சு.ஸ்ரீகந்தராசா:
பெயர்: சு.ஸ்ரீகந்தராசா
புனைபெயர்கள்: திருமுருகரசன், பாடும்மீன்
பிறந்த இடம்: களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு (1.10.1953)
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா
தொடர்புகளுக்கு:
முகவரி: 1 Petra Court, Eppinga, Victoria – 3076, Australia
Tel: 61 3 9408 4519, 61 0 422 444 132
E.mail: srisuppiah@hotmail.com
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதைகள், கட்டுரை, நாடகம், விமர்சனம், ஆய்வுக்கட்டுரை
படைப்புகள்:
* சந்ததிச் சுவடுகள் - நாடகங்களின் தொகுப்பு
* மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள்
* தமிழினமே தாயகமே – கவிதைத் தொகுப்பு
* தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும் - ஆய்வுரைகள்
* ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப் பயணம்
எழுதி, இயக்கி மேடையேற்றிய நாடகங்கள்:
* கற்பனையில் தேவலோகம்
* ஆலம்பழம்
* ஊருக்குத்தாண்டி உபதேசம்
* பகையிலும் பண்பு
* உணர்ச்சிகள்
* பிராயச்சித்தம்
* தம்பியாடி இது?
* அளவுக்கு மிஞ்சினால்
* சிதைந்த கனவுகள்
* புத்திரபாசம்
* சந்ததிச் சுவடுகள்
* கன்னி மனம் (அவுஸ்திரேலியாவில்)
விருதுகள்:
* சிறந்த நடிகர். சிறந்த நாடக இயக்குனர், சிறந்த நாடக எழுத்தாளர், சிறந்த வில்லிசைக் கலைஞர் ஆகியவற்றுக்கான பரிசுகள் மட்டக்களப்பு கலாசாரப் பேரவையினால் 1970 க்கும் 1982 க்கும் இடையில் பல முறை பெற்றிருக்கிறார்.
* பேச்சுப் போட்டிகளில் உள்ளூரிலும், மாவட்ட ரீதியிலும் அகில இலங்கை ரீதியிலும் பல பரிசுகள்
* அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பணிக்காக விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கம், விக்ரோறிய தமிழ் கலாசாரக்கழகம், மெல்பேண் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்புக்கள் பாராட்டி வழங்கிய விருதுகள்
* செந்தமிழ்ச் செல்வர் என்ற பட்டமும் சிறப்பு விருதும் - அவுஸ்திரேலிய பல்லினக் கலாசார அமைச்சு – 2005
* அயலக முத்தமிழ்ப் பணிக்கான விருது - இந்திய திருச்சிராப்பள்ளி புனிதவளனார் கல்லூரி - 2007
* இன்னும் கன்னியாக - ஞானம் சஞ்சிகையின் அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு - 2009
இவர்பற்றி:
*
இவர் ஒரு சட்டத்தரணி, சமாதான நீதவான், அத்தோடு அவுஸ்திரேலிய குடிவரவுச் சட்ட முகவராகவும் உள்ளார். இவரது 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. சங்ககாலமும் சங்க இலக்கியங்களும், ஐம்பெருங்காப்பியங்கள், மாமன்னன் எல்லாளன் (வலாற்று நாடகம்), திருவெம்பாவைச்சிறப்பு, தமிழ் இன்பம் (வானொலிப்பேச்சுக்கள்) என்பவற்றோடு இவரது சிறுகதைத் தொகுதியொன்றும் விரைவில் வெளிவரவிருக்கின்றன. கடந்த 18 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் சேவை செய்து வருபவர். அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் தலைவராகவும், விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் அரும்பணிகளை ஆற்றியவர். தமிழ்ச்சங்கத்தின் சார்பில் முத்தமிழ்விழாவையும், மாணவர்களுக்கான பேச்சு, இசைப் போட்டிகளையும், சர்வதேச இலக்கியப் போட்டிகளையும் பத்துவருடங்களுக்கு மேலாக நடாத்தியவர். அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக தனித்தமிழ் இசைவிழாவையும், தமிழ் நடனவிழாவையும் நடாத்தியவர். சிறந்த பேச்சாளர், நாடக நடிகர். தனது இனிமையான மேடைப் பேச்சினாலும், கவிதைகளாலும் எண்ணற்ற தமிழ் ஆர்வலர்களின் இதயங்களைக் கவர்ந்தவர்
No comments:
Post a Comment