Wednesday 25 August 2010

.கவிஞர் தேனூரான்

தேனூரான் வாழ்க .....

வற்றாத வரிகள் தந்து வார்த்தைகள் கொண்டு
உற்ற நெஞ்சினில் கொற்றப் பேனா மை கொண்டு
கவிதை வரலாறு படைத்தவன் நீ ...........
நேற்றைய கவிஞன் நீ
இன்றைய கலாபூசணம் கண்டு
விழித்தெழுகின்றன உணர்வுகள்
உனக்காக
கவி எழுத ஏங்கி தவிக்கின்றன.........

ஈரமாக்கப் பட்ட இதயத்துடன்
உரம் சேர்க்கப்பட்ட உள்ளத்துடன்
வார்த்தைகள் கோர்க்கப்பட்ட
வரிகளுடன் நான்..............

பண்டு முதல் குறிஞ்சிப் புனங்களும்
பரந்த தண் பணைகளும் நிலை
ஈண்டு சிறந்தோங்க
முல்லைப் புறமும் நெய்தலும் துலங்க
கலை வளம் நிறை பல கவிககளின்
மலையென உயர் தந்தைகள்
வளர் பதி தேனூர் காண்................

பட்டுத்தமிழ் உடுத்தி பாங்காக
தேனூர் உள்ளங்களின்
கட்டுத் தமிழ் எண்ணங்களை
சிங்காரச் சிந்தாக சில் இசையாக
நட்டுத் தமிழ் மனதில் மண்வாசனை
கொட்டித் தமிழாண்மைக் குலத்தில்
விளைந்த தமிழ் நதியாய்
முந்தி வந்தான் தருமரெட்ணம் ...

குழைந்த இன் தமிழ பேச்சாலும்
கவிததும்பும் புலமைச் சிறப்பாலும்
விளைந்த"தேனூரான்"அடை கொண்டு
இவன்
புலமை மிகு தமிழில் வழியாய்
நுழைந்த ஆசான்களின் அறிவு மிகுதியால்
இலக்கண இதிகாசங்கள் தன்னுள்
விளங்க கருக செயுள்ளும்
நடை பயின்றன இவன் நாவில்....

இல்லந்தனிலே வண்ணக் கல்வியால்
இதிகாச புராணங்களை ஏற்றிட்ட
அண்ணல்............
பயிரான தமிழுக்கு
உரமான விருத்த அகவல்கள்
இயற்ற வல்லான்
நயப்பான நாடகக் கலையிலும்
திறமான நாட்டுக் கூத்திலும்
நம்பியானவன்
வளமான விருத்தங்கள் பல
கூத்துக்களுக்கு ஆகியளித்து
தமிழுக்கு வழியான தருமகனாய்
தமிழான வரனாய்
சைவத்திருமகனாய் நின்று
இன்று ..!
"கலாபூசண" விருது கொண்டு
தமிழ்ப் பெருமகனாய் நிற்கிறான்
தமிழை வென்று ....

ஈழமென்ற பேர் கேட்டு எத்தனையோ
இதையத் தாமரைகள் பூக்கும்
இவன் இதயம்
தேனூர் என்ற பேர் கேட்டுத் துடிக்கும்
தேனூர் கை கொடுக்கும்

சந்தக் கவி இசைப் பாடல்கள்
எழுதவல்லான்
நந்தமிழ் நாவலன்
இந்தக் கவிகளுக்கரிதாக உள
எந்தக் கவியும் இயற்றும்
கவியரசன்
தந்துரை
வளம் பெறப் பாடும்
அமுதன்

உனக்குத் தெரியுமா
விழி இமைத்திருக்கையில்
உற்று நோக்கியிருக்கையில்
உன் கவிதைக் காவியகள்
ஈழ மனப்பளிங்குகளில்
பொன் கொண்டு செதுக்கப்படும்
நாட்கள் மிக விரைவுபடுத்தப்படும்

காள மேகப் பூக்கள் இனி
கவிப் பூக்கள் தூவிச் செல்லும்

வாழ்க என்று தமிழ் கூறும்
பல்லாண்டு
தமிழ் வானம் கூட வாழ்த்தும்
உன்கவி கற்கண்டு
ஊனம் கொண்ட வரிகளும்
உன் தமிழ் நடை பயின்று
வளரும் கண்கொண்டு..........

வாழ்க நீ....
தமிழோடு புகழோடு

கவிஞர் தேனூரான் அவர்கட்கு கலாபூசணம் விருது கிடைக்கப்பெற்றதை அடுத்து அவருக்காக எழுதப்பட்ட கவி மாலை அவருக்கான பாராட்டு வைபவத்தில் வாசிக்கப்பட்டது...

No comments:

Post a Comment