அந்த வகையில் சீர்பதகுலம் தொடர்பான விடயங்களும் பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை இவ்வாறான சீர்பாதகுலம் தொடர்பான விடயங்களை அறிவதற்கு சீர்பாதகுலச் செப்பேடுகள் ஆதாரங்களாக விளங்குகின்றன. சீர்பாததேவியினால் வீரர்முனையில் விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டதன் பின்னர் ஆண்டு தோறும் சீர்பாததேவியும் பாலசிங்கனும் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையாரை வழிபடுவதற்காக வீரர்முனை கிராமத்திற்கு வருவது வழமையாக காணப்பட்டது. இவ்வாறு வருகின்றபோது வீரர்முனையை அண்மித்த பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களையும் அவர்கள் தரிசிப்பது வழக்கமாக இருந்தது. இதன்போது அவர்கள் வீரர்முனை தொடர்பான விடயங்களை அவ்வாலயங்களில் செப்பேடுகளில் பொறித்து வைத்தனர். அவ்வாறான செப்பேடுகள் சீர்பாதகுலம் பற்றிய தகவல்களை வழங்குவனவாக உள்ளன. அந்தவகையில் பின்வரும் செப்பேடுகள் சீர்பாதகுலத்திற்குரிய செப்பேடுகளாக விளங்குகின்றன.
01.வீரர்முனை செப்பேடு
பாலசிங்கனால் வீரர்முனையில் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட்டு அங்கு அரச குலத்தவர்கள் குடியேற்றப்பட்டதும் பாலசிங்க மன்னனால் அவ்வாலயம் தொடர்பான விடயங்களும் அதற்கு வழங்கப்பட்ட சொத்துக்களையும் மன்னன் செப்பேட்டில் பொறித்து அவ்வாலயத்தில் சேமிக்குமாறு பணித்தான். அவ்வாறு வீரர்முனையில் சேமிக்கப்பட்ட செப்பேடு வீரர்முனைச் செப்பேடு என வழங்கப்படுகின்றது. அது பின்வருமாறு
கலிங்க தேசத்தின் கண்ணின் மணியாய்
இலங்கப் பிறந்திடும் இராசாதி இராசனாம்
உக்கிர சிங்கனின் உறைவிடம் கண்டி
மிக்க புகழ் நின்ற விற்பனை கன்னிகை
மருதப்புர வீக வல்லி என்பாளை
பேருற மணந்து பெற்றிடும் மகனாம்
வால சிங்கனென வலிவுறு சிங்கம்
வேல்விழி மாடவர் விரும்பிடு சிங்கம்
குலைகள் அறுபத்து நான்கிலும் வலியன்
தோலைவில் விண்ணில் துரிதமாய் செல்லும்
முந்திர வித்தையும் மாண்புற கற்ற
சுந்தர ரூபன் சோழநா டேகி
ஆரவா பாணன் அடியினை மறவா
குமராங்குசனென கூறு பெயரினன்
சுறறந்திடு சோழன் அருந்தவப்புதல்வி
சீர்பாத தேவியை திருமணம் செய்து
ஈழநாடேகி என்னும் கால்
சோழ மாமன்னன் துணையாட்; களாய்
முன்னர் குலத்து மக்களை அனுப்ப
ஏண்ணம் கொண்டு இன்புடனாய்ந்து
திரு வெற்றியூர் சேர்ந்திடும் அயலிலும்
பெருந்துறையூர் பின்னர் தன் மருங்கிலும்
கட்டுமாவடி கரையிரு புறத்திலும்
மட்டுக்கூங்கிய மறுபுறங்களிலும்
சிந்தன் பழையன் சீர்காங்கேயன்
சந்திரசேகர சதாசிவச் செட்டி
காலதேவன் கண்ணப்ப முதலி
ஞாலம் புகழ் முத்து நாயக்கன்
ஆச்சுத ஐயர் அவர்களது
இச்சை மனைவியரும் இன்னும் பலரையும்
சேர்த்துக் கப்பலில் சிவனை நினைத்து
வுhழ்த்துக் கூறி வழியனுப்பியே செல்ல
குப்பலும் கடல்மிசை அப்பனருளால்
சேப்பம் தாகவே தீங்கெதுவும் இன்றி
ஓடிவருங்கால் உயர்ந்தோர் நிதமும்
புhடிப் பரவும் பரமனங் குசனாம்
கோணேசர் வாழும் கோயில் முன்பாக
நூனாதிக் கொன்றினும் நகராது நிற்க
ஓலம் ஓலமென் றுமையாள் கொஞ்சும்
புhலனவனை பணிவுடன் வேண்டி
நேர்ததை அறிய நேரிழை நல்லாள்
தேர்ந்தவர் தமக்கும் செப்பவே அன்னார்
ஆழ்கடலில் இறங்கி இலசிப்பார்க்க
நீள்புவி போற்றும் நிமலனைங்கரனின்
திருவின் உருவச் சிலைதனை எடுத்து
உருவிலேற்ற அரசனும் அரசியும்
எங்குதானோடினும் எம்மவரின் கப்பல்
தங்குதடையின்றி தட்டினால் கரையில்
அவ்விடம் ஆலயம் ஐயனே உனக்கு
செவ்விதாய் அமைத்து சிறப்பொடு பூசனை
நாடொறும் செய்வோம் நலம் புரிவாயென
பாடிப்பரவி மன்றாடி யேநீர்
சிலையைத் தாங்குமத் தெய்வீகக்கப்பல்
அலைகடல் மீதே அல்லலுறாமல்
மட்டுக்களப்பு வாவியை அண்டி
முட்டுப்படாமல் மோதி நில்லாமல்
ஒரே திசையாயோடி உறைவிடம் இதுவென
வீரர்முனைக்கரை விருப்புடன் நின்றதே
அரசனும் அரசியும் ஆனைமாமுகற்கு
பரிவுடன் ஆலயம் பாங்குடன் அமைத்து
சிந்தர் குலத்திர் தெய்வீகச் சிலையதை
சிந்துயாத்திரைச் சின்னமென்றிருத்தி
மண்டலாபிசேகம் மாண்புறச் செய்து
அண்டர்கள் போற்றும் ஐயனைப் பணிந்து
சித்தி விநாயகர் சிந்து யாத்திரை
பிள்ளையாரென பெயரும் சூட்டி
தக்கபுகழாவ தகுவிழா வமைத்து
எக்காலத்துமிவ்விழா நிலைத்திட
பக்குவம் செய்து பல்வகை வாத்தியம்
தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம்
தம்மோடு வந்த தமதுறவினரை
செம்மனதுடனே திருக்கோயிற்பணி
புரியச் சொல்லி பூமி பகிர்ந்து
துனித்தனியளித்து தான் வணங்கி வந்த
துங்க வேலினையும் சாமிக்களித்து
முங்கள கீதம் பா மகிழ்வாய்ப் பாடி
ஓர் பெயரினால் ஓர் குலத்தவரென
சீர்பாததேவி யென் திருப்பெயர் சூட்டி
சீர்பாத குலம் சிறந்து விளங்கிட
பேராக வென்னாளும் பெருகி வாழ்ந்திட
ஆரவிந்த மலரும் அழகுசெங் கோல்கொடி
துரமாய்ப் பொறித்த தனிவிரு தேந்தி
அரசகுலமென அன்பாய் வாழ்த்திட
வாழ்த்தி நல்லாசி வழங்கவே பாலசிங்கன்
தாழ்த்திச் சிரமது தான் பணிந்தனரே
சாசணம்
கிண்ணறையன் வெளி கீற்றுத்துண்டு
மல்வத்தை வெளி மல்வத்தை குளம்
தரவை முன்மாரி சரிசம மாகிவிடும்
கரந்தை முன்மாரி கனசிறு நிலங்கள்
நரசிங்க னென நற்பெயர் பெறும்
வால சிங்கனுமே மானியமாக
சாசன மெழுதி சகலருக்குமீந்தான்
02.திருகோணமலைச் செப்பேடு
திருகோணமலையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொட்hபான விடயங ;கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீர்பாதகுலம் தொடர்பான பல சிறப்புக்களை திருகோணமலைச் செப்பேடு பின்வருமாறு விளக்குகின்றது.
திருமருவு காட்டுமாவடி பெருந்துறை சிந்த
உத்தர தேசமும்
செப்ப முடனேயுறைந் தொப்பித மிலாமலே
செகமீது வரு தீரனாம்
தருமருவு தெரியலவர் கொடி பெருமை தவள நிறத்
தகமிவை தனிவிளக்கு
தகமை பெறு பூனுலுடன் கவச குண்டலஞ்
சரசமலர் முரசாசனம்
அருமைசெறி ஆலாத்தி குடைதோரணமோடரிய
மதில் பாவாடையோன
அரசியின் குலமென அவள் நாமமே பெற்று
அன்று சீர்பாதமானோன்
உருமருவு தரையினில் அரிய புகழ்செறி
உலகுமகிழ் மகிமையுடையோன்
உரை விருது தனையுடைய ஆரியநாடு திரு
வெற்றியூரரசு புவிவீரனே.
03. திருக்கோயிற் செப்பேடு
திருக்கோயிலில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொட்hபான செய்திகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சீர்பாதகுலம் தொடர்பாக விளக்கும் திருக்கோயில் செப்பேடு பின்வருமாறு அமைகின்றது.
திருவருள் கயிலைச் சிவனரள் புரிய
மருவளர் ரிலங்கை மன்னனாம் வால
சிங்கனென்னும் சிறந்த பேருடையான்
சித்து வித்தையில் செகமெச்சிய தீரன்
கயிலை ஞானம் அறுபத்து நாலும் கற்றுத்தேறினோன்
இருக்கு யசுர் சாமம் அதர்வமெனும்
வேதம் நான்கும் விரும்பி யுணர்ந்தோன்
குமண குளிகையின் கார சக்தியால்
நூன தேசவள விகற்பங்களை
நன்றாய் அறிந்தோன் ஈழதேசமெனும்
இலங்கா புரிக்கு இராச தானியென
கண்டிமா நகரை கனம் பெற வகுத்து
செங்கொல் செலுத்தி தேசத்தை யாளுகையில்
மன்னனு மப்பொ மணஞ்செய்யக் கருதி
துன்னு திரைகடல் துரிதமாய் தாண்டி
மன்னு சோழன் மாதவப் புதல்வியை
மணமாலை சூட்டி மகிழ்ந் திருக்கையில்
இராசனும் தன் பவனாகிய ராணியாம்
அம்மா ளுடன் சனங்களையும் சேர்த்து
சந்தோச மாக தென்னிலங்கா புரி
சேர விரும்பி ஆரியநா ட்டு
ஆந்தணர் தம்மில் அச்சுதனையங்கார்
ஆவர் மனைவி செந்திரு மாது
தேவியா ருடன் திருவெற்றி யூரின்
சுpவனடி மாறவ சந்திர சேகர
சுமய தீட்சதர் தையலாள் பார்வதி
குட்ட மாவடி கண்ணப்ப முதலி
முத்து நாயக்கன் முதலியோருடன்
குடி மக்களை கூட்டிச் சேர்த்து
கப்பலோட்டக் கைதேர்ந் தவரில்
சங்கரச் செட்டி சதாசிவச் செட்டி
இவர்களை யேற்றி இராசனும் மிராணியுமேறி
தென்னிலங்காபுரி திசை நோக்கி வருகையில்
திருகோணமலை திரைகடல் நடுவில்
கட்டிய தன்மையாய் கப்பலும் நின்றது
நின்றிடும் கப்பலை கண்டது மரசன்
காரண மேதென கண்டறி வீரென
ஏவ லாளர் இறங்கிப் பார்க்கையில்
ஐந்து கரமும் யானை முகமும்
அங்குச பாசமும் தாங்கிய கையுடன்
எங்கள் பிரான் எழுந்தரளி யிருக்கின்றாரென
அவ்வரை கேட்டு அரசனும் திகைத்து
அந்தணர் தங்களை அன்படன் பார்த்து
ஐயனே நீங்கள் ஆழியில் இருக்கும்
மேய்யனை கப்பலில் விரைவுடன் சேரென
ஆவ்வார்த்தை கேட்டு அந்தண ரானொர்
கண்ணீர் சொரிய கசிந்த மனதுடன்
வெள்ள மதம்பொழி வினாயக பிரானை
உள்ளன்புடன் ஊக்கமாய் நின்று
கணேசனை வாவென கைகூப்பித் தொழ
அவ்வுரு வாகும் ஐங்கரத் தண்ணல்
திருவடி தன்னை சீக்கிரம் காட்ட
கடலில் இருந்த கருணாகரனின்
பாதார விந்தம் பற்றிச் சேர்த்தனர்
பற்றிய பொழுது பாராளு மன்னன்
சித்தம் மகிழ்ந்து திருவடி வணங்கி
ஐந்து கரனே இச்சிந்து யாத்திரையில்
ஊன்திருவடி காண என்தவம் புரிந்தோம்
எத்தினோம் என்று இறைஞ்சிப் பணிந்து
கருணா கரனே இக்கப்பலானது
கண்டிமாநகர் கரையை அடைந்தால்
ஆலயம் அமைத்து அவ்விடத்தி லிருத்தி
பூசை செய்விப்பேனென பூபதி போற்றினான்
இவ்வாறு வாய்திறந்து இராசனும் துதிக்க
செவ்வாய் மடலாள் சிரசில் கைகூப்ப
கணேச னருளால் கப்பலுமோடி
சம்மாந்துறை சார்ந்திடு நகரம்
வீரர்முனையென விளம்மிய திக்கரை
கப்பல் செர கண்டு எல்லோரும்
கப்பலை விட்டு கரையில் இறங்கி
தச்சர் சித்தர் தட்டார் முதலிய
குடி மக்களை கோவு மழைத்து
ஐங்கரன் கடவுளுக்கு ஆலய மொன்று
சீக்கிரம் அமையென செலவு கொடுக்க
அரச னுரைப்படி அலயம் அமைத்தார்
அந்தண ராதியோர் அபிசே கித்து
விநாயகர் பெருமானை வீழ்ந்தடி பணிந்து
கோமா னுரைப்படி கோயிலுள் வைத்தார்
கண்டி யரசன் கணேசப் பெருமானை
சிந்த யாத்திரையுள் திருவடி கண்டதால்
சிந்த யாத்திரைப் பிள்ளையார் நாமத்துடன்
நித்திய பூசை நியமமாக செய்து
விநாயகர் ஆலயம் விளங்கிடும் பொருட்டு
செந்நெல் விளைவு சிறந்த நிலங்களும்
தேவால யத்தின் திருப்பணி சாமான்
எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து
அந்தணர் தங்களை அரசனழைத்து
பாசாங்கு சங்கரன் பாதார விந்தம்
பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனால்
சீர்பாத தேவியின் திருப் பெயராற்
சீர்பாத குலமென சிறந்த பெயர்சூட்டி
அரசர்க்கும் தேவர்க்கும் அரும் விருந்தான
வெற்றிக் கொடியை விரும்பிக் கொடுத்து
வணிகர் தம்மையும் வரும்படி செய்து
இரு சாதியாரும் இசைந்தெக் காலமும்
ஆட்சி புரியுமென்று ஆசீர் வதித்து
எழுந்தைப் பரராசன் இவர்களுக் கீந்து
குடி மக்களால் கோயில் சிறக்க
சாதிக் காணிகள் சகலருக்கும் கொடுத்து
செங்கோல் வேந்தனும் தேவியுமாக
கண்டிமா நகரை கனம்பெற வடைந்தார்
04.கொக்கட்டிச்சோலை செப்பேடு
கொக்கட்டிச்சோலையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொட்hபான செய்திகளும் சீர்பாதக் குடிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான கொக்கட்டிச்சோலை செப்பேடு பின்வருமாறு அமைகின்றது.
துறைபோர் வீரகண்டன் சிந்தாத்திரன்
காலதேவன் காங்கேயன்
நரையாகி வெள்ளாகி முடவனெனும்
பெண்பழச்சி குடியேழ்காண்
வரையாக இவர்களையும் வகத்து வைத்து
மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று
திரையகழ் சூழ்புவியரசன் சேர்த்து வதை;து
சீர்பாதமென்று செப்பினானே
05. துறைநீலாவணைச் செப்பேடு
துறைநீலாவணையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொடர்பான செய்திகளும் சீர்பாதக் குடிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. (இலங்கை நூதனசாலையில் பணியாற்றிய திரு எம். டி. இராகவன் என்பவர் இச்செப்பேட்டினை நூதனசாலையில் சேமித்ததுடன் 24.10.1953ம் ஆண்டு Spolia Zeylancia Vol.27 Part-I எனும் நூதனசாலை வெளியீட்டில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் குறிப்பிட்டுள்ளார்) இவ்வாறான துறைநீலாவணை செப்பேடு பின்வருமாறு அமைகின்றது.
பரத கண்டத்தில் பண்புடைய அரசராய்
தரமுட னாண்ட சற்சன சோழன்
தவப்பு தல்வியாக தரையினில் செனித்த
நவமணி நேரும் மாருதப் புரவீக
வல்லிதன் குதிரை வதனம் மாற
எல்லையிற் தீர்த்தம் இந்திய முழுவதும்
படிந்து திரிந்து பயனில தாக
வடிவேற் பெருமான் வைகிய கதிரை
சென்றுதன் குறையை தீர்ப்பது முறையென
மனறலங் குழலி வந்தனழ் லிலங்கை
கந்தன் கழலடி காரிகை வணங்க
விந்தை யாக விரும்பும் நாகநன்
நாடதை கண்ணி நகுலநன் மனைவியின்
மாடே தெற்காய் மல்கும் நதியில்
முழுகிட வுந்தன் முற்பக வினையால்
தழுவிய குதிரை சாயல் தீர்ந்து
விளங்குவா யென்று மெல்லிய கனவில்
உளமதுருக உவப்புடன் கண்;டு
கீரி மலையை கிட்டியே செல்வி
தீரினில் படிய நீத்தது மாமுகம்
அச்செயல் தன்னை அறிந்திடு மாது
மெச்சிட ஒற்றரை விரைவினிற் றான்
உச்சிதமாக உவப்புட னனுப்பினள்
அச்சம தில்லையென அரசன் விருப்புடன்
கந்த னுருவக் கனகச் சிலைதனை
விந்தைய தாக விரைவுட னனுப்ப
கச்சாத் துறையின் கரையதிற் கொண்டு
மெச்சிட ஒற்றர் விட்டனர் படகை
அவ்விடந் தனில் ஆயிழை வந்து
செவ்வை சேர் காங்கேயன் திருவு வந்தனை
நகுல மலைக்கு நடந்தனள் கொண்டு
தகைமைசேர் கோயில் தையலாள் இயற்றி
கொடித்தம்பம் நட்டு குற்மில் விழாவை
துடியிடை மங்கை சோர்வுறச் செய்து
காரண நாமம் களறின ளப்போ
பாரதி லென்னை பற்றி தீய
மாமுக வடிவம் மாறின தாலே
மாமுக னுறைவத மாவிட்ட புரம்
காங்கேய னுருவது கரைசேர் இடம்
காங்கேயன் துறையென கழறியே மீண்டு
தாய் நாடேக தையலாள் இருந்தாள்
அழகர் படவு அடங்கலும் அம்மை
ஐங்கரக் கடவுட் ஆலயம் அமைத்து
துங்க முடனே சொல்லருள் நிதியும்
கிண்ணற யம்வெளி தரவை முன்மாரி
தண்ணிய மல்வத்தை குளமும் வெளியெனும்
செந்நெல் காணியும் சேயிழை யுதவி
விழாக் கொண்டாடி விருப்புட னங்கு
நாளும் திருப்பணி நலமுடன் புரிய
ஆளும் செங்கோல் அரவிந் தம்கொடி
விருதென வீந்து விருப்படன் தேவியின்
திருபெய ரென்றும் மறவாது வழங்க
சீர்பாதத் தோரென சீரிய நாமம்
போபெற வுவகைப் பிளம்போ டீந்தன்றி
கோயி லூழியம் குறைவிலா தியற்ற
ஆயநான்னு மரபோர் ஆணையிற் படிந்து
தூன்துதி வேலை தரணியிற் துதிக்க
புhன்மொழி யீந்து பத்தா வுடன்
கண்டியினை அடைந்து கருணை ததும்ப
அண்டிய பொருட்கள் அன்பாய் அனுப்பினாள்
தாய்நாடு சென்று தவமணி யனையாள்
ஆயதன் மாளிகை அமர்ந்தன ளாக
அரசியின் கட்டளைக் கமைந்து நடக்க
வரமுறு நால்வரும் வாதிட்டு வெருவ
தங்க வேலதை தண்ணளி யுடனே
மங்காச் சிந்தன் வலுவுடன் எடுத்து
வடக்கை நோக்கி வந்தோர் இடத்தில்
திடமுடன் தில்லை மரத்தில் வைத்து
அங்குள பதியின் அமர்ந்தேர்க் குரைத்து
துங்கமுட னவர்களை துணைவராய் கொண்டு
கனகவேற் பணியை களிப்புட னெடுத்து
மனமுடன் கொத்து மண்டப மமைத்து
தில்லைக் கந்தனென திருநம மிட்டு
வல்லை மற்றிடம் வந்தோர் தமையழைத்து
உரிமை உங்கட்கு உளதென் றேதினான்
வரிபடர் வழியாய் வந்தநாள் முதலாய்
கந்தனுக் கினிய கடிமலர் தூவலும்
வந்தவர் பூசையை வழிகொடு நடத்தலும்
திருவார் சிந்தனின் செம்மை வங்கிசமே
சீர்பாததேவியின் பேரால் திகழு மரபினர்
எல்லிடை யெண்ணி புதுவுயர் மரபோர்
வாழும் போதினில் வகுத்தார் மரபோர்
கேழும் யாரெனக் கிளத்து மிங்கு
சுpந்தாத்திரன் சீரிய காலதேவன் காங்கேயன்
நுரையாகி வெள்ளாகி முடவன் பழைச்சி
படையன் பரதேசி பாட்டு வாழி
உடைய னருளினன் உத்தம ஞானி
ஆகுவா ரிவரை அடிப்படை யாக்கி
வாகு மருபுடன் வதியச் செய்தனர்
நான்கு வருணமும் நலமுடன் பூனூல்
தான் மார்பி லணியும் தன்னை யுடையார்
வில்வீர ரன்றி வேறோர் பூனூல்
இப்புவி தனில் இடாரென மதித்து
பூனூல் அணிந்த பொற்புறு அரசரை
அந்நூல் அணிந்த அந்தண ரென்று
கூறுவ தன்றி குவலய மதில்
அரசியின் குலமென் அழைப்பது சாலும்
தரமுறு செங்கோல் தகைமைக் கொடி
அரவிந்த மலரும் அமைந்த மையால்
மங்கலப் பொருளாய் வழங்கிடு மிருகையும்
துங்கமுடன் பெற்று துலங்கவே
அரசர்க் குரிய அறுதொழில் தவழ
மரபுட னாற்றி வரவ தென்று
மன்னியே வாழும் சீர்பாதத் தோர்
மனுகுலமென வகுத்தார்.
மட்டக்களப்பிலே வாழ்கின்ற பல் வேறு சாதிகளின் மத்தியில் சீர்பாதகுலமும் சிறப்பானதொரு குலமாக பல்வேறுபட்ட நற்பண்புகளுடன் விளங்குகின்றது. சிறந்த வரலாற்றினையும் அதற்கான தெளிவான ஆதாரங்களையும் கொண்டுள்ள இக்குலமானது பரந்துபட்ட மக்கள் சமுதாயத்தையும் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாறான சீர்பாதகுலம் தொடர்பான தகவல்களை வழங்குகின்ற வகையில் சீர்பாதகுலச் செப்பேடுகள் காணப்படுகின்றன. இவை இந்நாட்டின் தொல் பொருள் சின்னங்களாக இலங்கை நூதனசாலைகளில் பேணப்பட்டு வருகின்றன. அத்தோடு காலத்துக்கு காலம் அது தொடர்பான நூல்கள், கட்டுரைகளும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீர்பாதகுல ஆராட்சியில் ஈடுபட்டு அதன்புகழை உலகெங்கும் பறை சாற்றிய பெருமை தமிழ் அறிஞர் அருள் செல்வநாயகம் அவர்களுக்குண்டு. சீர்பாதகுலம் பற்றிய கட்டுரை அருள் செல்வநாயகத்தினால் எழுதப்பட்டு சென்னை மாநகரில் நடந்தேறிய 2வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முதல் நாள் அன்று அவரால் படிக்கப்பட்டு பல அறிஞர்களின் பாராட்டையும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பரிசையும் பெற்றுள்ளது. பின்னர் அக்கட்டுரை “சீர்பாதகுலவரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டமை சீர்பாத மூகத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும் அருள் செல்வநாயகத்தின் விருப்பினை நிறைவு செய்யுமுகமாக எம்.கருணைரெத்தினம் அவர்களால் குருமண்வெளியில் சீர்பாததேவி அறநெறிப்பாடசாலையில் சீர்பாததேவிக்கு சிலை வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குருமண்வெளியில் வைக்கப்பட்டுள்ள சீர்பாததேவி சிலை
No comments:
Post a Comment