மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில் இது மூன்று கடல்நீரேரிகளைக் கொண்டுள்ளதே. அவையாவன மட்டக்களப்பு வாவி, வாழைச்சேனை வாவி, பனிச்சங்கேணி (இல்லது வாகரை வாவி) வாவி போன்றவையாகும். இதில் மட்டக்களப்பு வாவியே மிக நீண்டது. இது 56 km நீளமும், 168 சதுர கிலோமீற்றர் பரப்பும் கொண்டது. வடக்கில் ஏறாவூர் வரையும் தெற்கில் கல்முனை வரையும் நீண்டுள்ளது[1]. இது சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் கொண்டமைந்த அழகிய கடநீரேரி அமைந்துள்ள்மையாகும்.
கடநீரேரிக்கு குறுக்காக சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் இணைக்கும் வண்ணம் பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பது நகருக்கு மேலும் அழகு சேர்க்கிறது.மட்டக்களப்பு நகரின் நகராட்சி மையமான புளியந்தீவு இவற்றுள் மிகப்பெரிய தீவாகும். கோட்டமுனை நிலப்பரப்பை கல்லடியுடன் இணைக்கும் கல்லடிப்பாலமானது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். லேடி மன்னிங் பாலம் (Lady manning Bridge )என அழைக்கப்படும் இப்பாலத்திலிருந்து முழுமதி தினங்களில் ஓர் இன்னிசையைக் கேட்கமுடியம். இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசை என நம்பப் படுகின்றது. இதனை இலக்கியங்களில் நீரரமகளீர் இசைக்கும் இசையென வருணிக்கின்றனர். இவ்விசையின் காரணமாக மட்டக்களப்பினை மீன்பாடும் தேன்நாடு என்று வருணிக்கின்றனர்.
மட்டக்களப்பானது இயற்கை எழில் கொண்ட கடற்கரைகளை கொண்டுள்ளது.பாசிக்குடா மற்றும் கல்குடா கடற்கரைகள் மிகவும் பிரபல்யமானவை .பாசிக்குடா கடற்கரை மட்டமான நீரினை உடையதும் முருகைக்கற்கள் நிறைந்ததும் நீந்துபவர்களுக்கு மிகவும் இதமானதுமாகும். கல்லடியிலுள்ள கடற்கரையும் மிகக்கூடியளவான மக்களை கவரும் ரம்யமான அமைப்புடையதாகும்.
மட்டக்களப்பின் காலநிலையானது பொதுவாக வெப்பம் கூடியதாக இருப்பினும் வேறுபட்ட பருவகாலங்களில் வெவ்வேறு மாற்றங்களை கொண்டதாக காணப்படுகிறது. மார்ச் முதல் மே வரையான காலப்பகுதி சராசரியாக 32 பாகை செல்சியஸ் அளவுடைய வெப்பநிலை கொண்டதாகவும்,நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதி கூடுதல் மழைவீழ்ச்சி கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில் சராசரியாக 15 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் 1400 மில்லிமீட்டர் அளவுடைய மழைவீழ்ச்சியும் காணப்படுகிறது.[2]

மாதம் ஜன பெப் மார்ச் ஏப் மே யூன் யூலை ஆக செப் ஒக் நவ டிச வருடம்
சராசரி வெப்பநிலை °C
(°F)
26
(79)
26
(80)
27
(82)
28
(84)
30
(86)
30
(87)
29
(85)
29
(85)
28
(84)
27
(82)
27
(81)
26
(79)
28
(83)

புவியியல்

மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை(சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குபகுதி) என்றும் மறு பகுதி படுவான்கரை (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குபகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது.காடுகள்,விவசாய நிலம்,வாவி,முகத்துவாரம்,கடல்,அணைகள்,களப்பு,இயற்கை துறைமுகம்,குளம் போன்ற புவியியல் அம்சங்களை கொண்டுள்ளது.படுவான்கரை பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினை கொண்ட பகுதியாகும்.மட்டக்களப்பு பிரதான நகரினை சூழ்ந்து வாவி காணப்படுவது இயற்கைவனப்பான விடயமாகும்.

 கல்வி நிறுவகங்கள்

பரந்துபட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மை பல்கலைக்கழகமான கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இம் மாவட்டத்தின் வந்தாறுமூலை எனும் ஊரில் அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 17 கிமீ தொலைவில் மட்-திருகோணமலை நெடுஞ்சாலையில் உள்ளது. இதுதவிர கிருஸ்தவ மிஷனரிமர்களால் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிசிலியா பெண்கள் பாடசாலை, வின்சண்ட் பெண்கள் பாடசாலை போன்றனவும், சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட சிவானந்த வித்தியாலயம், ஆனைப்பந்தி மகாவித்தியாலயம், கழுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் சில முஸ்லிம் வித்தியாலங்கள் போன்றன மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச்செயற்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன. இதுதவிர மஞ்சந்தொடுவாய் தொழினுட்பக்கல்லூரி, தாழங்குடா கல்வியற் கல்லூரி, விபுலானந்தா இசைநடனக்கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்) போன்றவும் முக்கிய கல்வி நிறுவகங்களாகும்.

 பொருளாதார நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக அரிசி உற்பத்தியினையும்,மீன்பிடிசார் கைத்தொழிலினையும் குறிப்பிடலாம். தெங்கு உற்பத்திக்குரிய சிறப்பான வளங்களை இம்மாவட்டம் கொண்டிருந்த பொழுதும் 1978 ம் ஆண்டின் கொடும் சூறாவளியின் பின்னர் தெங்கு பயிர்செய்கை வினைத்திறனாக மேற்கொள்ளப்படாததால் அவை சார்ந்த தொழில்துறை நலிவடைந்துள்ளது. .இம்மாவட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் பெரும் ஆதிக்கத்தினை கொண்டுள்ளனர்.

புள்ளிவிபரவியல்

மட்டக்களப்பானது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 314Km தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும்,இவர்கள் தவிர முஸ்லிம்,சிங்களவர்,பறங்கியர் ஆகிய ஆகிய இனத்தவர்களும் வசிக்கின்றனர்..மதரீதியாகவும் பல்லின மக்களும் வசிக்கின்றனர். உள்நாட்டுபோரும்,இடம்பெயர்வும் அடிக்கடி இடம்பெறும் இம்மாவட்டத்தின் குடித்தொகை புள்ளிவிபரங்கள் மிக திருத்தமானதாக கருதமுடியாது.

பிரதேசசபை வாரீயாக மக்கள் பரம்பல்
பிரதேசசபை பிரிவு குடும்ப எண்ணிக்கை ஆண் பெண் மொத்தம்
மண்முனை வடக்கு 18,867 39,010 39,187 78,197
மண்முனை மேற்கு 6,964 13,559 13,250 26,809
கோறளை பற்று வடக்கு 4,902 9,364 10,093 19,457
மண்முனை தென்மேற்கு 5,703 11,513 11,821 23,334
மண்முனை தென்மேற்கு 7,084 11,513 13,692 23,334
போறதீவு பற்று 11,170 21,825 22,713 44,538
மண்முனை தெற்கு,வடக்கு பற்று 14,083 26,381 27,885 54,266
மண்முனை பற்று 7,084 13,205 13,692 25,897
காத்தான்குடி 9,662 18,069 18,532 36,601
ஏறாவூர் பற்று 16,350 31,066 33,128 64,194
ஏறாவூர் நகர் 8,031 16,862 18,958 35,820
கோறளைப்பற்று 13,191 28,033 28,639 56,672
கோறளைப்பற்று மேற்கு 12,682 24,732 24,190 48,922
மொத்தம்l 128,689 253,619 (49.1%) 262,088 (50.9%) 515,707
[ஆதாரம்:இலங்கை குடித்தொகை,புள்ளிவிபர திணைக்களம்(Department of Census & Statics, Sri Lanka)]
மத அடிப்படையிலான மக்கள் பரம்பல் விபரம்(2000ம் ஆண்டில்).
பிரதேசசபை இந்துக்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர் பெளத்தர் ஏனையோர் மொத்தம்
மண்முனை வடக்கு 35,591 21,507 2,947 152 00 78,197
மண்முனை மேற்கு 26,531 278 00 00 00 26,809
கோறளைப்பற்று வடக்கு 16,729 1,677 1,043 08 00 19,457
மண்முனை தென்மேற்கு 23,264 70 00 00 00 23,334
போரதீவு பற்று 44,152 386 00 00 00 44,538
மண்முனை தெற்கு,கிழக்கு பற்று 52,188 2,037 02 22 17 54,266
மண்முனை பற்று 19,897 1,266 5,732 02 00 26,897
காத்தான்குடி 00 00 36,601 00 00 36,601
ஏறாவூர்பற்று 62,855 276 1,010 53 00 64,194
ஏறாவூர்நகர் 00 00 35,820 00 00 35,820
கோறளைப்பற்று 53,040 3,095 135 263 139 56,672
கோறளைபற்று மேற்கு 1,152 121 47,574 71 04 48,922
மொத்தம்' 353,399 (68.53%) 30,713 (5.96%) 130,864 (25.36%) 571 (0.11%) 160 (0.04%) 515,707
[ஆதாரம்:இலங்கை குடித்தொகை,புள்ளிவிபர திணைக்களம்(Department of Census & Statics, Sri Lanka)]

No comments:

Post a Comment