Sunday, 15 August 2010

ரூபராணி ஜோசப்

இலக்கிய உலகில் 50 வருடங்களுக்கு மேலாக ஏறுநடை
போட்ட ரூபராணி ஜோசப் அண்மையில் காலமானார். மட்டக்களப்பில் பிறந்த இவர் தனது
மாணவிப் பருவத்திலேயே தன் திறமைகளை வெளிப்படுத்தினார். இவரது குடும்பம் செல்வச்
செழிப்பு மிக்க ஒரு குடும்பமாகும். எனவே இவர் எவ்வித குறையுமின்றித் தன்
வாழ்க்கையை நடத்தினார். இவர் தனது 13ஆவது வயதிலேயே மேடைப் பேச்சுக்களில்
ஈடுபட்டு பாராட்டுப் பெற்றார். அரசியல் போராட்டங்கள், சத்தியாக்கிரகப்
போராட்டங்கள் முதலியவற்றிலும் ஈடுபட்டார்.

15 வயதில் தமிழரசுக் கட்சி மேடைகளில் ஆணித்தரமான பேச்சுக்கள் நிகழ்த்தி
பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றார். இவரது பேச்சுத்திறமையை மெச்சி,
அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சொல்லின் செல்வர் செ. இராசதுரை இவருக்கு "
*சொல்லின் செல்வி'* என்ற பட்டத்தை வழங்கினார். இவர் தன் மாணவப் பருவத்திலேயே
நாடகங்களில் நடித்து "*நடிப்பரசி*' என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். கல்வி
கற்கும்போதே இவர் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை வெளியிட்டு தனது திறமைகளை
வெளிப்படுத்தியுள்ளார். இவர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியிடம் முறையாகத்
தமிழ் இலக்கியம் கற்றுள்ளாராம். அதுவே பிற்காலத்தில் இவரது பேச்சிலும்
எழுத்திலும் பிரதிபலித்தது எனலாம். இவர் ஏராளமான சிறுகதை, கட்டுரை, கவிதைகளை
எழுதியுள்ளார். அவற்றுக்காகப் பாராட்டும் பரிசும் பெற்றுள்ள இவரது எழுத்தாற்றல்
பற்றி பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக் தலைவர் கலாநிதி துரை மனோகரன்
பின்வருமாறு கூறுகிறார்.

""எழுத்துத் துறையில் சிறுகதை எழுத்தாளராக, நாவலாசிரியராக, கவிஞராக சிறுவர்
இலக்கியப் படைப்பாளியாக, எழுத்தாளராகத் தம்மைத் தடம் பதித்துக் கொண்டவர்
ரூபராணி. அனைவரையும் போலவே, ரூபராணியும் எழுதுவதில் அளவற்ற ஆனந்தம் அடைபவர்.
அவரது எழுத்துக்களில் எப்போதும் சமுதாய நோக்கு முதன்மை பெற்றிருக்கும்.

இவரது பின்வரும் நூல்கள் அச்சில் வெளிவந்துள்ளன.

*அவையாவன;
*
 ஏணியும் தோணியும் (சிறுவர் இலக்கியம்) 1996இல் சாகித்திய பரிசு பெற்றது.

 ஒரு வித்தியாசமான விளம்பரம் (சிறுகதை தொகுதி) மத்திய மாகாண சாகித்திய பரிசு
பெற்றது.

  இல்லை இல்லை (நாடகங்கள்) வகி. மாகாண சாகித்தியப் பரிசு பெற்றது.

 ஒரு தாயின் மடியில் (குறுநாவல்) மத்திய மாகாண சாகித்திய பரிசு பெற்றது.

 அம்மாவின் ஆலோசனைகள் (சிறுவர் இலக்கியம்) மத்திய மாகாண சாகித்திய பரிசு
பெற்றது.

இவர் எழுதிய சிறுகதைகள் மக்களையும், சமூகத்தையும் மிகவும் பாதித்தன. "*திவசம்',
"ஜெனரேற்றர்'* முதலிய கதைகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. மட்டக்களப்பில்
கல்வி கற்று ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் 1956 இல் மலையகம் சென்றார். அங்கு
கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

இப் பாடசாலை, தனியார் பாடசாலையாக இயங்கியது. அப்போது (1960களில்) தனியார்
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும், தொடர்ந்து தனியார் பாடசாலையாகச் செயற்பட இப்பாடசாலை முகாமையாளர் சபை
தீர்மானித்தது. அதனால் பெரும் நிதி நெருக்கடிகளை பாடசாலை நிர்வாகம் எதிர்கொள்ள
நேரிட்டது. காரணம் தனியார் பாடசாலைக்கு அரசாங்கம் எவ்வித நிதி உதவியும்
வழங்காததே.

இச்சந்தர்ப்பத்தில் ரூபராணி ஜோசப் பல நாடகங்களை மேடையேற்றி, கல்லூரிக்கு நிதி
திரட்டிக் கொடுத்தார். மலையகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் மலையகப் பெண்கள்
மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் இவர் முனைப்பாகச் செயற்பட்டார்.
அவரின் சமூகப் பார்வை பெண்களின் அடிப்படை உரிமைகள், உழைப்புக்கேற்ற ஊதியம்
பெறுதல், தோட்ட நிர்வாகத்தின் புரிந்துணர்வு முதலியன பற்றியதாகவே இருந்தது.
அவரது மேடைப் பேச்சுக்கள் இவ்வகையில் பெரிதும் உதவின. இதுபற்றி அந்தனி ஜீவா
பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

 அன்னை ரூபராணி ஜோசப் அரை நூற்றாண்டு காலம் மலையகத்திற்காக அர்ப்பணிப்புடன்
சேவையாற்றியுள்ளார். ஆசிரியர் பணியுடன் தொழிற்சங்கப் பணிகளிலும் ஈடுபட்டு,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாதர் சங்கத் தலைவியாகவும் செயற்பட்டுள்ளார்.
போட்டிகளில் இவர் பெற்ற பரிசுகள் பற்றியும் அதனோடு தொடர்புடைய பிற
விடயங்களையும் இங்கு குறிப்பிடுவோம். அவையாவன : 1999இல் நோர்வே தமிழ்ச் சங்கம்
நடத்திய அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது "*இடம்பெயர்வு*' என்ற சிறுகதை
முதற்பரிசைப் பெற்றது. ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய அகில இலங்கை

No comments:

Post a Comment