Monday, 16 August 2010

செங்கதிர்' மாத இதழ்

  மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் "செங்கதிர் இலக்கிய இதழ்' கடந்த இரு வருடங்களாகத் தொடர்ந்து வெளிவருகிறது. காத்திரமான ஆக்கங்களுடன் வெளிவரும் இச்சஞ்சிகை பன்முகப்பட்ட இலக்கியத் தேடலுடனும் தேசிய ரீதியான பார்வையுடனும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. இதன் நவம்பர் 2009 இதழ் எம் பார்வைக்குக் கிடைத்துள்ளது. இதில் உள்ள சில ஆக்கங்கள் விசேடமாக குறிப்பிட வேண்டியவை ஆகும். அதிதிப் பக்கம், கதிர்முகம், அற்றைத் திங்கள், எனக்குப் பிடித்த என் கதை, விளைச்சல் முதலியன இச்சஞ்சிகையின் தொடர் அம்சமாகும். "அதிதிப் பக்கத்தில்' இம்முறை பிரபல கல்விமானும் ஆய்வு நூல் ஆசிரியரும் நாடகாசிரியருமான கலாநிதி அருட் சகோதரர் எஸ். ஏ. ஐ. மத்தியூ இடம்பெறுகிறார். இவர் கல்முனை பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் ஆவார்.

இவர் பல நூல்களை எழுதியவர். பல விருதுகளைப் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக சமய சமரச நோக்கு உடையவர். இந்து மத தத்துவங்கள் நன்கு அறிந்தவர். மட். ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனுடன் நெருங்கிய தொடர்பு உடையவர். இம்மிஷனின் முன்னாள் தலைவர் அமரர் சுவாமி ஜீவானந்தா பற்றிய நூலை எழுதிய ஒரே எழுத்தாளர்.

இவரைப் பற்றிய கட்டுரையை பிரபல எழுத்தாளர் துறைநீலாவணை செல்லத்துரை எழுதியுள்ளார். பிற ஆக்கங்கள் "கதிர்முகம்' என்ற தொடரில் இம்முறை ""பக்திரசப் பாமõலை இறுவட்டு நூல் வெளியீடு பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. மட்டக்களப்பைப் பொறுத்தவரை இறுவட்டு வெளியீடு மிகவும் அரிய செயற்பாடாகும். இந்த இறுவட்டு பிரபலமான ஐந்து ஆலயங்கள் மீது பாடப்பட்ட 91 காவடி பாடல்களைக் கொண்டுள்ளது. பாடல்களை இயற்றியவர் பிரபல கவிஞர் செ. குணரத்தினம். பாடியவர்கள் பிரபல சங்கீத வித்துவான் இசைக் கலைமாமமணி திருமதி சாந்தினி தர்மநாதன் மற்றும் அவரது மாணவரான வி. பத்மஸ்ரீ. இவ் வைபவம் மட். மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் 03. 10. 2009 இல் நடைபெற்றுள்ளது.

கதை கூறும் குறள் தொடரில் 3 ஆவது அத்தியாயம் இவ்விதழில் இடம்பெறுகிறது. "சுமையுள்ள சிலுவை' என்னும் கதை இடம்பெறுகிறது. அதற்குரிய குறள் "இடும்பைக் இடும்பை படுப்பரிடும் பைக் கிடும்பை படாசு தவர் (குறள் : 613) என்பதாகும். இதை எழுதியவர் கோத்திரன்

"அற்றைத் திங்கள்' தொடரில் பழம்பெரும் இலக்கியவாதிகளின் வரலாறு இடம்பெற்று வருகிறது. இவ்விதழில் பிரபல விமர்சகர் கே. எஸ். சிவகுமாரனின் வாழ்க்கைக் குறிப்பு இடம்பெறுகிறது. "எனக்குப் பிடித்த என் கதை' வரிசையில் இம்முறை தம்பு சிவா எழுதிய "உத்தமர்கள் உறவு' என்னும் சிறுகதை இடம்பெறுகிறது. இச்சிறுகதையைப் பிரசவித்த கதாசிரியரின் அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. சிறுகதைகளின் கீழே "யாவும் கற்பனை' என்று குறிப்பிட்டாலும் உண்மையில் யாவும் கற்பனையாக ஒரு சிறுகதையை எழுத முடியாது. அது யாரோ ஒருவரது உண்மை அனுபவத்திலிருந்தே உருவாக முடியும் என்பதை நாம் உணர்கிறோம். பிற தொடர்கள் :

"ஒரு படைப்பாளியின் மனப்பதிவுகள்' (கவிவலன்), "கொல்வணம் பெருக்குவோம்' (பன்மொழிப் புலவர் த. கனகரரெத்தினம்), "செங்கமலம்' தொடர் நாவல் (எம். பி. செல்வவேல்), "மலையகத்தில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்' (தெளிவத்தை ஜோசப்), "விரைவில் வீரக்கட்டி' (மிதுனன்), "விளைச்சல்' தொடர் கவிதை (செங்கதிரோன்) இடம்பெறுகின்றன.

இவை தவிர, வழக்கம் போல் பல கவிதைகளும் சிறுகதைகளும் இடம்பெறுகின்றன. இம்முறை "வான வில்' என்ற வாசகர் பக்கத்தில் ஒரு நீண்ட விமர்சனக் கடிதம் இடம்பெறுகிறது. "பசுமை நிறைந்த நினைவுகளை மீட்கும் செங்கதிர்' என்ற தலைப்பிலான இக்கடிதத்தை எழுதியவர், அவுஸ்திரேலியாவிலிருக்கும் எமது மண்ணைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வர் பாடும் மீன் சு. ஸ்ரீ கந்தராசா ஆவார். பல காத்திரமான சிந்தனைகளை அவர் இக்கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலக்கியவாதிகளின் எண்ணங்களை எதிரொலிக்கின்றன.

1975 ஆம் ஆண்டு "சுதந்திரன்' நடத்திய கவிதைப் போட்டியில் இவருக்கு முதற்பரிசு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு பத்திரிகையிலும் சஞ்சிகையிலும் ஆசிரியத் தலையங்கள் மிக முக்கியமானவை. ஆனால் அதை வாசிப்போர் மிக மிகக் குறைவு. இம்முறை "செங்கதிர்' தலையங்கம் சில முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. ஒருசில வருமாறு, ""இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களினூடாக தமிழ் இலக்கியத்தில் தாக்கங்கள் பற்றி தரவு போட்டுப் பார்க்க அதிக காலமாகலாம். அது பற்றிய தீர்க்க தரிசனம் கூறவும் யாருமில்லை. ஆனால் எமது கலை இலக்கியக் கூறுகளை முன்னெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பிலிருந்து இனியும் நாம் விலகிச் செல்ல முடியாது. இன்று இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அப்பாவிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க முடியாது.

இந்த அடையாளத்தை அதிர்ஷ்டவசமாக ஆக்கிக் கொண்டு ஆற்ற வேண்டிய ஏராளமான முன்னெடுப்புகளில் சில இலக்கிய முயற்சிகள் முக்கியமானதாகும். அதாவது கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் முனைப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. இது பற்றி ஒவ்வொரு இலக்கியவாதியும் தத்தமது கோணத்தில் சிந்திக்க வேண்டிய விடயம் இதுவாகும். (சஞ்சிகை விபரம் : ஆசிரியர் செங்கதிரோன் 19, மேல்மாடி வீதி, மட்டக்களப்

No comments:

Post a Comment