வரலாறு
மட்டக்களப்பின் வெருகல் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள துறைமுகத்தில் மதுரையிலிருந்து செண்பகநாச்சியம்மன், பத்திரகாளியம்மன், கண்ணகியம்மன் சிலைகளைக் கொண்டு வந்ததாகவும் அதில் கண்ணகியம்மன் சிலையை மட்டக்களப்புக்கு தெற்கேயுள்ள ஊர் ஒன்றில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாற்றுச் செய்தியுண்டு. கி.பி 2ம் நு¡ற்றாண்டில் மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட செண்பகச்செல்வி என்ற கண்ணகி விக்கிரகம் தம்பிலுவில்லைச் சேர்ந்த ஊராக்க என்ற இடத்தில் ஆலயம் அமைத்து பிரதிஷ்டைசெய்து வழிபடப்பட்டது. பெளத்த சிங்கள அரசர்களினதும், தமிழ் அரசர்கள், சிற்றரசர்களினதும் ஆதரவில் கி.பி 2ம் நு¡ற்றாண்டு தொடக்கம் 12ம் நு¡ற்றாண்டு வரை கண்ணகி வழிபாடு செழித்து வளர்ந்தது.திருக்கோயில் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் அர்ச்சகர்களாக பணிபுரிய வீரசைவககுருமார்கள் அக்காலத்தில் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் தம் பட்டர் என வாழ்த்தி குடியேற்றி அவ்வூருக்கு தம்பட்டை என நாமம் சூட்டப்பட்டது. மேலும் இவர்களது வழிபாட்டுக்காக மல்லிகார்ச்சுன புரத்திலிருந்து கணேஷ விக்கிரகம் ஒன்று பெறப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் மேலும் மேகவண்ணன் தனது தாயார் தம்பதிநள்ளாள் பெயரில் வாவியொன்றையும் வெட்டுவித்து அவ்வாவிக்கு தம்பதிவில் எனப்பெயர் இட்டான். வில் என்ற சொல் வில்லைப் போன்ற குளத்தைக் குறிக்கும்.
மழைபொழிய வேண்டி கொம்பு விளையாடல் என்ற வழிபாட்டின் மூலம் கண்ணகியம்மனை வழிபடுவார்கள். தம்பிலுவில கண்ணகியம்மன் கோயிலில் இவ்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுகிறது. பொதுவாக கண்ணகி கோயிற்கதவுகள் ஆண்டுக்கொரு முறை திறக்கப்பட்டு பதத்தி என்ற முறைப்படி 10 நாட்கள் வரை பூஜஜகள் செய்யப்பட்டு பின் கதவுகள் மூடப்படும். மக்கள்பெருதளவில் கூடி பயபக்தியுடன் வணங்குவர். கள்ளங்குடா, ஆரையம்பதி, செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணை ஆகிய இடங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் வேறுபாடுகளுண்டு.
தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்
கி.மு 5ம் நு¡ற்றாண்டில், விஜயன் காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஆதித்திராவிடர்களான நாகர் குடி மக்கள். கி,மு 600ம் நு¡ற்றாண் டில் இப்பிரதேசம் நாகர் முனை எனப்பெயர் பெற்றதாக மட்டகிளப்பு மானமீயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 1ம் 2ம் நூற்றாண்டில் திருக்கோயில் துறைமுகம் பிரபல்யமடைந்திருந்தது.இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டணத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமிய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது
No comments:
Post a Comment