Monday, 16 August 2010

திமிலைத்துமிலன்:

திமிலைத்துமிலன்:

பெயர்: எஸ். கிருஸ்ணபிள்ளை.
புனைபெயர்கள்: கவிதை – திமிலைத் துமிலன், கிருஷ்ண பாரதி
ஓவியம் சிற்பம் - கிருஷ்ணா
எழுதா இலக்கிய ஆய்வுகள் - ஆலையடிச் சோலையான், பேய்மகன், இளமாலதி
சிறுகதைகள் - மாலதி
பிறந்த இடம்: திமிலைத்தீவு, மட்டக்களப்பு (25.9.1933)


படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, ஆய்வுக்கட்டுரை, ஓவியம், நாடகம், சிறுவர் பாடல்கள், மொழிபெயர்ப்பு

படைப்புகள்:

    * நீரர மகளிர் காவியம் - 1959
    * கொய்யாக் கனிகள் காவியம் - 1960
    * நெஞ்சம் மலராதோ - இசைப் பாக்கள் - 1968
    * எல்லாம் எங்கள் தாயகம் - இளைஞர் இலக்கியம் - 1986
    * முத்தொள்ளாயிரம் இலக்கிய நாடகம் - 1988

சிறுவர் பாடல்கள்:

    * அழகு முல்லை –1982
    * அணில் வால் - 1993

நாவல்கள்:

    * மஞ்சு நீ மழை முகில் அல்ல – 1985, 1966

மொழிபெயர்ப்பு:

    * கலேவலா என்னும் பின்லாந்து இலக்கியக் கருவூலத்தை தமிழாக்கம் செய்தார்.

விருதுகள், பட்டங்கள்:

    * கவிமணி – மட்டக்களப்பு கலாச்சாரப் பேரவை
    * கவியரசு - இந்து இளைஞர் மன்றம்
    * கவிகுல பாஸ்கரன் - மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை பொன்விழா விருது
    * வழி தவறிய வண்டு – குழந்தை எழுத்தாளர் சங்கக் கவிதைப்போட்டி – முதல்பரிசு - 1960
    * சீதா தந்த செல்வம் - கதம்பம் சிறுகதைப் போட்டி – 1965
    * தேனருவி நாடகப் போட்டி – முல்லைக் குமாரி தங்கப் பதக்கம் - 1966
    * ஈடிபஸ் - இலங்கை கலைக்கழக மேடை நாடகப் போட்டி – 1970
    * குருதிக் கடல்கள் - வடக்கு கிழக்கு அமைச்சு வவுனியா தமிழ் விழா கவிதைப் போட்டி – முதற்பரிசு
    * அணில் வால் - வடக்கு கிழக்கு கலாச்சார அமைச்சின் நூற்பரிசு

இவர்பற்றி:

    * இவர் பித்தம் தெளிய என்ற கூத்து நாடகத்தை எழுதினாரர். பல கூத்துக்களை நெறிப்படுத்தி நடித்தும் உள்ளார். 20 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி நெறியாள்கைசெய்தும், மேடையேற்றியும் உள்ளார். 1958 இல் மட்டு ஆசிரிய கலாசாலையில் சிற்பக் கண்காட்சி நடத்தினார். கதம்பம், கலைச்செல்வி ஆகிய சஞ்சிகைகளில் ஓவியராகப் பணியாற்றினார். வீரகேசரிப் பத்திரிகை நடாத்திய கண்ணாடி ஓவியப் போட்டியில் இவரது சிவதாண்டவம் ஓவியம் பரிசு பெற்றது. இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், மித்திரன், தினபதி, சிந்தாமணி, தினக்குரல், கல்கி, ஆனந்தவிகடன், தாமரை, தென்றல், கலைச்செல்வி, கதம்பம், வெற்றிமணி ஆகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.

No comments:

Post a Comment