Friday 13 August 2010

திருக்கோணமலையின் வரலாறு

திருக்கோணமலை வரலாறு.

1. ஆரம்ப காலம்.

திருக்கோணமலையின் வரலாறு எம்மால் சரியாக அறுதியிட்டுக் கூறமுடியாத மிக நீண்ட காலத்தின் முன்பே தோற்றம் பெற்றிருப்பினும், அதனைப் புலப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் மறைந்தொழிந்துள்ளதுடன், அவற்றில் இன்று மிகுதியாய் காணப்படுவது கவிதை மற்றும் புராண இதிகாசங்களேயாகும். இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதேவேளை அவற்றில் சில ஆதாரங்கள் நம்புவதற்குச் சிரமமானதாகும். ஆனால், உலகின் மாபெரும் காவியங்களைப் போல இவையும் உண்மையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.


திருக்கோணமலை எனும் பெயரின் மூல வரலாறு.


இந்தப் புராதன இடத்திற்குப் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஏனெனில், இது இங்கு வந்து வாழ்ந்த பல்வேறு சாதியினருக்கும், சாகியத்தியனருக்கும் ஒரு தற்காலிக இடமாகவே இருந்துள்ளது.

பழைய பெயர்களாவன,

திரிகோண மலை.

திருகோணாமலை.

தமிழில் , திரு என்பது ‘புனிதம்’ நிறைந்தது எனப் பொருள்படும். ‘கோண” என்பது, ‘கோண”வின் இடம் எனலாம். எனவே இதன் கருத்தை ‘கோணவின் இடத்தில் அமைந்த புனித மலை” எனக்கொள்ளலாம்.

திருக்கோணாத்த மலை - திருக்கோணமலை எனும் இயற்பெயர், கோணாத்த- அந்த இடத்தின் காவல் தெய்வம் - என்பதிலிருந்தே பெறப்பட்டுள்ளது.

கோணேசர் மலை - கோணேசர் என்பது கோணமலையின் ஈஸ்வரன் எனப் பொருள்படும். தமிழில் பொதுவாகக் கடவுளின் பெயர், அவரைப் பிரதிஷ்டை செய்த இடத்தின் பெயருக்குப் பின்னால் வருவது வழமையாகும்.

பிற்காலப் பெயர்கள் சில-

Trincona
Trinkenmall
Trinkili-Male
Triquilimale
Trequimale
Trinconmale
Trinquamalle

இவ்விடத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தோற்றத்தை நாம் மனக்கண் முன் கொண்டுவர முயற்சிப்போமாயின், இன்றைய சுறுசுறுப்பான, மகிழ்வூட்டும் காட்சிகளை நாம் மறந்துவிட வேண்டும். கடைகள், திரையரங்குகள், உணவகங்கள், டொக்யார்ட், புகையிரத நிலையம், கோட்டை மற்றும் முற்றவெளி அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் அடர்ந்த கன்னிமைக் காடுகளையும், அதனு}டே ஊடறுத்துச் செல்லும் பழமை வாய்ந்த ஒற்றையடிப் பாதைகளையும் கற்பனை செய்வோமேயானால், அந்தப் ஒற்றையடிப் பாதையில் ஒன்று, இப்போது இருப்பதுபோலவே ஒதுக்கமாக, தனித்துவமான பேரழகுடன் திகழும் அந்த சுவாமி மலைக்கு இட்டுச் செல்வதாகவே இருக்கும்.

1623 இல் போர்த்துக்கேயர்களால் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டதும், ஆயிரம் து}ண்களால் தாங்கி நிறுத்தப்பட்டதும், மூன்றடுக்குகளைக் கொண்ட கோபுரங்களை உடையதுமான மலைக் கோயிலின் ஆதிகாலத் தோற்றத்தை இன்றைய பிரட்ரிக் கோட்டையின் காப்பரணில் பதிக்கப்பட்டிருக்கும் செதுக்கப்பட்ட கற்கள் எமக்குப் புலப்படுத்துகின்றன.

இதுவே அந்தக் கதை.


கோயிலின் இதிகாசம்.


இந்திய அரசுகளில் ஒன்றின் அரசன் ஒருவன் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருந்தான். அவனது குழந்தையாக இருந்த மகளைத் தியாகம் செய்வதே அந்த நெருக்கடியிலிருந்து அவன் மீள்வதற்கான ஒரே வழியாக இருந்தது. அவள் இறுதியில் ஒரு சந்தனப் பேழையில் வைக்கப்பட்டுக் கடலில் விடப்பட்டாள். அது இலங்கையை நோக்கி மிதந்து வந்து, திருக்கோணமலையின் தெற்குப் பகுதியில் “பன்னோவா” அல்லது “சிரிக்கும் குழந்தை“ என்று இன்றும் அழைக்கப்படும் இடத்தில் கரையொதுங்கியது. அங்கு அப்பெண் குழந்தை அரசனொருவனால் கண்டெடுக்;கப்பட்டு, அவனின் வாரிசாக்கப்பட்டாள்.
இதற்கிடையில் அங்கு வந்த ஓர் இளவரசன், திருக்கோணமலையானது, கடவுளருக்கிடையிலான சர்ச்சையின்போது கிள்ளியெறியப்பட்ட மகாமேரு மலையின் மூன்று பகுதிகளில் ஒன்றெனவும், அங்கேயே சிவனுக்குக் ஆலயமொன்று நிர்மாணிக்கப்பட்டது என்றும் அறிந்துகொண்டான். இளவரசி அந்த இளவரசனைப் கைதுசெய்யுமாறு தன் படைகளை அனுப்பிவைத்த போதும்; அவள் இறுதியில் அவனையே மணம் முடித்தாள். பின்னர் அவள் தம்பலகாமத்தின் பெரும் நெல் வயல்களை இக்கோயிலுக்கு மானியமாக வழங்கினாள்.

இளவரசி இறந்தபோது, இக்கோயிலுக்குள் தன்னை வைத்துப் பூட்டிக்கொண்ட இளவரசன், சிவனின் பலிபீடத்தில் ஒரு தங்கத் தாமரையாக மாறியிருக்கக் காணப்பட்டான். பிரெட்ரிக் கோட்டையின் நுழைவாயிலின் வலது புறத்தில் காணப்படும் கல்வெட்டு, ஒரு தீர்க்க தரிசனம் போல் தென்படுகிறது.
தற்போதுள்ள கல்வெட்டு:

ன னே கு ள
கா ட மு ட டு
ருப்பணியை
ன் னே பறங்கி
க க வே ம ன ன
ன பொ ண் ணா
னை ய ய் ற ற
தே வை த
ணா
கள்

அதனைப் பின்வருமாறு மீளமைப்புச் செய்ய முடியும்.

(மு) ன னே கு ள (க்)
(கோ) ட (ன்) மு ட டு (த்)
(தி) ருப்பணியை (ப்)
(பி) ன் னே பறங்கி (பி)
(ரி) க க வே ம ன ன (வ)
(பி) ன பொ ண் ணா (த)
(த) னை ய ய் ற ற (வழி)
(த்) தே வை த (து)
(எண்) ணா (ரே பின்)
(னரசர்) கள்


வெண்பா வடிவில் பின்வருமாறு அமையும்.

‘முன்னே குளக் கோடன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னவபின்
பொண்ணாதத னையியற்றவழித்தேவைத்து
எண்ணாரே பின்னரசர்கள்.’

இதன் பொருள்,

ஆதிகாலத்தில் குளக்கோட்டனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் பறங்கியினால் (போர்த்துக்கீசர்) இடிக்கப்படும். அதன் பின்னர் இவ்வாலயம் மீளக் கட்டியெழுப்பப்படமாட்டாது. மேலும் எதிர்கால மன்னர்கள் அதனைப் புனருத்தாரணம் செய்யக்கூட எண்ணமாட்டார்கள். (காண்க பின்னிணைப்பு 1)

கி. மு. 434 - 439இல் அனுராதபுரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாண்டுவின் ஆட்சியதிகாரத்தின் கீழ், இந்த இந்திய இளவரசனான குளக்கோட்டன் கி. மு. 5ம் நூற்றாண்டில் கோணேஸ்வரருக்காக கோணேஸ்வரத்தை மீளக்கட்டிப் பெருப்பித்தான்.

முதன்முதலில் இக்கோயில் கி. மு. 1589 இல் கட்டப்பட்டுள்ளதாக கவிராஜவரோதயன் என்பவரின் தமிழ்ப் பாடல் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அப்பாடல்கள், சோழமண்டலத்தை ஆட்சிபுரிந்த மனுநீதிகண்ட சோழன் எனும் மன்னனைப் பற்றிக் கூறுகின்றன.

‘கைலாச புராண’ த்தின் மூலம் திருக்கோணாத்த மலையின் அதிசயங்களையும் அதன் குடிமக்களின் மாண்பையும் அறிந்து அம்மன்னன் அவ்விடம் வந்தான்.

அவனுக்குப் பின் ஆட்சி பீடமேறிய அவன் மகன் அவ்விடத்திற்கு வந்து, கலியுகத்தின் 512ம் ஆண்டில் (கி. மு. 1589 இல்) கோயிலையும், கோபுரத்தையும், மண்டபத்தையும் மேம்படுத்தி, புனிதச் சுனையொன்றையும் உருவாக்கினான்.

ஓர் ஐரோப்பிய போர் வீரன் தன் வருகையினால் மலைக் கோயிலின் புனிதத்தை மாசுபடுத்தியுள்ளான் என ஒரு புராணக்கதை உள்ளது. விசுவாசத்துடன் சுவாமி மலையில் அவர்கள் செய்யும் பூசையினை அவன் பார்த்திருக்கக் கூடும் என்று சொல்லப்படுகின்றது.

இருள் சூழ்ந்த நேரத்தில், செங்குத்தான பாறையின் முனையில் தீப்பந்தத்தை வைத்துவிட்டு, கடலுக்கடியிலுள்ள பழைய கோயிலின் இடிபாடுகளில் பூசை வேள்விகளில் ஈடுபட்டிருந்த பூசகரையும் அவன் கண்டிருக்க முடியும்.


பிரெட்ரிக் கோட்டையின் வரலாற்று எச்சங்கள்.


திருக்கோணமலையை முதன் முதலில் ஆக்கிரமித்தவர்களுள் பாண்டிய வம்சத்தவர்களும் (ஏறக்குறைய கி. மு. 1200) ஒரு சாரார் என்பது பதிவு செய்யப்பட்டுளது. ‘கோணமலை’ என அக்காலத்தில் வழங்கப்பட்ட இடத்தில் தமது இரட்டை மீன் சின்னத்தைப் பாண்டியர் பொறித்து வைத்தனர். அச்சின்னத்தை இன்றும்கூட கோட்டை வாசலின் இருபுறங்களிலும் காணலாம்.

சோழர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர் என அறியப்பட்டுள்ளது. அத்துடன் அழிக்கப்பட்ட கோயிலின் எச்சங்கள், 7ம் நூற்றாண்டில,; அனுராதபுரத்தில் வாழ்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ள பல்லவர்களின் கட்டுமானங்களை ஒத்தவையாக இருப்பதாகவும் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்திய வம்சாவழியினரான அவர்கள், தொலைத்து}ர நாடுகளான ஜாவா, சுமாத்திரா மற்றும் சீனா, மலேசியா ஆகியவற்றுடனும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்

கோயில் கட்டப்பட்ட சரியான திகதி எதுவாக இருந்தாலும், அக்கோயில் அவ்விடத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றது என்ற உண்மை மறுதலிக்க முடியாதது. அது மட்டுமல்ல, காலத்திற்கும், போர்களுக்கும் ஈடுகொடுத்து தலைநிமிர்ந்து நிற்கின்ற அதன் கருங்கற்கள் கூறும் காலத்தினால் அழியாத வீரக்கதைகளை உணராமலிருப்பதென்பதும் முடியாத காரியமாகும்.

இன்றைய பிரெட்ரிக் கோட்டையின் அரண்களின் மேல் உலாவரும் ஓர் ஆய்வாளருக்கு, அதிலுள்ள கற்துண்டங்களின் வடிவமும், சிற்ப வேலைகளும் அள்ளித்தரும் பொக்கிசங்களாகும். இவை பழைய கோயிலின் எச்சங்கள் என்பது சந்தேகமற்றதாகும்.

அம்ஸ்ரடாம் காவலரணின் நுழைவாயிலில் அருமையான கற்று}ண்கள் காணப்படுவதுடன், ஒரு பீரங்கி மேடைக்கருகில் அரிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சாசனமும் காணப்படுகின்றது.

இரண்டு காவலரண் முனைகளுக்கிடையேயான தடுப்பு வேலி நெடுகிலும் பல்வேறு சிற்ப வேலைகளைக் காணக்கூடியதாக உள்ளதுடன், அவை, கோட்டையைச் சுற்றிய பகுதிகளிலும், ரெனிஸ் விளையாட்டுக் கூடத்தின் சில படிகளிலும், டச் பாலத்தின் செங்குத்தான அடிப்பாகத்திலும் காணப்படுகின்றன. கோட்டையின் மையத்திலுள்ள சூரியக் கடிகாரத்திற்கு அமைவாகவும் ஓர் அரிய கற்றூண் உள்ளது. ஏனைய சிதைவுகள் மலையுச்சியிலுள்ள கொடிக்கம்பத்தின் கீழ்ப்புறமாகக் காணப்படுகின்றன. இது பெரும்பாலும் கோயிலின் ஒரு பகுதியாக இருக்கக் கூடும்.


பிரான்சீனா வான் ரீட் அவர்களின்; கதை (Francina Van Rhede)


பிரசித்திபெற்ற நிகழ்வுகளுக்கான ஒரு வரலாற்றுக்குறியீடாக சுவாமி மலையின் உச்சி காணப்படுகின்றது. ஒல்லாந்தரின் பழைய பதிவேடுகளில் அங்கு நடந்த சம்பவமொன்று பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

“திருக்கோணமலையிலுள்ள மலைக்குன்று ஒன்றில் காணப்படும் கற்றூணில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களை அடிப்படையாகக் கொண்ட கதையில் வான் ரீட் அல்லது ரீட் எனும் பெயர் சம்பந்தப்பட்டுள்ளது. இதில் துயரம் நிறைந்துள்ளபோதும், அருமையான ஒரு காதல் கதையாகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அந்த நினைவுச்சின்னம் மீட்ரெக்ட் பெண்ணாகிய பிரான்சீனா வான் ரீட் என்பவரின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டதாகும். இவை அனைத்தும் கல்வெட்டிலிருந்து கிடைக்கும் செய்திகளாகும். ஆனால் கதை இதுதான்:

அரச சேவையிலிருந்த ஒல்லாந்த நாட்டு கனவான் ஒருவனின் மகளான பிரான்சீனா, இராணுவ அதிகாரி ஒருவனிடம் மிக நெருக்கமாக பழகி வந்தாள். அவளது தந்தை அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்ததுடன் திருமணச் சடங்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது. எனினும் மணமகளின் சீதனம் பற்றி முரண்பாடு உருவானது. உறவு முறிவடைவதற்கான பல்வேறு பிரச்சனைகளும் உருவாகின. வேண்டுமென்றே திருமணச்சடங்கினை முறித்துவிட்ட மணமகன் உடனடியாகவே ஐரோப்பா திரும்புவதற்கான விடுமுறையினையும் பெற்றுக்கொண்டான். காதலனால் கைவிடப்பட்டது மட்டுமின்றி அவனால் மனக்கசப்பை மட்டுமே பெற்றுக்கொண்ட அதி~ஷ்டமில்லாத, அபலையான அந்த இளம் பெண் தான் உயிர் வாழும் வரையில் தனது காதலன் தீவை விட்டு வெளியேறக்கூடாது எனத் தீர்மானித்தாள். அவள் கப்பல் புறப்படவிருக்கும் நேரம் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டாள். மஞ்சள் தீவிலிருந்து அவனைப்பிரித்து, மெல்ல மெல்லத் தூர எடுத்துச் செல்வதைப்போல விரிந்தகன்ற பாய்கள் கட்டப்பட்ட கப்பல் நகர்ந்து செல்வதைத் தனது அறையின் ஜன்னலு}டாக அவள் அவதானித்தாள். கரைப்பகுதியை விட்டு வெளியேறும் முன்னர் அக்கப்பல் தனது திசையை மாற்றி, கோட்டையின் தென் பகுதியில் அமைந்துள்ள செங்குத்தான பாறைகளுக்கு அருகாகச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்தக் கணப்பொழுதிற்காகவே அவள் காத்திருந்தாள். அவள் வீட்டை விட்டு வெளியே ஓடினாள். செங்குத்தான பாறையின் கூர் முனைகளின் மேலாக விரைந்து சென்றாள். கடலோடு கவிந்த பாறைகளின் கீழ் அந்தப் பாய்க்கப்பல் அவ்வேளையில் நகர்ந்துகொண்டிருந்தது. ஓடிவந்த அவள் ஒருகணம் துருத்திக்கொண்டிருந்த பாறை ஒன்றின் முனையில் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, பின் பழி தீர்க்கும் குமுறலை வெளிக்காட்டும் பெரும் ஓலத்துடன் தலைசுற்றி மயக்கத்தை வரவழைக்கும் அந்த உயரமான மலை உச்சியிலிருந்து கீழே பாய்ந்தாள். அவள் கீழே இருந்த பாறைக்கற்களுடன் மோதுண்டாள். மனமுடைந்துபோன தந்தையாரின் கட்டளையின்படி, பல சிரமங்களுக்கு மத்தியில் உடலின் சிதைந்து போன பல பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு கிறிஸ்தவ முறைப்படி புதைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொள்வதைத் தற்காலிகமாக மனநிலை குன்றியவர்களின் குற்றச்செயலாக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் பயங்கரமான குற்றச்செயலாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் தற்கொலைக் குற்றத்திலிருந்து தப்புவதற்கு அதுமட்டுமே காரணமாக அமைந்துவிட முடியாது.

குரூரமாக நடந்த இத்தகைய ஒரு மரணத்தினைக்கூட அவளுடைய குடும்பத்தினர், தங்களுடைய நினைவாக பலரும் காணக்கூடிய வகையில் கல்லில் பொறித்து வைத்திருப்பது உண்மையிலேயே எங்களுக்கு வியப்பளிக்கிறது.

அபூர்வமான இப்பெண்ணைப்பற்றி மேற்க்கொண்ட மேலதிக விசாரணைகளின்; பொழுது அவளது மரணத்திகதியின் பின்பு அவள் இரு முறை மணம் செய்துகொண்டாள் என்பதற்கு ஆணித்தரமான சான்றுகள் இருப்பது தெரியவந்துள்ளன. அதாவது 1687 இல் அவள் முதற் தடவை திருமணம் செய்தாள்.

பின்னர், அவளது முதற் கணவன் 1693 இல் மரணமடைய 1694 இல் மீண்டும் திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கு பல பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களுடைய பெயர்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இது உண்மையாக இருந்தால் அவளது தந்தையாரால் நிர்மாணிக்கப்பட்ட நினைவுக்கல்வெட்டில் காணப்படுவது அவள் மணமகளாக கடல் கடந்து சென்ற தினமாக இருக்க முடியுமேயன்றி அவளது இறந்த தினமாக இருக்க முடியாது.





2. ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள்.


1505-போர்த்துக்கீசர்
1639-ஒல்லாந்தர்
1782-பிரித்தானியர்
1782-பிரான்சியர்


செய்லன் Zeilun ( இலங்கை ) செல்வத்தின் மீதான போர்த்துக்கேயரின் பேராசை.


1505
முதன்முதலில் ஐரோப்பியர்கள், இலங்கைக்கு வந்தமையானது ஒரு திட்டமிட்ட செயல் என்பதை விட ஒரு விபத்து என்றே கூறவேண்டும். மாலை தீவுகளுக்கு தனது மூன்று கப்பல்களுடன் புறப்பட்ட போர்த்துக்கேயரான லோரஸ்ஸோ டீ அல்மெய்டா என்பவர் கடல் நீரோட்டத்தின் காரணமாக வடபக்கமாக இழுக்கப்பட்டு இலங்கைக்கரையில் தரையிறங்கினர். இலங்கைத்தீவின் கறுவா, மிளகு, கஸ்து}ரி, யானைகள், யானைத்தந்தம், இரத்தினம் மற்றும் முத்துக்கள் போன்றனவற்றால் கிடைக்கும் இலாபத்தின்பால் மனம் கவரப்பட்ட அவருடைய வழி வந்தவர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் எண்ணற்ற யுத்தங்கள் ஏற்பட்டு, இறுதியில் வியாபாரத் தனியுரிமை நிறுவப்பட்டது.

1601 - 1612
அதற்கிடையில் ஒல்லாந்தரான ஜோரிஸ் வான் ஸ்பில்பேர்க் என்பவர் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக கடல் மார்க்கமாக வந்து சேர்ந்தார். அதன் பிறகு 11 ஆண்டுகளின் பின்னர் மார்செலஸ் டீ பொஸ்கூடர் கண்டிக்குச் சென்று மன்னனுடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டான். அவ்வொப்பந்தத்தின் படி திருக்கோணமலைக்கு அண்மையில் உள்ள கொட்டியாரத்தில் கோட்டை ஒன்றை அமைப்பதற்கான அனுமதி அவர்களுக்கு கிடைத்தது. அக்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட உடனேயே அது போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.

கீழ்த்திசையில், ஒல்லாந்தரின் வல்லமை அதிகரித்து வருவதை உணர்ந்து கொண்ட போர்த்துக்கேயர் பலம் வாய்ந்த பல கோட்டைகளை செய்லன் என்று அக்காலத்தில் வழங்கப்பட்ட இலங்கையின் கிழக்குக் கரை நெடுகிலும் அமைத்தார்கள்.


1623
கொன்ஸ்டன்டைன் டீ சா என்பவனால் கோணேசர் மலையிலிருந்த அழகிய ஆலயம் முற்றாக இடித்தழிக்கப்பட்டு நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த அதன் கருங்கற்களும,; கற்று}ண்களும் பிரெட்ரிக் கோட்டையின் அரண்களாக்கப்பட்டன.

அன்றிலிருந்து, 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பேராசைக்காரர்களாலும் அதிகார வெறியர்களாலும் திருக்கோணமலையானது முடிவேயில்லாத ஒரு யுத்த களமாகவே இருந்துவந்தது.

தாக்குதலுக்கான ஒல்லாந்தரின் திட்டம்.

1638
இந்தப் பலம் வாய்ந்த இடத்தை தங்கள் வசம் வைத்துக் கொள்வதற்கான தேவை ஒல்லாந்தருக்கு இருந்தது என்பதை இக்கடிதம் காட்டுகின்றது. :

மட்டக்களப்புக்கோட்டை
31, டிசம்பர்,1638

கௌரவ தேசாதிபதி அந்தோனியோ வான் டீ மென் அவர்கட்கு,

இங்கு கேள்வியுற்றவாறு போர்த்துக்கேயர்கள் தங்கள் தளபதி அந்தோணியோ மாஸ்கெரன்ஹாஸ் என்பானுடன் 1000 பேருள்ள பத்துப்பன்னிரண்டு போர்க் கப்பல்களோடு இருக்கிறார்கள். ஆனால் கடவுளின் கருணையிருந்தால் அவர்கள் மீது முறையான தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு எதுவுமே எமக்குத் தடையாயிராது என நான் நம்புகின்றேன்.

திருக்கோணமலைக் கோட்டையானது மலையிலிருந்த பழைய கோயிலின் கருங்கற்களினால் மிகவும் பலமானதாக கட்டப்பட்ட ஒன்றாகும். ஒவ்வொரு பக்கத்திலும் மணல் நிறைந்த பாறைக் குடாக்கள் அமைந்துள்ளதால் ஒரு தீபகற்பம் போல் அது உள்ளது. பொதுவாக சில கறுப்பர்களையும் உள்டக்கிய முப்பது தொடக்கம் நாற்பது போர் வீரர்கள் கோட்டையின் காவற் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இப்போது நாகப்பட்டனத்திலிருந்தும,; மட்டக்களப்பிலிருந்தும் போர்வீரர்கள் தருவிக்கப்பட்டிருந்தார்கள். திருமணமானவர்கள் அநேகமாக யாழ்ப்பாணப் பட்டணத்திற்குப் போய்விட்டார்கள்.

கடவுள் துணையுடன் இந்த இடமானது சரியான முறையில் தாக்கப்படுமாக இருந்தால், அது நீண்டகாலம் தாக்குப்பிடிக்கமாட்டாது. பத்து அல்லது பன்னிரண்டுக்கு மேற்படாத சுடுகலன்களே அங்குள்ளன. இங்கு கரையின் இருபக்கமும் பாதுகாப்பாக சிறிய நங்கூரமிடக்கூடிய இடங்கள் உள்ளன.

W. J . கோஸ்டர்

1639 ஒல்லாந்தரால் திருக்கோணமலை கைப்பற்றப்படல்


கோட்டையானது அக்காலத்தில் மூன்று புற அரண்களைக் கொண்டிருந்தது.

புனித ஜாகோ (இப்போது சீ பேர்க். ) - ஆறு சுடுகலன்கள்.
புனித குறு}ஸ் (இப்போது ஆம்ஸ்ரடாம்). -ஆறு சுடுகலன்கள்
போர்த்துக்கீசர் (தற்போதைய உத்தியோக்த்தர் உணவு விடுதி) -
இரண்டு சுடுகலன்.

ஆறு இறாத்தல் எடை கொண்ட சுடுகலன்கள் யாவும் சேதமான டென்மார்க் கப்பலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். தளபதி மாஸ்கரணாஸ் 40 ஐரோப்பியர்களையும,; 100 இலங்கையர்களையும் கொண்ட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக இருந்தார்.

அட்மிரல் வெஸ்டர்வூல்ட் அவர்களின் கீழ் அமைந்திருந்த ஒல்லாந்தரின் கடற்படையில் இரு சிறு படகுகள் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான கப்பல்கள் இருந்தன. கட்டளைத் தளபதி அந்தோணியோ கேன் தலைமையிலான தரைப்படைக்கு மட்டக்களப்பிலிருந்து 500 போர் வீரர்களையும், கொட்டியாரத்திலிருந்து 400 போர் வீரர்களையும், தேவையான வேலையாட்களையும் ஆளுநர் வழங்கியிருந்தார். ஏணிகளையும், கூடைகளையும் தயாரிப்பதற்கு மேலாக இவர்களினால் வேறு உதவி ஏதும் கிட்டவில்லை.

கேன் அவர்கள் மட்டக்களப்பிலிருந்த சம்மாந்துறை ஆளுநரின் உதவிகளைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் அங்கிருந்த இளவரசன் 5 வருடங்களுக்கு மேலாக கண் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தியையும் அவர் அறிந்துகொண்டார். ஆக, ஒல்லாந்தர், இன்று டச்சுக் குடா என்று அழைக்கப்படும் இடத்தில் 1639 ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் தரையிறங்கினார்கள். கட்டளைத்தளபதி கேன் அவர்கள் எதிரியின் பலத்தை அறிவதற்கான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தீபகற்பத்தின் புறவரண்களுக்கு மிக நெருக்கமாக காடுகள் மண்டியிருந்ததால் அவர்கள் கோட்டைச்சுவரின் மிக அருகிலேயே இருக்கக்கூடியதாகவும் அத்துடன் எதிரிகளின் பேச்சொலிகளைக் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. மேலும், கோட்டை அரண் மேல் உலாவிக்கொண்டிருந்த காவல் வீரர்களையும் அவர்களால் உன்னிப்பாக அவதானிக்க முடிந்தது.

கொம்பு ஊதுபவர்களின் மூலம் போர்த்துக்கேயர்களுக்கு சரியான ஒரு எச்சரிக்கையை கேன் அவர்கள் விடுத்த போதும், கோட்டையிலிருந்து சில துப்பாக்கி வெடிகளே அதற்குப் பரிசாகக் கிடைத்தன. ஒரு குண்டு மிக அண்மையில் வந்து விழுந்தது. மற்றொரு குண்டு விழுந்தைக் காண முடியவில்லை. ஆனால் வெடியோசைகள் அதிகமாக இருக்கவில்லை. இதன்மூலம் போர்த்துக்கேயரிடம் வெடிமருந்து மிகக் குறைவாகவே உள்ளது என்பதை ஒல்லாந்தர் நன்கு உணர்ந்துகொண்டனர்.

அடுத்த நாள் ஒல்லாந்தர் தாக்குதலுக்கு ஆயத்தமானார்கள். தங்கள் துருப்பினருக்கு நான்கு இறாத்தல் நிறை கொண்ட இருபது சுடுகலன்களையும் ஒரு இறாத்தல் நிறை கொண்ட 18 சுடுகலன்களையும் அவர்கள் வழங்கினர். இந்தப் போர் ஆயத்த வேலைகளுக்கு ஒருவார காலம் எடுத்தது. போர்த்துக்கேயர் தமது சுடுகலன்களிற் கற்களைப் பொருத்திச் சுட்டது மாத்திரமல்ல, போருக்கான சட்டதிட்டங்களுக்கு எதிரான முறையில் ஈயக்குண்டுகளினாலும் சுட்டார்கள்.

மே மாதம் முதலாம் திகதி போருக்கான சகல நடவடிக்கைகளும் தயாராக இருந்தன. சுடும் எல்லைக்குள் இருக்கக்கூடியதாக, ஆனால் புதர்களின் மறைவுக்குள் சிறப்பு ஆற்றலுடைய 25 வீரர்களை கொண்ட மூன்று பட்டாளப் பிரிவுகள் நிறுத்தப்பட்டன. முன் காப்பரண்கள் இரண்டுக் கூடாக ஊடறுத்துச் செல்வதெனத் திட்டமிடப்பட்டது. ஒன்றரை மணித்தியாலத்தில் போர்த்துக்கேயரின் துப்பாக்கிகள் ஓய்ந்ததுடன் அடுத்த மூன்று மணி நேரத்தில் காப்பரண்கள் தகர்க்கப்பட்டு ஊடறுத்துச் செல்லப்பட்டது.

ஓர் உதவிப்படைத்தலைவனும,; முரசறையும் ஒருவனும் கோட்டைக்குள்ளே அனுப்பப்பட்டு, போர்த்துக்கேயரைச் சரணடையுமாறு கேட்கப்பட்டது. சரணடைவது தாமதித்தால் அவர்கள் சிங்களவர்களிடம் பிடித்துக் கொடுக்கப்பட்டு கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் போர்த்துக்கேயர், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சு10டு நடத்தியதுடன் மேலும் ஒரு பயங்கரத் தவறினைச் செய்தனர். இந்தச் சம்பவமானது ‘டச்சுக் குடாவின்” மணற் குன்று ஒன்றின் மீதிருந்து இதனை அவதானித்துக்கொண்டிருந்த கட்டளைத்தளபதி கேன் இன் கோபத்தைக் கிளற்ச் செய்தது. அதனால் ஈவிரக்கமற்ற குண்டுவீச்சை அவர் ஆரம்பித்ததுடன், அன்று மாலைக்குள் தாக்குதலை முடிப்பதற்காகப் பின்வரும் படையணியை ஒழுங்குசெய்தார்.

20 சுடுகலன் வீரர்கள்
10 ஆயுதம் தாங்கிய மாலுமிகள்.
14 ஆயுதம் தாங்கிய கடற்படை மருத்துவப்பிரிவினர்
70 மேஜரின் கீழ் உள்ள படையணி
100 துப்பாக்கி தரித்த கடற் படையினர்.
140 ரிசேர்வ் படையினர்.
120 துப்பாக்கி வீரர்கள்

மொத்தம் 514 பேர்.


தாக்குதல் முடிவுறவில்லை. இரண்டு போர்த்துக்கேயத் தளபதிகள் பிரசன்னமாகிப் படிப்பறிவற்ற தாது வீரர்களால் சமாதானக் கொடியின்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்புக்கோரிய பின்னர் கோட்டைச் சாவிகளையும் கையளித்தனர்.

இறந்தோர், காயப்பட்டோர் விபரங்கள்-
ஒல்லாந்தர்- ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர்
போர்த்துக்கேயர்-14 பேர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயமடைந்தனர்.

கோட்டைக்குள் பிரவேசித்த ஒல்லாந்தர்கள் இரண்டு புறஅரண்களிலும் 8 துப்பாக்கிகள் குப்பைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். தனது வெற்றியையிட்டுப் பெருமிதம் கொண்டவராக காணப்பட்ட கேன், தனது வெற்றியைக் கொண்டாடும் முகமாக கொடிக்கம்பத்தில் சிறு கோபுர வடிவத்தைக் கட்டி, இசை ஒலியினையும் எழுப்பினார்.

பழைய கையெழுத்துப் பிரதியிலிருந்து பெறப்பட்ட இரண்டு குறிப்புக்கள் அவ்வேளையில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிய ஆக்கபூர்வமான தகவல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு வெளிப்படுத்துகின்றன .


ஒல்லாந்தர் ஒருவரால் எழுதப்பட்ட ‘இந்திய ஒல்லாந்தர் ஒருவரின் இலங்கைக்கான கடற்பயணம்’ என்ற குறிப்பிலிருந்து


“போர்த்துக்கேயர்கள் தமது சுய பாதுகாப்புக்காக தமது மிகப்பெரிய செல்வச்செழிப்பான கண்டுபிடிப்பின் (இலங்கை) பயன்கள் மூலம் மிகப்பெரும் கோட்டைகளைக் (வுசiமெநநெஅயடடந என்றே ஆரம்பத்தில் குறிப்பிடுகிறார். ) கட்டினார்கள். ஸ்பெயினின் உதவியில் தங்கியிருந்த, ஆனால் ஸ்பானிய மேலாதிக்கத்தை துணிவுடன் உதறித்தள்ளிய ஒல்லாந்தர், போர்த்துக்கேயர்களுடனான போரில் இலங்கையில் கண்டி மன்னனிடம் போர்க்கூட்டணி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர். அதன் மூலம் போர்த்துக்கேயரைக் கடலிலும், தரையிலும் பலமான தாக்கினர். அவர்களுடைய பெருவிருப்புக்குரிய இடமான திருக்கோணமலையிலிருந்து போர்த்துக்கேயரை வெளியேறச் செய்தனர்.

அன்றிலிருந்து ஒவ்வொரு விடயத்திலும் நம்பிக்கையாகவும், ஆழமாகவும் அவ்வரசுடனான நட்புணர்வை உயிர்ப்பித்து வளர்த்தெடுத்தார்கள். விட்டுக்கொடுக்கும் நட்புடனான அந்த முனைப்பு அவர்களுக்கும் சாதகமாக அமைந்தது. அவர்களுடைய நிறுவனமான டச்சு கிழக்கிந்திய கம்பனி வருடந்தோறும் பல்வேறு வகையான பரிசுப்பொருட்களுடன் ஒரு து}துவரை மேன்மைதங்கிய மன்னரிடம் அனுப்பிவந்தது. அதற்குப் பிரதியுபகாரமாக மன்னரிடமிருந்து விலைமதிக்க முடியாத மாணிக்கக்கல் பதித்த தங்க ஆபரணங்கள் அடங்கிய பேழைகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு வழங்கப்பட்டன. பேழைகளின் அளவு சரக்குக்கப்பலில் பாதிக்குமேல் கொள்ளக்கூடியதாக இருந்தது.”

இது உண்மையிலேயே ஒரு இலாபகரமான பரிமாற்றம் தான்.

ஒருவருடத்தின் பின்பு, தீவில் தமது பாதுகாப்பான இருப்பை 1640 இல் உறுதி செய்துகொண்ட ஒல்லாந்தர், பலம் மிக்க வீரனான இராஜசிங்க மன்னனுடன் மேலும் பேரம் பேசலாயினர்.

அது பற்றி பின்வரும் கடிதத்தில் விபரிக்கப்பட்டுள்ளது:

பட்டாவியாவிலுள்ள ஆட்சிமன்றத்திலிருந்து டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் பணிப்பாளருக்கு

போர்த்துக்கேயரின் வெளியேற்றத்திற்குப் பின்னர், நாம் கேம்லர் எனும் இடத்தில் தரையிறங்கினோம். மேன்மைதங்கிய சிங்கள மன்னன் மேல் எமக்கு சந்தேகம் இருந்தபோதிலும் எமது கப்பல்கள் சரியான இடத்துக்கு பிரச்சனைகள் ஏதுமின்றி வந்து சேர்ந்தன. போர்த்துக்கேயர்கள் நாங்கள் தரையில் கால் பதித்துவிட்டோம் என்பதைக் கேள்விப்பட்டார்கள். . . . . . எம்மீது தாக்குதலை நடத்தினார்கள்.
சக்கரவர்த்தி தமது படைகளை எம்முடன் இணைக்கத் தீர்மானித்தார். எதுவித சேதமும் இன்றி நீர்கொழும்புக் கோட்டையைக் கைப்பற்றினோம். கப்பலில் ஏறிய போர்த்துக்கேயர்கள் சிங்களவர்களால் கொலை செய்யப்பட்டார்கள். ‘ஹீர் லு}க்காஸ் என்பவன் மன்னருடன் தகராற்றில் ஈடுபட்டான். இப்பிரச்சனைகளைக் கையாள்வதற்காக தளபதி கோஸ்டர் என்பவர் தலைவராகவும் அவருக்குத் துணையாக அட்ரியான் அந்தனீஸ{ம் நியமிக்கப்பட்டார்கள். உடனடியாகக் கீழ்வரும் நிபந்தனைகளின்பேரில் கோஸ்டர் மன்னனுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன்படி ஒல்லாந்தர் திருக்கோணமலைக் கோட்டையைக் கைவிட்டுச் செல்லவேண்டுமெனவும், ஆயுதங்களைச் சமமாக பிரித்துக்கொள்வதெனவும், அதாவது பத்து யானைகளாக இருந்தால் ( ஐந்து தந்தங்களுடனும் ஐந்து தந்தமற்றதும் ) பிரித்து மட்டக்களப்புக் கோட்டைக்கு கொண்டுசெல்லவேண்டுமெனவும் இணங்கிக்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் 1640 ஏப்ரல் இருபதாம் திகதி கோட்டை கைவிடப்பட்டதுடன் அரண்கள் அழிக்கப் பட்டன. “

போர்த்துக்கீசர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டமை.

1658
அதே வேளை பிரான்சியரும் பிரித்தானியரும் கிழக்கில் தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்கின்றார்கள் என்ற வதந்திகள் ஒல்லாந்தரைச் சென்றடைந்தன. உடனடியாக, பிரெட்ரிக் கோட்டையை மீண்டும் தம் வசமாக்கிய ஒல்லாந்தர், அதனைப் பெருப்பித்துக் கோயில் மலை என்றும் அழைத்தார்கள். இந்தக்கோட்டையும், கொட்டியாரத்திலுள்ள மற்றொரு கோட்டையும் மீளவும் திருத்திப் பலப்படுத்தப்பட்டன. போர்த்துக்கேயர்கள் 1658 அளவில் முற்றாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

இப்பொழுது நாம் இன்னுமொரு பகுதியிலிருந்த முடிவு பெறாத முயற்சி ஒன்றினையும் பார்ப்போம்.

1671
ஒல்லாந்தருக்கெதிரான பிரான்சியரின் எழுச்சி.


கடற்படைத்தளபதி டீ லா கை என்பவர் தனது 13 கப்பல்களுடன் கொட்டியாரத்திலுள்ள ஒல்லாந்தரின் கோட்டையைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு மரியாதை அளிக்கும் நோக்கில் ஒல்லாந்தர் நட்புரீதியாக ஏழு மரியாதை வேட்டுக்களை தீர்த்தார்கள். ஆனால் பிரான்சியரோ பதிலடியாக கடுமையான ஐந்து வேட்டுக்களைத் தீர்த்தார்கள். மிரண்டுபோன ஒல்லாந்தர் கோட்டையை அழித்ததுடன் அதனைக் கைவிட்டு திருக்கோணமலைக்கு ஓடித்தப்பினார்கள். அதன்பின்னர் பிரெஞ்ச் படையினர் சோபர் தீவுகள் இரண்டையும் பலப்படுத்தியதுடன் கொட்டியார முனைக்கு யானை முனை எனவும் பெயரிட்டார்கள். இந்த இரு தீவுகளும் லெப்டினன்ட் சோபர் எனும் பிரித்தானிய இராணுவ அதிகாரியின் பெயரால் சோபர்ஸ் தீவுகள் என பின்னைய நாட்களில் குறிப்பிடப்பட்டன. ‘செல்லும் வழிக்கான வாசல்’ என்ற கருத்தில் ““Dwars-in-de-weg”” என ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட இடத்திற்கு “Isle du soleil” எனப் பெயர் மாற்றம் செய்தார்கள். “பிரிதோன்” கப்பலின் பணியாளர்கள் அந்த முனையில் வேலை செய்த காரணத்தினால் பிற்காலத்தில் பிரிதோன் முனை எனவும் அழைக்கப்பட்டது. ஒவ்வொரு கப்பலிலிருந்தும் 20 பேர் கோட்டையைப் பலப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் பிரதான பொறியியலாளர் என்று ஒருவரும் இருக்கவில்லை. ஒரு கப்பலிலிருந்த பாதிரியார் ஒருவர் தாமே முன்வந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன் பின்னர் அத்துறையில் அவர் ஒரு வல்லுனராகவும் மாறிவிட்டார்.

பிரான்சியர் கண்டி மன்னருக்கு து}துவர்களை அனுப்பியதன் மூலம் 700 சிங்கள இராணுவ வீரர்களைப் பெற்றுக்கொண்டதுடன் உணவுப்பண்டங்களைப் பெறுவதற்கான உறுதிமொழியினையும் பெற்றுக்கொண்டார்கள்.
வீரர்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். ஆனால் உணவுப்பொருட்கள்தான் வந்தபாடில்லை. அவ்வேளை ஒல்லாந்தரின் கப்பலொன்று பிரெட்ரிக் கோட்டைக்கு அண்மையில் பிரவேசித்து நங்கூரமிட்டது. டீ லா கை என்ற பிரெஞ்ச் தளபதி கடற்படைத் தலைவனைச் சந்தித்து வரவேற்றான். வான் லொய்ன்ஸ் என்ற ஒல்லாந்த தளபதி பிரெஞ்சுத் தளபதியின் கோரிக்கையை நிராகரித்ததுடன் பழைய சம்பவங்களையும் நினைவுபடுத்தினான்.

பிரெஞ்சு தளபதியால் உணவுப்பொருட்களைச் சேகரிப்பதற்காக அனுப்பப்பட்ட இரண்டு கப்பல்களும் ஒல்லாந்தரால் வழிமறிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. கப்பலில் நோயாளிகளும் உணவுப் பற்றாக்குறையும் இருந்த போதிலும் உணவைத் தேடிச் செல்லவேண்டுமென தளபதி டீ லா கை கட்டளையிட்டான். கப்பலானது உணவுப்பொருட்கள் நிரப்பப்பட்டதும் மீண்டும் திருக்கோணமலைக்குத் திரும்பி வரும் என்பதை கண்டி மன்னருக்கு விளக்குவதற்காக கவுண்ட் டீ லனோரல் என்பவன் து}துவனாக அனுப்பப்பட்டான். ஆனால் சற்றும் மரியாதையற்ற ஒரு முறையில் மாளிகையின் வாசலைக் குதிரையில் கடந்து சென்றமையானது மன்னருக்கு கடும் சினத்தை உண்டாக்கியது. இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகியும் து}துவனாகச் சென்றவன் மன்னனைச் சந்திக்க முடியவில்லை. அதனால் பொறுமையிழந்த அவன் தனது வீட்டுக்குத் திரும்பினான். இதன் காரணமாக பிரான்சியரால் அவன் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் சங்கிலியால் கட்டப்பட்டு ஆறு மாதம் சிறையிலும் இடப்பட்டான்.

ஒல்லாந்தரை அவர்களின் இடத்தில் இருக்கவிட்டு பிரான்சியர் வெளியேறல்.

பிரெஞ்சுத் தளபதி டீ லா கை ஒரே ஒரு கப்பலையும் 50 பணியாளர்களையும் கோட்டைக்குக் காவல் வைத்துவிட்டு வெளியேறினான். ஒல்லாந்தர் கொட்டியாரத்தில் கண்டி மன்னனின் வீரர்களிடம் தோல்வியடைந்திருந்தாலும் பிரான்சியரின் கோட்டைகளைத் தளபதி தம்பர்கேம் தலைமையில் விரைவில் கைப்பற்றினார்கள்.

பிரித்தானிய கடற்படையின் வருகை.

பிரெட்ரிக் கோட்டைக்கான சீரமைப்புக்கள் மற்றும் ஐந்து காப்பரண்களுக்கான இடங்களைத் தெரிவுசெய்து ஒதுக்குதல் போன்றவற்றுக்கு அப்பால் உட்துறைமுகத்தில் கப்பல்கள் மீதான தமது ஆதிக்கத்துக்காக ஒஸ்டன்பேர்க் என்ற இடத்தில் புதிய பீரங்கிப் ப்டையை உருவாக்கினார்கள்.பெரிய பிரித்தானியா தனது தேவைக்காக ஒல்லாந்து மற்றும் பிரான்சுடன் போரில் ஈடு பட்டிருந்த அதேவேளை இரண்டு குறிக்கோள்களுக்காக திருக்கோணமலையை கைப்பரற்றத்திட்டமிட்டார்கள்

1. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆள்புலத்தை விரிவுபடுத்துதல்

2. கடலாதிக்கம் - அட்மிரல் சவ்ரன்(Admiral Suffren ) அவர்களின் கீழ் அந்தக் கடற்பகுதியில் இயங்கிய பிரெஞ்சு கடற்படையணிக்கு சுமார் இரண்டாயிரம் மைல் பிரதேசத்தில் எந்தப் படைத்தளமும் இல்லாதிருப்பதை உறுதி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதி.

போட்டியாளர்களான ஐரோப்பியர்களைக் கிழக்கில் எதிர் கொள்ள அட்மிரல் எட்வெர்ட் ஹ{கஸ் (Admiral Edward Hughes) அவர்களின் கட்டளையின் கீழான கப்பற்படையும், சேர் ஹெக்டர் முன்ரோ (Sir Hector Munro ) தலைமையிலான தரையிறங்கு படைப்பிரிவும் முக்கியமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்தியாவின் கிழக்குக்கரையில் அமைந்துள்ள நாகப்பட்டினத்தை டச்சுக்காரர்களிடமிருந்து 1781 இல் கைப்பற்றியபின் ஹ_கஸ் அவர்கள் 1782 ஜனவரி 2 இல் திருக்கோணமலைக்குப் புறப்பட்டார். அவரது கப்பற்படை மற்றும் மாலுமிகளுக்கு மேலதிகமாகச் சில எறிகணைகளும், ஐநூறு சிப்பாய்களும் ஒரு முன் செல்லும் படைப்பிரிவும் அவரிடமிருந்தன.


பிரெட்ரிக் கோட்டையும், ஒஸ்டன்பேர்க் கோட்டையும் கைப்பற்றப்பட்டமை


ஜனவரி 4 ஆம் திகதி டீயஉம டியல இல் நங்கூரமிட்ட அவர்கள் மறுநாள் தரையிறங்கி எதிர்பாராத வகையில் கோட்டையைக் கைப்பற்றினர். அங்கிருந்த பெரும்பாலான வீரர்கள் ஒஸ்டன்பேர்க்கிற்குத் தப்பிச்சென்றனர்.
மூன்று நாட்களின் பின்னர் அட்மிரல் , கோட்டை வீரர்களைச் சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்து, தனது முதன்மைப் பொறியியலாளரான மேஜர் கெல்ஸ் (Major Gells ) என்பவரை வேவு பார்க்கும் நோக்குடன் தந்திரமாகத் து}து அனுப்பிவைத்தார்.
மிகச்சிறப்பாக வேவு பார்த்துவந்த மேஜர் கெல்ஸ் பின்னர் மீண்டுமொருமுறை தன்னைத் து}தனுப்பினால் தான் இன்னொருமுறை கோட்டையை நன்கு ‘பார்த்து’ வரலாம் என்று கூறினார். அதன் பின்னர் ஒஸ்டன்பேர்க்கைத் தாக்கி, கோட்டையிலிருந்து சுமார் 300 யார் தொலைவிலிருந்த ஒரு மலையைப் பிரித்தானியர்களால் கைப்பற்ற முடிந்த போதும், பாரமான சுடுகலன்களை அவர்களால் மலைமீது து}க்கிக்கொண்டுபோக முடியவில்லை. எனினும,; மறுநாள் துப்பாக்கிச் சு10ட்டின்மத்தியில் அவர்கள் கீழ்ப்புறக்கோட்டையினு}டாக உள் நுழைந்தனர். இந்தச் சண்டையின்போது ஓர் அதிகாரியும், இருபது வீரர்களும் மரணமடைந்த அதேவேளை இரு அதிகாரிகளும் 40 வீரர்களும் காயமடைந்தனர். டச்சுக்காரர்களில் 13 பேர் மரணமடைந்த அதேவேளை 9 அதிகாரிகள், 350 ஐரோப்பியர்கள் (இதில் பத்து தொழிநுட்பக் கலைஞர்களும் அடக்கம். ) 60 சீனர்கள் மற்றும் மலாய்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். இரண்டு கோட்டைகளிலுமிருந்து 62 துப்பாக்கிகளும் 6 பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன.

ஹ_கஸ், அந்தப் பருவக்காற்றுக் காலத்தின் இறுதிவரை திருக்கோணமலையைத் தனது தளமாக்கிக் கொள்ள முடிவெடுத்தார். கப்டன் போனவோக்ஸ் (Captain Bonneveaux) தலைமையில் அவர் நியமித்த கோட்டைக் காவற்படையின் விபரம் பின்வருமாறு;-


98 ஆவது படையணி (North Staffordishires) 55
பீரங்கிகள் (Artillery) 42
தொண்டர் படைவீரர்கள் 495

இதுவே அவ்வேளையில் இருந்த படையணி எனினும் பின்னர் போனவோக்ஸ் அவர்களிடமிருந்து பொறுப்பைக் கையேற்ற கப்டன் மக் டோவல் (Captain Mc Dowal) தலைமையில் அது 78 ஆவது , மற்றும் 42 ஆவது படைப்பிரிவுகளைச்சேர்ந்த 200 வீரர்களுடன் மேலும் பலப்படுத்தப்பட்டது.


1782 போய்டின் சாகசம்.


திருக்கோணமலையைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து கொழும்பின் மீது தாக்குதல் தொடுக்கவேண்டிய தேவை பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டது. இதற்கு கண்டியரசனின் உதவி வேண்டியிருந்தது. இப்பணிக்கு மெட்ராஸ் ஆளுநரின் செயலாளரான ஹ_க் போய்ட் (Hugh Boyd) து}துவராக அனுப்பப்பட்டார். அவர் ஹ_கஸ் தரையிறங்கிய நாளான ஜனவரி 5 ஆம் திகதிக்கு மறுநாள் திருக்கோணமலையிலிருந்து புறப்பட்டபோதும் தன் நோக்கத்தை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டார். அவர் திருக்கோணமலைக்குத் திரும்பியபோது அவர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட போர்க்கப்பல் அங்கிருந்து போய்விட்டிருப்பதைக் கண்டு, வாடகைக்கு ஒரு படகினை அமர்த்தி, ஏப்ரல் 15 ஆம் நாள் சென்னைக்குப் புறப்பட்டார்.

மறுநாள் அப்படகு பிரேஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அப்போது அவர்கள் ஒரு பொதி படகிலிருந்து எறியப்படுவதைக் கண்டனர். அப்பொதியினுள் போய்ட் அவர்களின் ஆவணங்கள் இருந்தன. பொய்ட் கைது செய்யப்பட்டார். அந்த பொதியினுள் இருந்த ஆவணங்கள் இறுதியில் ஒல்லாந்தைச் சென்றடைந்தன. கடல் நீரால் சிறிதளவு பாதிக்கப்பட்டிருக்கும் அந்த ஆவணங்களை கொழும்பு ஆவணக்காப்பகத்தில் இப்போதும் காணமுடியும்.


பிரேஞ்சு பிரித்தானிய கடற் சமர்கள்.


பிரித்தானியர்கள் திருக்கோணமலையைக் கைப்பற்றுவதில் முனைப்பாயிருந்த அதே வேளை, பிரேஞ்சுக்காரர்கள் கோரமண்டல் கடற்பகுதியில் பிரித்தானியர்களுக்கு எதிராக செயற்பட்டவண்ணமிருந்தனர்.

உற்சாகமும் துணிவும் மிக்க மாலுமியான அட்மிரல் சவ்ரன் , பிரித்தானிய கப்பற் படை புறப்பட்டதை அறிந்ததும் அதனை எதிரிகளைத் தோற்கடிக்கும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தத் தீர்மானித்தார்.

ஹ_கஸ் அவர்களுடன் சவ்ரன் அவர்கள் ஈடுபட்ட ஐந்து போர்களிலும் இருதரப்பும் கடுமையாகப் போரிட்டபோதும் இவற்றுள் எத்தரப்பும் அறுதியான வெற்றியினை அடைந்ததாகக் கூறமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இவ்வைந்து போர்களும் குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன.


முதற் கடற் போர் - சட்ராஸ் (Sadras)


மூன்று சாதாரண கப்பல்களையும,; இரண்டு போர்க்கப்பல்களையும் கொண்டிருந்த பிரேஞ்சுக்காரர்களுக்கு பெப்ரவரி 17 ஆம் நாள் நடைபெற்ற முதற் போர் மிகப்பெரும் வெற்றியைக் தந்திருக்கக் கூடும்.

ஆனால், மூன்று காரணிகள் அவ்வெற்றியைத் தடுத்துவிட்டன.

முதலாவதாக, பண்டப்பரிமாற்றம் செய்துகொண்டிருந்த வாகனத் தொடரணியிலிருந்து அவர் பிரிக்கப்பட்டார். சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஏனையவர்கள் துரத்தியடிக்கப் பட்டார்கள்.

இரண்டாவதாக, காற்றுச் சாதகமாக இருந்தும் சவ்ரன் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

மூன்றாவதாக, இந்தச் சமரின் பின்னர் பிரேஞ்சுப்படையினர் சென்னைக்குத் தெற்கிலுள்ள கூடலு}ரைக் கைப்பற்றி சவ்ரனுக்கு ஒரு நல்ல தளத்தை வழங்கினர்.


1782
இரண்டாவது கடற்போர்- (திருக்கோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில்)


ஹ_கஸ் அவர்கள் 12 ஆம் திகதி ஏப்ரல் மாதம் நோயாளிகளையும் உதவிப்படைகளையும் திருக்கோணமலைக்குக் கொண்டு செல்லும் போது இது நிகழ்ந்தது. சவ்ரனைவிட ஒரு கப்பல் குறைவாக இருந்த போதிலும் நோயாளிகள் நிறைந்த இரண்டு கப்பல்கள் புதிதாக வந்து சேர்ந்தன.எனவே அவர் எதிரிகளைச் சுற்றி திருக்கோணமலைக்கு தப்பிச் சென்றுவிட்டார். காற்று திடீரென நின்றுபோனதால் அவருடைய செயற்பாடுகள் முடக்கப்பட்டன. சவ்ரனின் தளபதிகளின் உற்சாகம் தளர்ந்துபோன காரணத்தினால் அவர் எந்த சாதகமான முடிவையும் எடுக்க முடியாமற் போய்விட்டது.ஹ_கஸ் இனுடைய ஒரு கப்பல் செயலற்றிருந்தது.ஆனால் பிரெஞ்சு அட்மிரலுடைய கடற்படைத்தொகுதி கடலிற் தொடர்ந்து இருக்கும் பொறுமையை இழந்திருந்தது. அவரிடம் ஆட்களும் உதிரிப்பாகங்களும் வெடி மருந்துகளும் பற்றாக்குறையாக இருந்ததோடு நோயாளிகள் சுமையாகவும் இருந்தார்கள்.அவர் மறுநாளிராணுவ நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை.சமர் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது
;
1782
மூன்றாவது கடற்போர் - நாகப்பட்டினம்.

ஜூலை 6ஆம் திகதி சவ்ர்ன் நாகப்பட்டினத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தார்.அவரது கப்பற்படை திடீரென வீசிய புயலில் சிக்கிக்கொண்டதுடன் ஒருகப்பல் செயலிழந்தும் போனது.இச்சம்பவத்தினால் இரு கப்பற்படைகளும் சம எண்ணிக்கை கொண்டனவாக ஆகிவிட்டபொழுதும் சுடுகலன் ஆற்றல் ஹ_கஸ் இடம் சற்று அதிகமாகவே இருந்தது.ஹ_கஸ் இற்கு கிடைக்க வேண்டிய அறுதியான வெற்றி, காற்றின் திசைமாற்றத்தினால் கைநழுவிப் போயிற்று. அவர் மறுபடி முயற்சி செய்தபோதிலும்,அவரால் பிடியை இறுக்கமுடியாமல் போனது.பிரித்தானியர்களைவிட பிரேஞ்சுக்காரர்கள் அதிக இழப்புக்களைச் சந்தித்தபோதும் மறுபடி ஒருமுறை போர் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.



1782
பிரித்தானியர் திருக்கோணமலையை ஒப்படைத்தமை


வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தில் (ஒக்டோபர்-ஜனவரி) தங்குவதற்கான ஒரு துறைமுகத்திற்காகவே சவ்ரன் திருக்கோணமலையைக் கைப்பற்றமுனைகிறார் என்பதை அறிந்திருந்த ஹ_கஸ், மதராஸ் அரசுக்கும் ஜெனெரல் சேர் எய்ர் கூட் அவர்களிற்கும்; கோட்டையின் முன்னரங்கத்தில் துருப்புக்கள் போதியளவில் இல்லை என்பது குறித்து அடுத்தடுத்து மடல்கள் அனுப்பினார.; பிரேஞ்சுக்காரர்கள் இந்த முக்கியமான துறைமுகத்தைக் கைப்பற்றினால் தனது கப்பற்படை தங்குவதற்குப் பம்பாயைவிடக் அண்மித்ததாக எந்த இடமும் இருக்காது என்பதையும், பிரேஞ்சுக்காரர்கள் தரையிறங்குவதில் குறுக்கிடக்கூடிய எலிசபெத் முனையிலிருந்த முக்கிய பீரங்கிப்படையைப் போதியதுருப்புக்கள் இல்லாமையால் பாதுகாப்பு வழங்கச் சாத்தியமில்லாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதிய பலமற்ற நிலையில் மக் டவ்ல் அவர்களுக்;கு பாதுகாப்பைப் பலப்படுத்திக்கொள்ள ஒரு மாத காலமே இருந்தது.இரண்டு கோட்டைகளிலும் போதிய துப்பாக்கிகள்,வெடிமருந்து மற்றும் 6 மாதங்களிற்குத் தேவையான உணவுக்கையிருப்பு என்பன இருந்தபோதும் நிர்வாகம் மிக மோசமாக இருந்தமையால் வெடிமருந்து ஒரு கோட்டையிலும், சுடுகலன் மற்றொரு கோட்டையிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பிரேஞ்சுக் கப்பற்படை Backbay இல் ஓகஸ்ட் இரண்டாம் திகதி நங்கூரமிட்டது.மறுநாள் அதிகாலை இரண்டு மணியிலிருந்து விடியும் வரை முழுப்பலத்துடன் 2410 வீரர்கள் மூன்று நாட்களுக்கான உணவுடன் எலிசபெத் முனைக்குத் தெற்காகத் தரையிறங்கி “ஓர்ஸ் ஹில் (Orr’s Hill);;” இற்கும் கடலுக்கும் இடையிலான நீரிணைக்குக் குறுக்காக அணிவகுத்தனர்.

கோட்டைச் சுவர்களிலிருந்து சுமார் 400-600 யார் து}ரத்தில், தற்போதைய மீன் சந்தைக்கு அருகில் ஒன்றும், Maidan இற்கு அருகில் இரண்டுமாக மூன்று பீரங்கிப் படைப்பிரிவுகளுக்கான நிலைகள் அமைக்கப்பட்டன.
அடுத்தநாள் பிரெஞ்சு அணிகள் மீது பீரங்கிப்படை தோல்விகரமாக தாக்குதல் நடத்தினார்கள்.இரண்டு நாட்களுக்குப்பின்னர் பிரெஞ்சுக் காலாட்படை 24 மணி நேரமாக பஸ்டனின் படைகளை மிக மோசமாக தாக்கியது. எனினும் தகர்ப்பு நிறைவேறவில்லை.இது “பிரான்சியர் மீதான கருணை” என்று கூறப்பட்டது.

ஹ_கஸ் , சவ்ரனின் கப்பற்படையால் தோற்கடிக்கப்பட்டதாக எண்ணி மக் டவ்ல் சரணடைந்தார். சரணடைவதற்கான உடன்படிக்கை, ஒரு துப்பாக்கி வேட்டுக் கூடத் தீர்க்கப்படாத நிலையில் சரணடைந்த ஒஸ்டன்பேர்க் இற்குமாகச் செய்யப்பட்டது.

பின்னர் ஒரு விசாரணை நடைபெற்றது. மக் டவ்ல், பொனவொக்ஸ் மற்றும் முதன்மைப் பொறியியலாளரான பங்க்ஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனராயினும், பீரங்கிப்படையின் கப்டன் லெப்.சக்ஸன் , துப்பாக்கி மற்றும் குண்டுகளைச் சரியாகப் பயன்படுத்தாதமைக்காகக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு ஆறு மாதங்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டான்.


1782 நான்காவது கடற்போர் - திருக்கோணமலை.


சரணடைந்து மூன்று நாட்களின் பின் செப்டெம்பர் இரண்டாம் திகதி மாலை சவ்ரன் தனது ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இரவு உணவு வழங்கிக் கொண்டிருந்தவேளை ஹ_கஸ் இன் கடற்படை வந்தடைந்தது. ஹ_கஸ், பிரெட்ரிக் கோட்டையில் பிரெஞ்சுக்கொடி பறப்பதைக் கண்டு திகைப்படைந்தார். காற்று சாதகமாக இருந்திருந்தால் துறைமுகத்தில் இனனும் ஒழுங்கற்ற நிலையிலேயே நின்றிருந்த சவ்ரனின் கப்பற்படையை அவர் தாக்கியிருப்பார்.

சவ்ரன் தனது கப்டன்களில் பலரை, வினைத்திறனின்மை மற்றும் சுறுசுறுப்பின்மைக்காகப் பதவி விலக்கியிருந்தார். புதிய கப்டன்கள் பெரியளவில் நம்பகமானவர்களாக இருக்கவில்லை. அவர்கள் சவ்ரனை தாக்குதல் நடத்தாமலிருக்கத் து}ண்டியபோதும் தன்னுடைய 15 கப்பல்களுடன் ஒப்பிடுகையில் ஹ_கஸிடம் 12 கப்பல்கள் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் ஹ{கஸ்ஸை சந்திக்கப் புறப்பட்டார்.

ஒரு முழு நாள் அவகாசம் இருந்தபோதும் சவ்ரனால் தனது கப்பல்களைத் தாக்குதலுக்குப் பொருத்தமான ஒழுங்குக்குக் கொண்டுவர இயலாதிருந்தது. முடிவில் பொறுமையிழந்த அவர், ஒழுங்கற்ற நிலையிலேயே தாக்குதலைத் தொடங்கினார்.இதன்விளைவாக, முன்னால் அவரது 5 கப்பல்கள் இரண்டு பிரித்தானியக் கப்பல்களைத்தாக்க, நடுப்பகுதியில் மூன்று கப்பல்கள் 5 எதிரிக் கப்பல்களுடன் மோதின. ஏனையவை அதிக து}ரத்திலிருந்து தாக்கிக்கொண்டோஅல்லது தாக்குதலில் பங்குபற்றாமலோ இருந்தன.

திடீரென்று காற்று திசைமாறியிருக்காமலும் அவரது கப்பல்களிற் சில ஏறத்தாழ செயலற்ற நிலையை அடைந்தருக்காமலும் இருந்தால், ஹ_கஸ், பிரெஞ்ச் படையை நிர்மூலமாக்கியிருப்பார்.அந்நிலையில் இருள் கவிந்தது. பிரெஞ்சுக்கப்பல்கள் துறைமுகத்தினுள் நகர்ந்தன. ஒருகப்பல் உள்ளே நுழைந்த வேளை, பாறைகளின் மேல் மோதியது.

மறுநாள் ஹ_கஸ் தொடர்ந்து சண்ணடையிடப் போதிய பலம் இல்லை என்று தீர்மானித்து, மதராசுக்குத் திரும்பி, பின்னர் படையை மீளப ;பலப்படுத்துவதற்காக பம்பாய் சென்றார்.


1783
ஐந்தவது கடற்போர்- கூடலுர்.


அடுத்த ஆண்டு ஜூன் இருபதாம் திகதி, இவ்விரு கடற்படைகளுக்குமிடையே ஒரு கடைசிப்போர், மதராசுக்குத் தெற்கிலுள்ள கூடலு}ரில் நடைபெற்றது.இதற்கு முன்னர் நடந்த எல்லாச் சண்டைகளிலும் பிரித்தானியர்களிடம் கப்பல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும் சுடுதிறன் அதிகமாக இருந்தது என்பதால், ஏறத்தாழ சமபல நிலையிலிருந்தனர்.இந்தக்கடைசிச் சண்டையில் பிரித்தானியர்களிடம் பிரான்சியரைவிட இரு கப்பல்கள் அதிகமாக இருந்தபோதும் பணியாட்கள் போதாமலிருந்தது.அதனால் வெற்றியின் பெருமை இருதரப்பாலும் பகிரப்பட்டது.

1939 கிறிஸ்மஸ் காலத்தில் போர்க் கப்பலான "சவ்ரன்" உம் , தளபதி சவ்ரனுடன் இந்த ஐந்து போர்களிலும் ஈடுபட்ட அட்மிரல் ஹ_கஸ் இன் பரம்பரையில் வந்த கப்டன் ஹ_கஸ் இன் கட்டளையின் கீழான விமானந்தாங்கிக் கப்பலான "Glorious" உம் திருக்கோணமலைத் துறைமுகத்தில் ஒன்றாகத் தரித்திருந்தன.


வில்லியம் ஹிக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்.


ஒரு வழக்கறிஞரான வில்லியம் ஹிக்கி ஆர்வத்தைத் து}ண்டும் தனது “வரலாற்றுக் குறிப்புக்கள்“ என்ற நூலின் மூன்றாவது தொகுதியில் திருக்கோணமலையில் தனது அதிர்ச்சியூட்டும் அனுபவங்களைக் கூறியுள்ளார். அவ்வேளை திருக்கோணமலை பிரான்சியரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அவர் தனது மனைவியுடன் கல்கத்தாவுக்கு சென்றுகொண்டிருக்கும்போது அவர்கள் பயணம் செய்த கப்பல் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் காரணமாகத் திசைமாறி ஒருவாறு திருக்கோணமலையை வந்தடைந்தது. ஹிக்கி அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டார். சவ்ரன் வெளி அலுவல்கள் காரணமாகக் கோட்டையில் இருக்காததால், பதில் ஆளுநரான லே செவெலியார் டெஸ் ரோயஸ் பொறுப்பதிகாரியாக இருந்தார். அவரது கோபம் மற்றும் விட்டுக்கொடுக்காத பண்பற்ற தன்மை என்பவற்றால் உலகத்தாரால் வெறுக்கப்பட்டவர். சவ்ரன் கோட்டைக்குத் திரும்பியபின் சவ்ரனும் ஹிக்கியும் நெருங்கிய நண்பர்களானார்கள். அவர்கள் இருவரும் நீண்ட நேரத்துக்குப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவ்வேளையில் தன்மான உணர்ச்சி கொஞ்சமேனும் இல்லாத தனது சில தளபதிகளால் ஏற்படும் சிரமங்களைப்பற்றி சவ்ரன் கூறுவார். கடற் தளபதி ஹ_கஸ் பற்றி உயர்வாகப் பேசுவார். ஆனால் மதராஸ் ஆளுநராக இருந்த மார்கர் டனி பிரபு பற்றி அதிருப்தி தெரிவிப்பார். அவர் கடற்படைத் தளபதி ஹ_கஸ் அவர்களின் வித்தியாசமான உடைகளையும,; தோற்றத்தையும் பற்றி “நாகரீகமற்ற ஒரு பிரான்சியரை விட தோற்றத்தில் சிறிது தடித்த நாகரிகமற்ற ஓர் ஆங்கிலக் கசாப்புக்கடைக்காரன் போல் ஐந்தடி ஐந்தங்குல உயரத்தில் பருத்துக் காணப்படுகின்றார்” என்று விபரிப்பார். ‘அவை அவரது காலைக்கடன்களுக்கு இடையூறு செய்தாலும் கூட” காலை வேளைகளில் ஒரு வெறும் சட்டையை அணிந்தபடியிருக்கும் சவ்ரனைக் காணும் ஹிக்கி திகைப்படைவார். ஆனால் அவரது தோற்றம் எவ்வாறு இருந்தாலும் அவர் ஒரு அன்பு காட்டும் மனிதராயிருந்தார். அத்துடன் அவர் ஒரு மிகச் சிறந்த கடலோடி மட்டுமல்ல ஒரு நல்ல தலைவருமாவார் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

அவர்கள் சில காலம் கப்பலில் வைக்கப்பட்டிருந்த பிறகு பிரான்சிய பொறுப்பதிகாரி தனது வீட்டை அவர்களுக்குக் கொடுத்தார். ‘மிக மோசமான ஒரு திறந்த கொட்டிலுக்கு வீடு என்ற பெயர் பொருந்துமாயின் அதுவும் வீடுதான்” என்று கூறும் ஹிக்கி, ‘அது ஒரு ஒல்லாந்த கப்பலோட்டியின் வீடாக இருந்திருக்கின்றது. பூசப்படாத வெறும் சுவர்கள்: நீரொழுக்கு ஏற்படக்கூடிய கூரையும் வெளிச்சுவர்களும்- உண்மையில் கல்கத்தாவிலுள்ள எனது வளர்ப்புப் பறவைகள் கூட சிறப்பாக அடைக்கப்பட்டுள்ளன”.

எல்லாவற்றுக்கும் மகுடமாக நுளம்புகள் அவர்களைக் கடுமையாகத் தாக்கின. அவர்கள் அங்கிருந்த இரண்டு ஆங்கிலக் கொடிகளை ஒன்றாக இணைத்துத் தைத்து, கட்டிலின் மேல் விரித்தார்கள். ஹிக்கி இச்செயலை ‘மிக வெட்கக் கேடானது” என்கின்றார். இந்த விடயத்தில் ஒருவர்; அவரை நம்பலாம்.

திருக்கோணமலை முதலில் பிரித்தானியர்களாலும், பின்னர் பிரான்சியர்களாலும் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், ஒல்லாந்த ஆளுநரும் அவரது மனைவியும் இப்பொழுதும் பிரெட்ரிக் கோட்டையில் எல்லோருடனும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். “தண்ணீர் விருந்து”, சங்கீத மாலை, சீட்டாட்ட விருந்து போன்றனவற்றிற்காகப் பிரான்சிய அதிகாரிகளுடன் அதிகமான பொழுதை வெளியிடங்களிலேயே கழித்ததாகத் தெரிகின்றது. ஹிக்கியும் கடற்படைத்தளபதி ஒருவனின் சொந்தக்கப்பலில் இந்தியாவுக்குத் திரும்பவேண்டிய காலம் வரும் வரை மகிழ்ச்சியாகவே இருந்தார.;

1873
திருக்கோணமலை ஒல்லாந்தரிடம் மீளக் கையளிக்கப்படல்.

திருக்கோணமலை ஒரு வருட காலத்திற்கும் குறைவாகவே பிரான்சியரின் வசமிருந்தது. சமாதானம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் திருக்கோணமலை பிரான்சியரால் பிரித்தானியாவிடமும், பின்னர் பிரித்தானியாவால் ஒல்லாந்தரிடமும் கையளிக்கப்பட்டது.

1895
திருக்கோணமலை பிரித்தானியரால் ஒல்லாந்தரிடமிருந்து மீண்டும் கைப்பற்றப்படல்

மேஜர் கிறீன் ஹோவார்ட் அவர்கள் தனது பழைய 19ஆம் காலாட்படையணியின் வரலாற்றை எழுத எடுத்துக்கொண்ட முயற்சியானது, மேற்கண்ட விடயத்தைப் பற்றிய பல தகவல்களைப் பெற்றுத்தந்துள்ளது.
அவர் ஜோன் கர்ணர் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நேரடி ஆதாரத்தைக் கண்டு பிடித்தார். இவர் திருக்கோணமலை கைப்பற்றப்படபோது 73 ஆம் காலாட்படைப் பிரிவிலும், பின் 5 ஆண்டுகளாக 19 ஆம் படைப் பிரிவிலும் கடமையாற்றியவர். பட்டாவியன் குடியரசைப் பிரன்சியர் உருவாக்கியதால், இங்கிலாந்திற்குத் தப்பியோடிய ஒல்லாந்த இளவரசன் ஸ்டாத்தோல்டரின் யோசனைகளுக்கு இணக்கமாகப் பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டதன் பிரகாரம் மதராஸ் அரசாங்கம் பிரித்தானியர் மீதான படையெடுப்பை ஆரம்பித்ததும் அதன் வெற்றி இலங்கையின் கரையோரப் பிரதேசம் முழுவதும் பிரித்தானியர் வசமாவதற்கான ஆரம்பமாகவும் இருந்தது. இவ்வேளையில் ஒல்லாந்தரின் நிர்வாகமானது மிக மோசமாகக்காணப்பட்டது. அவர்களுடைய போரிடும் படைகள் பல கட்சிகளாகப் பிளவுபட்டிருந்தன.
படையினர் ஒழுக்கக்கேடானவர்களாகவும,; அடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். இந்தச் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பிரித்தானியர், பெரிய தாக்குதல்கள் எதுவுமின்றி இலகுவாக இலங்கையைக் கைப்பற்றினார்கள்.
கிளெஜ்ஹோர்ன் என்னும் ஸ்கொட்லாந்து தேசத்தவரின் தந்திரமிக்க நடவடிக்கையே கொழும்பின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

கேர்ணல் டீ மெயூரன் அவர்களால் விடுக்கப்பட்ட கட்டளைக்கமைய கொழும்பிலிருந்த ஒல்லாந்த துருப்புக்கள் உடனடியாக மாற்றப்பட, கொழும்பு பிரித்தானியரின் கையில் விழுந்தது. இளவரசர் ஸ்டட் ஹோல்டர் அவர்கள் இலங்கையின் ஒல்லாந்த அரசுக்கு பணித்த கட்டளை:-

மேன்மைதங்கிய பெரிய பிரித்தானிய மன்னரது துருப்புக்களைத் திருக்கோணமலை உள்ளிட்ட குடியேற்றப் பகுதிகளனைத்திலும் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். எம்முடன் நட்போடும், நல்லிணக்கத்தோடும் இருக்கும் ஒரு வல்லரசுக்குச் சொந்தமான துருப்பினரையும் கப்பல்களையும் நன்கு கவனியுங்கள். ஏனென்றால், அவர்கள் எமது குடியேற்றங்களைப் பிரான்சியர்களிடமிருந்து பாதுகாக்கவே வந்துள்ளார்கள்.

(ஒப்பம்) W. Pr. V. Orange

மேற்கண்ட கட்டளை தெளிவில்லாமலிருந்ததால் இலங்கையிலிருந்த ஒல்லாந்தர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் திருக்கோணமலைத் தளபதியான மேஜர் போர்ன்போர் 300 பிரித்தானிய துருப்பினரையும் வரவேற்று ஒஸ்டன்பேர்க் கோட்டையில் தங்குமிட வசதியளிப்பதற்கான கட்டளையையும் பிறப்பித்தார். பிரித்தானியர்கள் மோசமான எண்ணத்துடனேயே இலங்கை வருகின்றார்கள் என்ற வதந்தியைப் போர்ன்போர் அவர்களும் கேள்விப்பட்டிருந்தார். அவர் பல இடங்களில் இளவரசரின் கட்டளை பற்றி விசாரித்தறிந்தார். பல கடிதத் தொடர்புகளுக்குப் பின்னர் பிரித்தானியருடனான சகல தொடர்புகளையும் ஆளுநர் துண்டித்தார். 300 பிரித்தானிய துருப்பினரையும் வரவேற்க எடுத்த முடிவையும் ரத்துச் செய்தார். இறுதிவரை கோட்டையைப் பாதுகாப்பதென்றும் முடிவெடுத்தார். இந்த முடிவுக்கான ஆளுநரின் கடிதம் பதினைந்து ஆகஸ்ட் என திகதியிடப்பட்டது. ஆனால் பிரித்தானியப் படையினர் ஆகஸ்ட் 3 ஆம் திகதியே டீயஉம டியல இல் தரையிறங்கிவிட்டனர். விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்திலேயே கோட்டையை முற்றுகையிடுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர்.


பிரித்தானிய தரை மற்றும் கடற்படை.


கேர்ணல் ஸ்துவெர்ட் தலைமையில் தரையிறங்கும் 72 ஆம் படையணி:

72 அம் படையணி 750
73ஆம் 72 ஆம் படையணியின் துணைப் படையணி 350
அரச கல்லு}ரியணி 40
மதராஸ் பீரங்கிப் படைப்பிரிவு 350
முதலாம் சிப்பாய்ப் பட்டாளம் 650
23ஆம் சிப்பாய்ப் பட்டாளம் 650
முன்செல்லும் வீரர்கள் 220
மொத்தம் 3150


கடற்படைத் தளபதி ரெய்னரின் கீழ் கடற்படையில் ‘சபோர்க’;, ‘செஞ்சுரியன’; மற்றும் ‘டயமீட்’ ஆகிய யுத்தக் கப்பல்களும் இருந்தன.

முற்றுகைப் பீரங்கிகளின் தொகுதி :-

2-10" மோர்ட்டார்ஸ்
4-8" ஹவிட்சர்ஸ்
8 படைக்கலம் - 18 இறாத்தல்
4 படைக்கலம் 12 இறாத்தல்
தரைத்தொகுதி ஆறு பித்தளைப் படைக்கலம் 6 இறாத்தல்

தரையிறங்குதலும் முற்றுகையும்

‘டயமீட்’, புலப்படாதிருந்த பாறையொன்றில் மோதுண்டு Back bay இல் சேதத்துக்குள்ளானது. ஆயினும் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

ஓகஸ்ட் 3ஆம் நாள். பிரித்தானியர்களும், பிரான்சியரும் 1782 இல் தரையிறங்கிய இடத்திற்கு அருகாமையில், குடயபளவயகக முனைக்கு வடக்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள எலிசபெத் முனையில் காலைப் பொழுதொன்றின் போது துருப்புக்கள் தரையிறங்கின.

இருதரப்பும் தாம் போரில் ஈடுபடடிருக்;கிறோமா இல்லையா என்று தெளிவாக அறிந்திராத நிலையில், ஓகஸ்ட் 3 இற்கும் 17 இற்கும் இடைப்பட்ட காலம் புலனாய்வு வேலைகளுக்கும் முற்றுகைக்கான ஆயத்தங்களுக்கும் பிரித்தானியர்களால் செலவிடப்பட்டது.

18ஆம் திகதி பிரித்தானியரின் ஆயத்த வேலைகள் முடிவுக்கு வந்தன. அன்றும் அதற்குப்பின்னரான நாட்களும் கோட்டையிலிருந்து 900 யார் து}ரமான “முதற்பாதை“யினை (பருமட்டாக ‘Trinco stores "இற்கும் ‘நெல்சன் திரையரங்குக்கும் இடைப்பட்ட து}ரத்திற்கும் சற்று அதிகம்) அமைக்கும் வேலையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகச் செலவிடப்பட்டது.

ஓகஸ்ட் 20.

கோட்டையிலிருந்து 600 யார்களுக்கு முன்பாக, 18 இறாத்தல் எடைகொண்ட எட்டு சுடுகலன்களைக் கொண்ட ஊடறுக்கும் பீரங்கிப்படையொன்றை உருவாக்க ஆரம்பித்தார்கள். இந்த இடம் இன்றைய மீன் சந்தைக்கு அருகாக இருந்திருக்கவேண்டும். அன்றிரவு ஆணையர் இல்லத்திற்கு அருகில் சிறிய பதுங்கு குழி அமைக்கப்பட்டு, இரண்டு 8 அங்குல Howitz-carriage பீரங்கிகள் இயக்கப்பட்டன. அவர்களுடைய இடத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்களாக வேட்டுக்களைத் தீர்த்தார்கள். சில சேதங்கள் ஏற்பட்டதுடன் எதிரியின் கவனத்திலிருந்து வேலைசெய்பவர்கள் திசை திருப்பப்பட்டார்கள்.

ஓகஸ்ட் 21

தற்போதைய நெல்சன் திரையரங்கிற்கும் ஆணையாளர் இல்லத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், தொடர்ச்சியாகத் தாக்கும் மூன்று 12 இறாத்தல் எடையுடைய சுடுகலன்களைக் கொண்ட வரிசையாகச் சுட்டுத்தள்ளும் பீரங்கிப் படை அமைக்கப்பட்டது. இது வடமேற்குக் கோட்டை வாயிலுக்கும் கோட்டையின் உயர் மேடைக்கும் இடையிலுள்ள ; பீரங்கித் தடைவேலியை சுட்டழிப்பதற்காக நிலைப்படுத்தப்பட்டது.

ஓகஸ்ட் 22

ஊடறுக்கும் பீரங்கிப்படைக்கான சுடுகலன்களைப் பெற்றுக்கொள்வதில் நாட்கள் கழிந்தன.

ஓகஸ்ட் 23

படைகள் ரவெலின் மற்றும் வடமேற்கு முனைகளிலிருந்த எதிரிகளைத் தாக்கி, அவர்களது சுடுகலன்களை கைவிடுவதற்கு நிர்ப்பந்தித்தன. ஊடறுக்கும் பீரங்கிப்படை எங்கு ஊடுருவ வேண்டுமோ அவ்விடத்திற்கான தடையை அழித்தார்கள். மீண்டு வந்த எதிரிகள் எதிர்த் தாக்குதலை மேற்கொண்டார்கள்.

ஓகஸ்ட் 24

இரண்டு 10 அங்குல மோட்டார்கள் மூலம் பீரங்கிப் படையின் வலப்பக்க நிலையிலிருந்து (மீன் சந்தைக்குச் சமீபமாக ) தாக்குதலை ஆரம்பித்தனர். இது கோட்டையின் உயர் மேடைகளிலிருந்த ஒல்லாந்தருக்குப் பெரும் தொந்தரவைக் கொடுத்தது.

அன்றிரவு கோட்டைக் காவல் நிலையத்திலிருந்து மறைவாக வெளியே வந்த இரண்டு மலாயர்கள், ஊடறுக்கும் பீரங்கிப் படையைக் காவல் காத்திருக்கும் ஆட்கள் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறார்கள் என்பதை அவதானித்தார்கள்.

ஓகஸ்ட் 25

“கிறிஸ்” கத்திகளுடன் (மலாயரின் கத்தி ) விடியற்காலை 4 மணிக்கு கோட்டையிலிருந்து வெளியில் வந்த இருபத்தைந்து மலாயர்கள் பதுங்கு குழிகள் வழியாக ஊடறுக்கும் பிரங்கிப் படை இருந்த இடத்திற்கு வந்து,
எச்சரிக்கை செய்வதற்கு முன்பே இரண்டு பீரங்கிகளைச் செயலற்றதாக்கினர். அதன்பின் 13 பேர்களைக் கொன்றதுடன், படைக்கல அதிகாரி ஒருவரையும,; மேலும் 23 பேரையும் காயப்படுத்தினார்கள். அவர்களில் அதிகமானோர் உறக்கத்திலிருந்தவர்கள். மீண்டும் பிரித்தானியர் தமது நிலைகளைக் கைப்பற்றியதில் படைத்தலைவனும், வேறு சிலரும் காயமடைந்தார்கள். பாசறை ஊழியரின் உடையும், மலாயர்களின் உடையும் ஒரேவிதமாக இருந்ததால், அவர்களுடன் கலந்து அங்கிருந்து தப்பிவிட்டார்கள். அவர்களில் ஐந்து அல்லது ஆறு பேர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் டேர்ணர் அவர்களை மிகவும் பாதித்தது அவர் இவ்வாறு எழுதுகிறார்.-

ஒழுக்கமற்ற 25 கிளர்ச்சியாளர்கள் ‘பொதுவான சட்டத்திற்கும், வழமைக்கும் எதிராக 10 நிமிட நேரத்துக்குள் அத்தனை மனிதர்களையும் முற்றுகையில்லாத ஒரு காலத்தில் கொலைசெய்வதாயிருந்தால், உலகின் மதிப்பிற்குரிய சிறந்த துருப்பினரிடையே ; இவ்வளவு மரணங்களையும,;
காயப் பட்டவர்களையும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்”?


சுடுகலன்தாரிகளுக்காக மன்னிப்புக் கோருகிறார்.


பீரங்கிப்படையினர் து}ங்கிக்கொண்டிருந்ததைக்கண்டிராவிடின் அவர்கள் து}ங்கியதனை நான் நியாயப்படுத்த மாட்டேன்.கடமைக்கு வேண்டிய படையினர் சம எண்ணிக்கையில் இல்லாமையினால் பகலில் அவர்கள் உற்சாகமாக பணியில் ஈடுபடக்கூடியவாறு இரவில் து}ங்க அனுமதிக்கப்பட்டனர்.இதனால் அவர்களின் சேவைத்திறன் அதிகரிக்கும்.


கோட்டை அரண் தகர்ப்பு பிரகடனம்


ஓகஸ்ட் 26

கடைசியாக அரண் தகர்ப்பினை பொறியியலாளர்கள் பிரகடனப்படுத்தினர். எதிரிகளின் சுடுகலன்கள் அமைதியாகிவிட்டன. சரணடையுமாறு கோட்டைக்கு ஆணையிடப்பட்டது.

100 ஐரோப்பியர்கள் தனக்குப் பக்கபலமாக இருந்தால் கோட்டையைத் தன்னால் பாதுகாக்க முடியும் என ஒல்லாந்த ஆளுநர் தெரிவித்தார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். மலாயர்கள் மட்டும் விசுவாசமாகவும், ஆர்வமாகவும் அவரோடு இருந்தார்கள்.

ஐரோப்பியர்கள் அதன்பின் சுவாமிமலைக்கு அணிவகுத்துச் சென்று கொடியை இறக்கினார்கள். பிரித்தானியர் தெற்கு வாயிலை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள். பீரங்கிப்படைகள் வடபகுதித் தடைவேலிகளை ஊடறுத்துச் சென்று, அழிக்கப்பட்ட இடத்திலிருந்த வெட்டவெளியில் தமது ஆயுதங்களைக் கீழே வைத்தார்கள். இன்றும் அந்த இடத்தை நாம் காணலாம்.

கோட்டைக்காவலரணில் கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 அல்லது 135 ஆக அதிகரித்தது;. டேர்ணர் கூறுவது போல இந்தப்படையெடுப்பில் நோயாளிகளும் குடிகாரர்களும் உள்ளடங்குவர்.

பிரித்தானியர் தரப்பில் கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆகும்.

எல்லா ஒல்லாந்த கோட்டைகளும் மிகச்சிறிய முற்றவெளிகளையே கொண்டிருந்ததை டேர்ணர் விமர்சிக்கின்றார்.ஆனால் திருக்கோண மலையில் பாதுகாப்பான இடத்திலிருந்த பீரங்கிப்படையை அழிப்பதற்குச் சாதகமான வாய்ப்புக்கள் இருந்திருப்பதாக அவர் கருதுகின்றார்.
உடன்படிக்கை பற்றிய பதிவுகள் யாவும் இலங்கை ஆவணக்காப்பகத்தில் உள்ளன. அதிலுள்ள முக்கிய குறிப்பு மலாயர்கள் பற்றிய பிரித்தானியர்களின் உணர்வைக் காட்டும். அது பின்வருமாறு:

“மலாயர்களின் கத்திகள் பாதுகாப்பாக ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு அவர்கள் தமது தந்தையர் நாட்டுக்குச் செல்லும்போது திருப்பி ஒப்படைக்கப்படல் வேண்டும். ஏனெனில் அவர்கள் என்றுமே தமது ஆயுதங்களைக் கைவிட்டதில்லை”.



3 பிரித்தானிய ஆட்சியின் நிறுவுகை.


வெலிங்டன் பிரபு

வெலிங்டன் பிரபு முன்பு ஒருமுறை திருக்கோணமலையிலிருந்தார். அவருடைய குடும்பத்தினரால் அவருக்கு நெருக்குதல்கள் இருந்திராவிடின் 1795ஆம் ஆண்டிலேயே அவரால் திருக்கோணமலையைக் கைப்பற்றியிருக்க முடியும். அவர் தனது சேவையை முதன் முதலில் பிரித்தானிய முற்றுகைப் படைப் பிரிவுகளில் ஒன்றான 73ஆம் படைப்பிரிவில் கொடிதாங்கும் வீரனாக ஆரம்பித்தார். ஆனால் அயர்லாந்தின் அதியுயர் படைத்தளபதியின் கீழ் அவர் உதவிப் படைத்தலைவனாக நியமிக்கப்பட்டதை அடுத்து அவரால் அதே படையணியில் மீண்டும் இணைய முடியாமல் போய்விட்டது.

அவர் தனது சேவைக் கால ஆரம்பத்தில் பல வருடங்களை உதவிப்படைத் தலைவனாகவே கழித்ததால் இராணுவத் தலைவராக அவர் பதவி உயர்த்தப்படும் வரை இராணுவ அணியிற் பணி புரியும் வாய்ப்புக் கிட்டவில்லை. கொடிதாங்கும் வீரனாக 76 ஆம் (இரண்டாம் வெலிங்டன் பிரபுவினுடைய ) 41 ஆம் மற்றும் 12 ஆம் குதிரைப்படைப் பிரிவுகளிலும் அவர் சேவையாற்றியுள்ளார்;. இராணுவ தளபதியாக 58ஆம் (North hamptons), மற்றும் 18 ஆம் குதிரைப்படைப் பிரிவுகளிலும் அவர் கடமையாற்றினார். படைத்தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் ( முதலாம் வெலிங்டன் பிரபுவினுடையது) அவர் கடமையாற்றினார். தனது சேவைக் காலத்தின் ஆறு ஆண்டுகளிலேயே படைத் தலைவராக உயர்ந்த அவர் 33 ஆம் படைப் பிரிவில் இணைந்து பெல்ஜியத்தில் தனது திறமையைக் காட்டினார். அவர் இராணுவத் தளபதி வெஸ்லி எனும் பெயரில் 33 ஆம் படைப் பிரிவை 1796 இல் இந்தியாவுக்கு நடாத்திச் சென்றார். அவரது மூத்த சகோதரர் பாவித்த வெலஸ்லி எனும் குடும்பப் பெயரையே இந்தியாவில் பணியாற்றிய போது அவர் பயன்படுத்தி இருந்தார்;.

1800

1800 ஆம் ஆண்டில் கேணலாக அவர் பதவி வகித்ததுடன் கட்டளை கிடைத்தவுடன் பிரான்சியர்களிடமிருந்த மொரிஸ்ஸியஸ் தீவை முற்றுகையிடுவதற்கான படைக்குவிப்பையும் மேற்கொண்டார்;. எமது கப்பல் அங்கு துருப்பினரைக் கொண்டுசெல்வதற்கு ஏற்பட்ட தாமதித்தனால் படையெடுப்பு இரத்துச் செய்யப்பட்டது. ஜாவாவிலுள்ள ஒல்லாந்தரைத் தாக்குமாறு புதிய கட்டளை கிடைத்தது. ஆனால் இந்தக் கட்டளையும் பின்னர் இரத்துச் செய்யப்பட்டது. இவ்வேளையில் படைப் பிரிவொன்று எகிப்திலிருந்த பிரான்சியருக்கு எதிராக அனுப்பப்பட்டது. ஆனால் செல்லும் வழியில,; பம்பாயில் கேணல் வெலஸ்லிக்கு முதலிற் காய்ச்சல் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து “மலபார் சிரங்கு” எனும் நோயும் அவருக்குத் தொற்றிக்கொண்டது. நைதரஸ் மருத்துவக் குளியலை மேற்கொண்ட பின்னரே அவரால் நோயிலிருந்து மீள முடிந்தது. அதன் காரணமாக அவருடைய படையணி அவருடைய தலைமை இன்றி பயணிக்க நேர்ந்தது. அவர் திருக்கோணமலைக்கு வந்தபோது ஆறு பெட்டிகளில் பிரெஞ்சு நாட்டுக் குடிவகைகளையும்,; இன்னும் ஆறு பெட்டிகளில் ஸ்பெய்ன் நாட்டுக் குடிவகைகளையும், வேறு ஆறு பெட்டிகளில் போர்த்துக்கல் நாட்டுக் குடிவகைகளையும் கொண்டு வந்ததுடன் கிறிஸ்மஸ் கால விடுமுறையை திருக்கோணமலைக் கோட்டையிலேயே அவர் கழித்தார். அவர் தனது காலத்தின் பெரும் பகுதியை படை வீரர்களுக்கு வினாகிரி, தேயிலை, சீனி, மாட்டிறைச்சி, ரம் என்பவற்றையும் அத்துடன் உத்தியோகத்தர்களையும் திரட்டுவதிலேயே செலவிட்டிருப்பார் போல் தெரிகிறது.


கோட்டைக் காவற் படையின் நிலைமை.


இன்று போலவே 1880 இலும் திருக்கோணமலையின் முதற் தேவையாக படையினருக்கான குடியிருப்பு வசதிகளே காணப்பட்டிருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட படை வீரர்களுக்கான விடுதிகள் பழுதடைந்து திருத்த முடியாத நிலைமையிலிருந்ததால் 1799 இல்
தற்காலிக விடுதிகள்; அமைக்கப்பட்டன. இரண்டு கோட்டைகளினதும் காவற்படை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தது.

80ஆம் காலாட்படைப் பிரிவு (South Staffordshires)
ஒரு பட்டாளம் மெட்ராஸ் பீரங்கிப்படை
260 இந்திய பீரங்கிப்படை வீரர்கள்
ஒரு சிப்பாய் துணைப்படைப்பிரிவு

பிரெட்ரிக் கோட்டையில் 72 சுடுகலன்களும் ஒஸ்டன்பேர்க்கில் 50 சுடுகலன்களும் இருந்தன. அதே வேளையில் இராணுவ உத்தியோகத்தர்களுக்குப் புற நகர்பகுதியில் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. 1881 இல் உத்தியோகத்தர்களுக்கான வதிவிடங்களுடன்கூடிய நிரந்தர விடுதிகள் கோட்டையினுள் நிர்மாணிக்கப்பட்டன.

கட்டளைத்தளபதி கேணல் சம்பெய்ன் என்பவரால் கோட்டையிலிருந்து துறைமுகம் வரையிலிருந்த அதிகமான தென்னை மரங்கள் வெட்டப்பட்டன. வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டத்தின்படி. . . . . .

“துருப்பினருக்கு நல்ல வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்த நடவடிக்கையானது, துருப்பினரிடையே ஏற்படும் அதிகளவிலான உயிரிழப்புக்களை குறைக்கவும், திருக்கோணமலை என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்படையும் படையினரின் மன நிலையை மாற்றவும் உதவியது”.

திருக்கோணமலையில் ஐரோப்பியர்களிடையே அதிக மரணங்கள் ஏற்பட்டன. வெப்பவலய நோய்களும், அவற்றை முற்கூட்டியே தடுத்து நிறுத்தும் முறைகளும் அறியப்படடிருக்கவில்லை. கால்நடைகளுக்கு ஏற்பட்ட பிளேக் நோயும் கவலையை உண்டாக்கியது.


அம்மை நோய் அதிகளவான மரணங்களுக்கு காரணமாகியது. இறுதியில் திருக்கோணமலையின் முதல் ஆளுநரான பிரெட்ரிக் நோர்த் அங்கே ஒரு மருத்துவமனையை நிறுவினார். அது போலவே கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகிய இடங்களிலும் மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டன.
‘தடுப்பு மருந்தேற்றல்” என்பது அக்காலத்தில் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது, 1802 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி பம்பாயிலிருந்து தருவிக்கப்பட்ட தடுப்பு மருந்து இலங்கையிலேயே முதன் முறையாக ஒரு நோயாளிக்கு திருக்கோணமலையில் ஏறப்பட்டது.


பிரெட்ரிக் கோட்டையின் பெயர்.


ஒல்லாந்தர்கள் திருக்கோணமலைக் கோட்டை என்றே குறிப்பிட்டு வந்துள்ளார்கள். ஏறக்குறைய 1803 ஆம் ஆண்டளவிலேயே முதன் முதலில் பிரெட்ரிக் கோட்டை என்ற பெயர் பாவனைக்கு வந்தது. இக்காலத்தில் யோர்க் பிரபு பிரெட்ரிக் பிரித்தானிய இராணுவத்தின் பிரதம தளபதியாக இருந்தார். 1814 ஆண்டுவாக்கில் வெளியிடப்பட்ட “இலங்கை வர்த்தமானி (அரசிதழ்)” அறிவித்தல்களில் பிரதம தளபதி பிரெட்ரிக் என்றே கையெழுத்திடப்பட்டிருக்கிறது. அவரது முழுப்பெயர் பிரெட்ரிக் ஒகஸ்தஸ். அவர் (1763-1827) யோர்க் அல்பேனி ஆகியவற்றின் கோமகன் ஆவார். அவர் மூன்றாவது ஜோர்ஜ்- அரசி ஷர்லொக் ஆகியோரின் இரண்டாவது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



1801

ஏமியன்ஸ் உடன்படிக்கையின்படி இலங்கையானது முறைப்படி பெரிய பிரித்தானியாவின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1802

1802 ஆம் ஆண்டின் ஐந்தாவது உடன்படிக்கையின் கீழ் இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாகியது

1803

திருக்கோணமலையானது தாக்கப்பட முடியாத பாதுகாப்பான இடம் என முடிவுசெய்யப்பட்டது.


ரோயல் அக்கடமி (அரச கல்லு}ரி)யைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்ட ஆர்வத்தைத் தூண்டும் புத்தகம் ஒன்று 1830 இல் பதிப்பிக்கப்பட்டது. அதில் அக்காலத்து வீரச்செயல்களும், நெருக்கடிகளும் மிக விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன. அப்புத்தகத்தில் உள்ள சில விபரங்கள்
பின்வருமாறு. . . . . . .


அலெக்சாண்டர் அலெக்சாண்டர் அவர்களின் வாழ்க்கை.


அவர் அரச கல்லு}ரியில் 1801 இல் சேர்ந்ததுடன் 1803இல் திருக்கோணமலையில் வாழ்ந்தார். இவ்வேளையில் இலங்கையில் கௌரவ பிரெட்ரிக் நோத் அவர்கள் ஆளுனராகவும், மேஜர் ஜெனரல் மக் டவ்ல் படைகளின் தளபதியாகவும் இருந்தனர். அக்காலத்தில் திருக்கோணமலைக் கோட்டைத் தரைப்படையானது 19 ஆவது தரைப்படைப் பிரிவு ,மலாய் படைப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. அவர் அங்கிருந்த வேளையில் கோப்ரல் ஜோர்ஜ் பார்ன்ஸ்லே கடுங்காயங்களுடன் வந்துசேர்ந்தான். அவன் திருக்கோணமலைக்கும் கண்டிக்கும் இடையிலுள்ள தற்காலிகக் கோட்டையான மச் டவ்ல் கோட்டையைச் சேர்ந்தவன். அவன் கொண்டுவந்த செய்தி நல்லதாக இருக்கவில்லை. மேஜர் டேவி யின் படைகள் கண்டி அரசனின் இராணுவத்திடம் ஜூன் 25 ஆம் திகதி சரணடைந்து விட்டதாகவும், மேஜரையும் உத்தியோகத்தர்களையும் அவர்களுடைய ஆட்களிடமிருந்து பிரித்துவிட்டு பெரும் படுகொலைகளில் இறங்கிவிட்டன எனவும் தெரிவித்தான். மேலும் அவன் கொலைகாரர்கள் கழுத்தின் பின்பகுதியை துண்டு துண்டாக வெட்டுகிறார்கள் என்றும் கூறினான்.
கோப்ரல் பாஸ்லேயின் பின்பக்கக் கழுத்திலும் வெட்டு விழுந்திருந்தது. மார்ப்புப் பக்கம் கழுத்துச் சாயாமலிருக்க அவன் தனது இடது கையால் தலையைப் பிடித்துக்கொண்டு 16 மைல் து}ரம் கால்நடையாக வந்து மக் டேவல் கோட்டையை அடைந்து அதன்பின்னர் ஒரு ஆற்றையும் நீந்திக்கடந்து வந்ததை நினைத்துப் பார்க்கவே திகைப்பாக இருந்தது . அவன் தனது காயங்களுக்கு மருந்திடப்பட்ட பின்னர,; ஒருகையால் தலையைப்ப்பிடித்தவாறு கோட்டைக் காவற் படையுடன் சேர்ந்து திருக்கோணமலை முழுவதும் நடமாடினான். அலெக்சாண்டரின் கருத்துப்படி இத்தீவிலேயே மிக மோசமான இடம் திருக்கோணமலை என்பதாகும். காலநிலை , கடும் சோர்வு இவற்றுக்கு மேலாக உணவுப் பற்றாக்குறை இவை அனைத்தும் அச்சுறுத்தல் தருபவையாகவே இருந்தன. சாதாரணமாக எம்மத்தியில் காணப்படும் நோய்களான வயிற்றுளைவு, கல்லீரல் நோய்கள், பெரி பெரி, வயிறு மற்றும் குடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் காய்ச்சல்கள் என்பவற்றினால் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தமை அந்த நேரத்தில் எமது பணியினை மிகவும் சிரமப்படுத்துவதாக இருந்தது. பிணங்களைப் புதைப்பதற்காக 19 ஆம் படைப் பிரிவின் உதவியை அடிக்கடி கோர வேண்டியவர்களாக நாம்; இருந்தோம்.

“மரணத்தினதும் நரகத்தினதும் வாசல் என்று என்னால் அழைக்கப்படும் இந்த மோசமான இடத்தில் ஐரோப்பியத் துருப்புக்கள் மிக நீண்ட காலமாக எவ்வாறு தாக்குப் பிடிக்கின்றன என்பது வியப்புக்குரியதாகும். நியாயமற்ற முறையில் சீரழிந்த நிலையில் அவர்கள் இருந்துள்ளனர். . . . அங்கு தொடர்ச்சியாகச் சாட்டையடிகள் வழங்கப்பட்டன. சில உத்தியோகத்தர்கள் அதில் மகிழ்சசி கண்டனர். ஆனால் ஊர் மக்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எம்மைத் து}~pத்து, அவமரியாதை செய்தார்கள். ஐரோப்பிய வீரர்களுக்குச் சாட்டையடி வாங்கிக்கொடுப்பதைவிட அவர்களுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது வேறொன்றுமில்லை”.

அலெக்சாண்டர் அக்காலத்தில் சுவாமி மலையில் இடம்பெற்ற சமய விழாக்களை அழகாக எமக்குத் தருகின்றார். அதில் இப்போது நாம் பார்ப்பதைவிட சிறு வித்தியாசங்களே காணப்படுகின்றன. அரச கல்லு}ரியின் ஒரு விடுதி அக்காலத்தில் சுவாமிமலைக்கு அருகிலேயே இருந்துள்ளது. விடுதியில் சமைக்கப்படும் உணவு மிகவும் மோசமானது என்று அறிந்துகொண்ட அவர், தன்னை நோயாளியாக்கியது அதுதான் என உணர்ந்து, ஒரு உள்ளுர் மனைவியை அல்லது தாதிக்கும் மேலான ஒருத்தியைத் தனக்கு சமையல் செய்வதற்காகவோ அல்லது புறநகரிலிருந்து நல்ல உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவோ அழைத்துவரத் தீர்மானித்தார். தனது குடும்பத்தை வைத்துக் கொள்வதற்காக ஒரு குடிசையைக் கட்டுவதற்கும் அவர் தளபதியிடமிருந்து அனுமதி பெற்றுக்கொண்டார். இந்த நடைமுறையானது அக்கால பழக்கவழக்கங்களுடன் இணைந்ததாகவே இருந்தது.

1810 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திருக்கோணமலையிலிருந்து ஒரு பீரங்கிப்படை வீரனாக புறப்பட்ட அலெக்சாண்டர் விரைவில் இங்கிலாந்து சென்றார்.


முடிவுரை


1815

1815 ஆம் ஆண்டளவில் அரச கடற்படையைச் சேர்ந்த பியூஜெட் அவர்களால் சிறிய கப்பல் துறைமுகமாக டொக்யார்ட் ஆரம்பிக்கப்பட்டது.
1905

டொக்கியாட்டும், அதன் ஆரம்ப பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் 1905 ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தன. பின்னர் அட்மிரல் பிஷர் என்பவர் இதனை முற்றாக அழித்துவிட்டார்.

1923

இடிபாடுகளுடன் கைவிடப்பட்ட கப்பற்துறைமுகம் 1923 ஆம் ஆண்டில் மீளவும் திறக்கப்பட்டது. பாதுகாப்பு சம்பந்தமான ஏற்பாடுகள் அனைத்தும் இன்றுள்ளவாறு ஆரம்பிக்கப்பட்டன.


பின்னிணைப்பு

1. உள்ளூர் மரபுப்படி கல்வெட்டின் உள்ளடக்கம் பின்வருமாறு எதிர்வுகூறப்படுகின்றது. ;-

குளக்கோட்டனால் முற்காலத்தில் கட்டப்பட்ட புனிதமான பெரும் கட்டடத்தைப் போர்த்துக்கேயர் கையகப்படுத்துவர். ஓ மன்னா! கவனமாகக் கேள்! இதை பூனைக்கண்ணன், செங்கண்ணன், மற்றும் புகைக் கண்ணன் ஆட்சி
செய்து சென்றதன் பின் அவ்விடத்தில் வட நாட்டவர்கள் (அதாவது தெலுங்கர்கள் ) உடையதாகும்.

2. மேலதிக விபரங்கள் லிஸ்பனில் உள்ள அஜூதா நூல் நிலையத்தில் உள்ள கோட்டெக்ஸ் -51-வீஇ-40 இல் காணப்படுகின்றன.
கொன்ஸ்டன்டினோ டீ சா மெனேசஸ் இந்தக்கோயிலை அழித்து அதன் கற்களால் ஒரு கோட்டையை அமைத்து அதன் மூலம் சிங்களவர்கள் துறைமுகத்துக்கு வராதபடி மூடிவிட்டான். ஆனால் அது ஒரு பீரங்கிப்படையை வைத்திருக்குமளவுக்குப் பெரியதாக இல்லாததால் ஒரு சிறிய கோட்டைக் காவல் நிலையமாகவே இருந்தது.

இந்தக்கோயிலின் அழிவைக் குறிக்கும் நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகள் செதுக்கப்பட்ட ஒரு கருங்கல் கண்டுபிடிக்கப்பட்டு அது இலங்கை அதிகாரிகளினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டது. சிங்களப் புராதன எழுத்துக்களில் மிகவும் பரிச்சயம் மிக்கவர்களால் அக்கல்வெட்டு மொழிபெயர்க்கப்பட்டு மேன்மைதங்கிய மன்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.
(ஊகத்தின்படி கி. மு. 1300 ஆண்டுகளுக்கு முன்னர். )’இலங்கையின் சக்கரவர்த்தியாக இருந்த மாணிக்க ராஜா பாகு என்பவரால் விதியா-மல்-மண்டா எனும் கடவுளுக்கு இக்கோயில் கட்டப்பட்டது. பிராங்க் தேசத்தவர்கள் வந்து இதனை அழிப்பார்கள் . அதன்பின் அதனை மீளக்கட்டுவதற்கு ஒரு அரசனும் இத்தீவில் இருக்கமாட்டான்.”

இந்தக்கல், கோட்டை வாசலில் பதிக்கப்பட்டுள்ளது. பிராங்க் தேசத்தவர் என்று இங்கு குறிப்பிடப்பட்டவர்கள் போர்த்துக்கேயரே ஆவார். ஏனெனில், பிரான்சியர்கள் அக்காலத்தில் சிரியாவிலும் பிரபலம் பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு ஐரோப்பியரும் பிரான்சியராகவே மீள அழைக்கப்பட்டதற்கு ஐரோப்பியரில் பிரான்சியரின் செல்வாகு அதிகமாக இருந்ததும் காரணமாகலாம்.

வெகு தொலைவிலுள்ள எதிர்காலத்தின் உண்மையை மத நம்பிக்கையற்ற ஒரு மன்னனுக்கு எதிர்வு கூறியவர் யார் என்பதை என்னாலும் கூறமுடியாது. அக்கோயிலின் பண்புரிமை உருவ வழிபாட்டைக் குறித்துக் காட்டுவதாய் இருந்தால், அதன் அழிவுக்கான எதிர்வு நீண்ட காலத்துக்கு முன்பேயே குறித்துக் காட்டப்பட்டிருக்கும். இந்தியப் பாரம்பரியங்கள் பற்றிய தெளிவின்மை காரணமாக அதன் ஆசிரியர் எமக்கு வெளிப்படையான உண்மையைக்கூற முடியாதவராக உள்ளார்.

கொன்ஸ்டன்டைன் டீ சா இக்கோவிலை அழித்திருந்தாலும் , ஜெனரல் டொம் நியூனோ பெரேராவின் காலம் வரை வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதேவேளை இக்காரியத்தைச் செய்த கடைசி கேன்களும்
ஜெடாக்களும் து}க்கிலிடப்பட்டனர்.

மேற்படி விடயங்களைத்தொகுத்த டீ கியூரோஸ், மனுராஜா என்பதே அவ்வரசனின் பெயர் என்று கூறுகிறார்.

1 comment:

  1. இந்தக் கட்டுரை வெளிவந்த நூல், யாரால், எப்போது போன்ற அடிகுறிப்புக்களை வெளியிட்டால் வேறு பலருக்கும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete