பிறந்த இடம்: மட்டக்களப்பு (05.09.1935)
படைப்பாற்றல்: சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல்ஈ கட்டுரை
படைப்புகள்:
* ஏணியும் தோணியும் - சிறுவர் இலக்கியம்
* அம்மாவின் ஆலோசனைகள் - சிறுவர் இலக்கியம்
* இல்லை, இல்லை – நாடகத் தொகுதி
* ஒரு வித்தியாசமான விளம்பரம் - சிறுகதைத் தொகுதி
* ஒரு தாயின் மடியில் - குறுநாவல்
* நான் கண்ட துறவி – சிறு கைநூல்
* கதைகள் அல்ல நிஜங்கள்
விருதுகள்:
* மலையக கலையகப் பேரவை – சிறந்த இலக்கிய விருது
* மத்திய மாகாண அரசின் சிறந்த கலைஞருக்கான விருது
* சிறந்த கட்டுரைக்கான தேசிய விருது
* சமய, சமூக அமைப்பின் சிறந்த கட்டுரைக்கான விருது
* மட்டக்களப்பு கல்லூரி – சிறந்த நடிகைக்கான விருது
* தமிழர் சிங்கள இணைப்பு – ரத்ன தீப விருது
* தேசிய சாகித்திய பரிசு – ஏணியும் தோணியும்
* மத்திய மாகாண சாகித்தியப் பரிசு – ஒரு தாயின் மடியில்
* மத்திய மாகாண சாகித்தியப் பரிசு – ஒரு வித்தியாசமான விளம்பரம்
* வட கிழக்கு மாகாண சாகித்தியப் பரிசு - இல்லை இல்லை
* நோர்வேயில் உலக ரீதியான சிறுகதைப் போட்டி – முதற்பரிசு
* கத்தோலிக்க தேசிய சங்கச் சிறுகதைப் போட்டி – பரிசு
* இதுதவிர சொல்லின் செல்வி, கலையரசி, கலாரூபி, கலாஜோதி, நடிப்பரசி போன்ற பல பட்டங்களையும் பெற்றவர் இவர்.
இவர் பற்றி:
* மலையக மக்களுக்காக கலை, இலக்கிய, சமூகப் பணிகளை ஆற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களைப் படைத்தும், நடித்தும், நெறிப்படுத்தியும் உள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி, இலக்கிய, அரசியல் சார்ந்த மேடைப்பேச்சுக்களை ஆற்றியவர்.
23.04.2009 இல் காலமானார்
No comments:
Post a Comment