தெட்சனாபதி எனப்பட்ட கிழக்கிலங்கை
கிழக்கு,தென்கிழக்குப் பிரதேசம் என்பது கதிர்காமம் முதல் திருகோணமலை வரை நீண்டிருக்கும் கரையோரப் பகுதியைக் குறிக்கிறது. இப்பிரதேசத்திலே கதிர்காமம், உகந்தை, சங்கமன்கண்டி, திருக்கோவில், மண்டூர், கொக்கட்டிச்சோலை, கோவில்குளம், வெருகல், மாமாங்கேஸ்வரம், கோனேஸ்வரம், தம்பலகாமம் போன்ற பண்டைய பெருமை மிக்க சிவ, முருக வழிபாட்டுத் தலங்கள் ஒரே கோட்டிலே அமையப் பெற்றுள்ளன. திருமூலர் சைவபூமி என்க் குறிப்பிட்ட இலங்கைத்தீவு இப்பிரதேசமே எனக் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.
மேற்கூறிய பழம்பெரும் வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட இப்பிரதேசமானது தெட்சனாபதி என அழைக்கப்பட்டது. இதுவே கிழக்கு மாகாணம் எனவும் வழங்கப்படும் பிரதேசமுமாகும். அதாவது வடக்கே பறையன் ஆறு, கொக்கினாய் ஏரியும் கீழே குமுக்கன் ஆறும் எல்லைகளாக அமையப் பெற்றதெ கிழக்கு மாகாணமாகும். 1962க்கு முன்பு கிழக்கு மாகாணம் என்பது இன்றைய திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை எனப்படும் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும். மட்டக்களப்பு மாவட்டம் என்பதும் அம்பாரையையும் உள்ளடக்கிய பிரதேசமாகவே இருந்தது. 1963ஆம் ஆண்டு அரச புள்ளிவிபர திணைக்கள அறிக்கையிலே இதனை தெளிவாக காணமுடியும். 1
இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே அமிர்தகழி கிராமத்திலே மாமாங்கேஸ்வரம் அமைந்துள்ளது. ஆதியில் இப்பிரதேசத்தில் விந்தனைக்கட்டு வேடர்கள் வேட்டையாடியும் தேன் சேகரித்தும் வாழ்ந்தமையை ஆய்வுகள் காட்டுகின்றன. அக்கலத்தில் வேடர்களால் பூசிக்கப்பட்ட இங்குள்ள லிங்கமானது காலவோட்டத்தில் பிள்ளையார் ஆலயமாக மாறியது, ஆனாலும் பண்டைய லிங்கத்தின் பெயரும் சேர்த்து மாமாங்கேஸ்வரமாக திகழ்கிறது. கிழக்கு மாகணத்தின் தொன்மையும் ஆதி மனித இனமும் மாமாங்கேஸ்வர அமையும்
தென்னிலங்கை, தெட்சனாபதி எனபடும் இக்கிழக்குப் பிரதேசமானது ஆதிமனிதன் வாழ்ந்த இடம் என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. உலகில் ஆதிக்குடிகள் ‘ஒஸ்ரலோயிட்’ எனப்படும். ஆதித் திராவிட இனமாகும். இவர்கள் பேசிய மொழி “ஓஸ்ரிக் மொழி “ எனப்படும். இவர்களின் வழிதோன்றல்களே கிழக்குப் பிரதேசங்களில் வாழும் வேட இன மக்கள் என்பதை பல பிரபல வரலாற்று ஆசிரியர்கள் குற்ப்ப்பிட்டுள்ளனர். இவர்களுள் எஸ்.ஜெ ரெயிலர், மஜிம்தார், செலிக்மன், பணர்ரவி, சட்டர்ஜி போன்றேர் முக்கியமானவர்கள். 2
மானுடவியல் அடிப்படையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலமான (Palaeolithic) கி.மு35000 ஆண்டுக்கு முதல் ஆதித் திராவிடர் வாழ்ந்த பிரதேசம் என்பதற்கு தொல்பொருளியல் திணைக்கள ஆனையாளரான சிரான் ரெடனியகல கூறியுள்ள கூற்றே முக்கிய சான்றகும். கிமு 30000 ஆண்டுக்ளுக்கு முன் இலங்கையின் கிழக்குப்பிரதேசங்களில் வாழ்ந்த நாகர்கள் இத்தீவின் நாகரீகத்தின் பெருந்தொண்டாற்றியுள்ளனர். என அவர் குறிப்பிட்டுள்ளார். 3 தொடர்ந்து இடைக்கற்காலம் (Mesolithic கிமு10000 – 8000) புதிய கற்காலம் ( கிமு 8000-5000) வரை ஆகும்.
கிழக்கு மாகாணத்தின் திறந்த வெளிக்கோயில்
வழிபாடுகளுடன் தொடர்புறும் மாமாங்கேஸ்வரம்
கிழக்கு மாகாணத்தின் பண்டைய வழிபாடுகள் தனித்துவம், திறந்த வெளிக்கோயில் வழிபாட்டுடனேயே ஆரம்பித்துள்ளன என்பது தெளிவு. இப்பிரதேசத்தில் வாழ்ந்த ஆதிக்குடிகளின் வழிபாடு மரவணக்கமும் கல்வணக்கமும் ஆகும். இந்த ஆதிக்குடிகளின் வணக்க முறையானது நடுகல்வணக்கத்திலிருந்து ஆரம்பமாகியது எனலாம். தென்கிழக்கு ஆசியாவில் ஆதிமதம் இந்துமதம். ஈழமும் தென்கிழக்கு ஆசியாவின் ஓர் அங்கமாக விளங்குவதனால் அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் தொன்றுதொட்டு இங்கும் ஏற்பட்டன. உலகெங்கும் ஆதிகாலங்களில் நிலவிய மரவழிபாடும் கல்வழிபாடும் இங்கும் காணப்பட்டுள்ளது. அது பின்னர் வேல் வழிபாடாகவும் பர்ணமித்தது. வழிபாடுகளுடன் தொடர்புறும் மாமாங்கேஸ்வரம்
ஆரம்பகாலக் கோயில்கள் இந்தியா போன்று இங்கும் திறந்த வெளிக்கோயில்களாகவே அமைந்தன. ஆதித்திராவிடர் கோயில்களைப் போன்றே ஆதிநாதர் கோயில்களும் அமைந்தன. இவைகள் ஒரு மரத்தை ஆதாரமாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டன. 5 இம் மரங்களில் உறைவதாகக் கருதி ஆதியில் இம் மரந்களை வழிபட்டனர். பின்னர் அதன் அடிப்பகுதியை வழிபட்டனர். இவ் வழிபாட்டு முறை கொடிநிலை, கந்தாதி, வள்ளி என 3 வகையில் அமைந்தது.
கொடிநிலை - மரக்கொடியினால் சூழப்பட்ட ம்ரத்தை வணங்குதல்
கந்தாதி - பட்டுப்போன மரத்தின் அடிப்பகுதியை
வணங்குதல்
வள்ளி - மரம் பட்ட பின்ன்ர் தனியே நின்ற கொடியை வணங்குதல்
இம்மரங்களின் அடிப்பகுதியில் தெய்வம் உறைவதாக எண்ணி அம்மர அடியில் கல் ஒன்றினை நாட்டி வழிபடவும் தொடங்கினர். இதுவே பின்னர் லிங்க வழிபாடாக பரிணமித்தது. இதுபோன்று மர அடியில் வேலை நட்டு வழிபட்டபோது வேல் வழிபாடாகியது. இம்முறையிலே மாமாங்கேஸ்வர வழிபாடும் ஏற்பட்டது எனலாம்.
சிவ பூமி எனப்பட்ட ஈழமும் – கிழக்கிலங்கையும் – மாமாங்கமும்
திருமூலர் இலங்கையை சிவபூமி எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது கிழக்குப்பிரதேசத்திற்கே பொருத்தமானது என்பதற்கு
ஆதாரமாக கிழக்குப்பிரதேசம் முழுக்க நிரம்பியுள்ள சிவாலயங்களே சான்றாகும். ஆதிக்குடிகளான வேடர் கிழக்கிலங்கைக்கே உரியவர்கள். குறிப்பாக விந்தன, வெல்லச தமண, குமண, அம்பாறை, பிபிலை, சிப்பிமடு , றூகம், ம்காஓயா, கதிரவெளி,வாகரை, களுவன்கேணி போன்றன இவர்களது
பூர்வீக இடங்கள். இங்கெல்லாம் மரமும், கல்லும் வேலுமே வழிபாடுகளாயிருந்தன. இதனை செழிமன் போன்ற ஆய்வாளர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
”சபரர்” எனப்பட்ட ஆதிம்னித இன்ம் விந்திய மலைக்காடுகளில் காணப்பட்டவர்கள், சபரர், இருளர், காடர், புனிதர் போன்றோர் மர்னிட்வியலாளரர்ல் இனங்காணப்பட்ட ஆதி ம்னித இனத்தவராகும். சபரர் + கரம என்பது சபரர் வாழும் கிராமம் ஆகும். இதுவே சபரர், கம என சபரகமவாகியது. கதிர்காமம், உகந்தை போன்றன இத்தகைய வேடர்
இனத்தவர்களால் ‘கந்தழி’ வழிபாடு செய்யப்பட்ட இடங்களாகும். இவ் ஆதிமனித வழிபாட்டு முறைகளே மட்டக்களப்பிலும் ஆரம்ப காலங்களில் நடைபெற்றது எனலாம். கேரள சங்ககால வழிபாட்டு முறைகளான கொடிநிலை, கந்தழி, வள்ளி தொடர்ச்சியான லிங்க வழிபாடும், வேல் வழிபாடுமே மட்டக்களப்பின் பல இடங்களிலும் நிலைத்து நிற்பதோடு இவ் லிங்கக்கோயில்கள் அமைந்த இடங்களில் வழிபட்ப்பட்ட மரங்கள் தலவிருட்சங்களுமாயின.
இவ் லிங்கக்கோயில்கள் சில ஈச்சரங்களாக குறிப்பாக தான்தோன்றீஸ்வரம், மாமாங்கேஸ்வரம் என பெயர் பெற்றும் , முதல் பிள்ளையார் வழிபாட்டு தலங்களாகவும் மாறியுள்ளன. இவ்வகையிலே மாமாங்கேஸ்வரமும் தல விருட்சமும் லிங்க வணக்கமும் ஏற்பட்டன எனலாம்.
மாமாங்கேஸ்வர – லிங்க வழிபாட்டுத் தொன்மை
அ) ராமனுடன் தொடர்புறும் மாமாங்கேஸ்வரம்
இராவணன் லிங்க வழிபாடுடையவன். தெட்சணாபதி எனப்பட்ட தென்னிலங்கையை ஆண்டவன். இதிகாச புரவனான இராவணன் தென்னிலங்கை எனப்படும் திருக்கோவில் பிரதேசத்தில் ஆட்சி செய்து கொண்டு தெட்சண கைலாயம் எனப்படும் திருக்கோவிலை கோணேசர் ஆலயத்திலும் தரிசனம் செய்தான் என கர்ணபரம்பரைக் கதைகள் கூறும். இராவணன் திருககோவில் பிர தேசத்தில் இருந்து கொண்டு மாமாங்கேஸ்வரர் ஆலயம் வந்து தரிசித்து செல்வான் எனவும் கரையோரமாக இருந்த அந்தப் பாதை இன்று கடலுடன் சேர்ந்து விட்டது என்பதும் கதையா கும். மாமாங்கேஸ்வரம் இராவணன் வழிபட்ட ஒரு தலம் என்பர்.
இராவணனது காலம் கி.மு 6000ம் ஆண்டு காலம் எனவும் கி.மு 3544இல் கடற்கோள் ஏற்பட்ட போது இலங்கையின் பெரும் பகுதி அழிவுற்றது.
அதில் கோணேசர் ஆல்யமும் ஒன்று என் டாக்டர் பாலேந்திரா கூறுவர். இராவணன் காலத்திற்கு பின்பு பெரும் கடற்கோள் ஒன்று ஏற்பட்டது. அதில் இல்ங்கையின் பெரும்பகுதி அழிவுக்குட்பட்டது என பாளி நூலான இராஜவலிய கூறும். இராவணன் வ்ழிபட்ட தல்ங்கள் கோணேசர் ஆலயம் என தெட்சணகைலாய புராணம் திருக்கோணசல வைபவம் என்பன கூறும் கோணேசர் கோயில் கி.மு 3541இல் காட்டப்பட்டது எனவும் மிகவும் தொன்மையான ஆலயம் எனவும் ஆய்வாளர்கள் கூறுவர்.
இராவணனது காலம் பற்றிய சர்ச்சைகள் இராவணன் காலம்
கி.மு 1100 – அறிஞர் பாகிரர் கருதுகிறார்.
கி.மு 1420 – ரே.ச டட் அன்செண்ட் அண்ட் ஈகொபி
எது எப்படி இருப்பினும் இராவணன் பல லிங்கக்கோயில்களை ஸ்தாபித்தான். அவன் லிங்க வழிபாடுடையவன். அவை தெட்சணாபதியிலே அமைந்தன. அவற்றிலே இதுவும் ஒன்று எனலாம்.
இராம பிரானுடன் தொடர்புறும் – மாமாங்கேஸ்வரம்
மாமாங்கேஸ்வரம் ராமபிரானால் வழிபடப்பட்டது என்பதும் ஓர் ஊகம். இராவணனை வதம் செய்த இராமபிரான் இத் தலத்தில் பூசை செய்தார் எனப்படுகிறது. இராம்பிரானுடைய பணிப்பின் பேரில் இந்தியா சென்ற அனுமன் லிங்கத்துடனும் அவிமுத்தி தீர்த்தத்துடனும் காலந் தாழ்த்தி வந்தபோது அனுமன் பாதம் பட்ட இடங்கள் பள்ளங்களாகி தீர்த்தங்களாகின. அனுமன் கொண்டு வந்த போது லிங்கம் அவ்விடத்தில் பிரதிட்டை செயது பூசிக்கப்பட்டது எனவும் இராமபிரான் தனது அருட்சக்தியினால் அமிர்தத்தை இக்குள்த்தில் சேர்த்தனால் இத் தீர்த்த்ம் புனிதமும் வல்லமையும் உடையதாகியது என்பர்.
எப்படி இருப்பினும் இக்குளத்து நீரில் ஒரு அற்புதம் நிறைந்த ச்ந்தனச்சேறு
நிரம்பி உள்ளது என்பது உண்மை. இச்சேறு உடம்பின் வெளிப்புற நோய்களை மாற்றும் தன்மை கொண்டது.குளத்தின் அண்மித்த பகுதிக் கிணறுகளிலும்இச் ச்ந்தனச்சேற்றை கொண்டதனால் இப்பகுதி அமிர்தகழி எனும் பெயரைப்பெற்றது.
இராமபிரானால் பூசிக்கப்பெற்ற இந்த லிங்கமானது காலஓட்ட்த்தில் அடர்ந்த சோலைகளாலும் பற்றைகளாலும் மறைக்கப்பட்டிருந்தது. தேன் எடுக்க வந்த வேடர் நாவல் ம்ரமொன்றில் இருந்த தேனை எடுக்க வெட்டிய போது கோடரி தவறி லிங்கத்தில் விழுந்தது. தமது இனத்தினரை அழைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் வேட இனத்தினர் அருகிப்போக மாடு மேய்க்கும் இடையர் கண்டு அயலவரிடம் கூறி, அவர்கள் க்ளிமண் ஆலயம் அமைத்து வழிபட்டனர். 1837ம் ஆண்டு மட்டக்களப்பின் நில வரைபடத்தில் இது களி மண் கோயிலாகவே கட்டப்பட்டுள்ளது. ராமபிரானுடன் தொடர்புறும் ஊகம் உண்மை எனில் ராமாயண காலத்திற்கு தொன்மை வாய்ந்தது எனலாம். ராமாயண காலம் – கி.மு 1400 – 800 என பேராசிரியர் வே.ச. டட் கறுவர் – ஏன்செண்ட் இந்தியா – பிபி – 15 – 20
பிற நாட்டார் குறிப்புகளிலே மமங்கேஸ்வரம் ( அமிர்தகழி)
டொல்மி என்பவன் கி.மு 140ல் உலகமெங்கும் விஜயம் செய்த ஓர் கிரேக்க புவியியல் அறிஞன் இவன் வரைந்த இலங்கை படத்தில் இல்ங்கையின் கி.மு 140ல் முக்கிய இடங்கள் காட்டப்பட்டுள்ளன. கரையொரம் முழுவதும் கோயில் படங்களுடன் பெயரும்
குறிப்பிட்டுள்ளனர்.
இப்படத்திலே தெற்கே டொன்ரா என தேவாந்திர முனையும் தென்கிழக்கு முனையாக பக்பிசினிடஸ் என்ற பெயருடன் கோயில் படமொன்றும் சிடயு ப்ரொமோண்ட் என்ற முனையும் காட்டப்பட்டுள்ளது. இது ச்ங்கமன் கண்டி முனையை குறிக்காது என கொள்ள முடியும். இங்கு காட்டப்பட்டுள்ள ஏனைய கோயில் படங்களின் அக்காலத்து பெயர் பெற்று இருந்த திருக்கோவில் தாந்தோன்றீஸ்வரம் மமங்கேஸ்வரம் போன்றவற்றையும் குறிப்பதாகலாம்.
டொன்ரா கோயிலானது ச்ந்திரனுக்கு உரியது கோயில் எனவும் 1000 பிராமனன் யாகம் செய்ததாகவும் அது சந்திர மொலினிவரர் கோயில் எனவும் அறிய முடிகிறது.இன்று பெளத்த தேவாலயத்தில் உள்ளடக்கப்பட்ட நிலையில் கண் உயர லிங்கம் ஒன்றுடன் காணப்படுகிறது. மேலும் இப்படத்திலே குமனை எனவும் உலோககலம் எனவும் காட்டப்ப்ட்டுள்ளது.
கிழக்குக்கரையிலே இரு இடங்கள் முக்கியமாக காட்டப்படுள்ளது. நாகதீப என்க் கூறிய திருகோணமலைக்கு கீழே ப்றோகூண் என்பதும் அபிரதா எனவும் கோயில் படங்களுடன் காட்டப்பட்டுள்ளன. அனுரதபுரிக்கு அன்ரொக்ரம்மி எனக் குரிப்பிடப்ப்ட்டுள்ளதை நோக்கினால் அபிரதா என்பது மாமாங்கேஸ்வரமாக இருக்குமா என நினைக்க தோன்றுகிறது. எப்படி எனினும் அக்காலத்து இருந்த ஈஸ்வரங்களுள் மாமாங்கேஸ்வரமும் ஒன்று என்பது தெளிவு. அபிரதா என்பது அமிர்தகழியாகலாம்.
விநாயகராக மாறிய மாமாங்கேஸ்வரர்
1837ம் ஆண்டுக்கு முன்னர் களிமண் ஆலயமாக வழிபடப்பட்டு வந்த ஆலயம் அக்கால வேடர் பரம்பரையில் வந்தவர்களாகக் கருதப்படும் மாமாங்கன் பிள்ளையான் இருவரும் கோட்டமுனையில் வசித்த வேளான் குடும்பத்தின்ரும் அமிர்தகழியில் வசித்த குகுல வம்சத்தினரும் வாய்மூலம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மாமாங்கப்பிள்ளையார் என பெயரிட்டதாக அறிய முடிகிறது. மெய்யடியார்களில் ஒருவரான பரிசாரிக் கதிர்காம்ர் என்பவருக்கு பிள்ளையாருக்கு மாசிமகத்தன்று ஆராதிக்கும்படி இறைவன் கட்டளையிட்டதாகவும் அப்போதிருந்து பிள்ளையாருக்கு ஆராத்னை நடைபெறுவதையும் அறியலாம்.
1868 பங்குனியில் எழுத்ப்பட்ட உறுதிப்படி கோட்டமுனை வேளாளர், அமிர்தகழி குங்குல வம்சத்தவர், குடும்பக்கோயிலாக எழுத்ப்பட்டதுடன் 1888ல் கட்டியதாகவும் குறிப்புகள் உள்ளன. மூலஸ்தானம் க்ட்டும்போது நீர்ம்ட்டம் வரை தோண்டியும் இச்சிவலிங்கத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில் பெரிய கோயிலாக அமைக்கப்பெற்றது. கொடிஸ்தம்பமும் நடப்பட்டது.
முதலாவது கும்பாபிக்ஷேகம் நடைபற்றது. 1963ல் புனருத்தாரணம் செய்யும்போது சுயம்புலிங்கமாக தோற்றம்பெற்ற லிங்கேஸ்வரர் முழுமையாக பிள்ளையாராக மாற்றம் பெற்றார். விநாயக வழிபாட்டு முறையிலே பூசைகள் நடைபெறுகின்றன. அபிக்ஷேகம் நடைபெறும்போது மூலமூத்தியான லிங்கேஸ்வரரைக் காணமுடியும்.
மூத்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற இத்தலமானது குருந்தை மரத்தை தலவிருட்சமாகவும் கொண்டது.
மாமாங்கேஸ்வர – முந்திய உற்சவங்கள்
1988ல் கொடியேற்றத்துடன் தொடங்கப்ப்ட்ட உற்சவம் 5 திருவிழாக்களும் தீர்த்தோற்சவத்துடனும் முடிவுற்றது. பின்னர் திருவிழாக்களை அதிகரித்து 9 திருவிழாக்களும் தீர்த்தோற்ச்வமாக 10 நாட்களாக்கப்பட்டன. ஆடிஅமாவாசைத் தீர்த்தம் என்றாலே ம்ட்டக்களப்பு மக்கள் அனைவரினதும் நினைவிலே நிற்பது மாமாங்கேஸ்வரர் தீர்த்தமே. இதேபோல தீர்த்தக்கரை என்றாலும் எல்லோரதும் நினைவில் நிலைத்து நிற்பதும் மாமாங்கப்பிள்ளையார் தீர்த்த உற்சவமே.
ஆடி அமாவாசைத் தீர்த்தமும் - பிதிர்கடனும்
ஆடி அமாவாசைத் தீர்த்தத்திற்கு பெயர் போன தலம் இதுவாகும். மட்டக்களப்பு மாவட்டத்து ம்க்களே திரண்டு கூடும். இத் தலத்திலே தீர்த்த நாள் அன்று பிதிர்க்கடன் கழிப்போர் ஆயிரக் கணக்கிலாகும். சூரியனும் ச்ந்திரனும் ஒரே நாளில் கூடும் காலம் ஆடி அமாவாசை நாளாகும். பிதிர் மாதாக்களை இழந்தோர் தீர்த்தமாடி ஆலய தரிசனம் பிதிர்கடன் தர்பணம் செய்து அன்னதானம் செய்வர். மேலும் 12 ஆண்டுகள் இத் தீர்த்தம் ஆடுவோர் வேண்டிய சித்திகளையும் பெறுவார்.
வருடாந்த மகோற்சவத்தின் போது கிராம சாந்தி, வாஸ்துசாந்தி, கொடியேற்றம் திருவிழாக்க்ள், தீர்த்தோற்சவம், பொன்னூஞ்சல் என்பன முக்கியமாக நடைபெறும். இவற்றோடு முக்கியமான் காலங்களில் இடம்பெறும் பூசைகள், விரதங்கள் போன்றவற்றையும் கொண்டது.
அற்புதங்கள்
இராம்பிரான், ஆடகசவுந்தரி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் நீராடி தமது பாவங்களை போக்கியதாக ஊகம் நிலவுகின்ற அதேவேளை தீராத பல நோய்கள் இக்குளத்து தீர்த்தத்தில் நீராடி போக்கியோர் பல்லாயிரம் பேர். பக்தர்களுக்கு பல விதமான அற்புதங்களை இன்றும்
செய்து வருகிறார் என்பது கண்கூடாகக் காண்முட்கிறது
No comments:
Post a Comment