Monday 16 August 2010

ந.பாலேஸ்வரி:

பெயர்: நல்லரெட்ணசிங்கம் பாலேஸ்வரி
பிறந்த ஊர்: திருகோணமலை
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புகள்:



நாவல்கள்:

    * பூஜைக்கு வந்த மலர்
    * கோயிலும் கோவும்
    * சுடர் விளக்கு
    * உறவுக்கு அப்பால்
    * தத்தை விடுதூது
    * அமலா உனக்காக ஜெபிக்கிறேன்
    * எங்கே நீயோ நானும் அங்கே – என்ற  நாவல்கள் உட்பட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்துள்ளார்.

சிறுகதைத் தொகுப்பு:

    * ஒற்றைப் பனை

விருதுகள்:

    * தமிழ்மணி விருது - இந்து கலாச்சார அமைச்சு – 1992
    * சிறுகதைச் சிற்பி – மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை பொன்விழாவில் முத்தமிழ் மன்றம்
    * ஆளுநர் விருது – வடக்கு கிழக்கு மாகாண சபை இவரது 40 வருட இலக்கியப் பணி, சமய சமூகப் பணிகளைக் கௌரவித்து அளித்தது.

இவர் பற்றி:

    * கிழக்கிலங்கை தந்த மூத்த பெண் எழுத்தாளர். 1957 இல் இவரது முதற் சிறுகதையான வாழ்வளித்த தெய்வம் தினகரனில் வெளிவந்தது. இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது பூஜைக்கு வந்த மலர் என்ற நாவல் வெளியிட்ட இரண்டாவது மாதமே அதன் மறுபதிப்பு வெளியாகி சாதனை படைத்தது.

No comments:

Post a Comment