மண்டூர் அசோகா:
பெயர்: திருமதி அசோகாம்பிகை யோகராஜா
புனைபெயர்: மண்டூர் அசோகா
பிறந்த இடம்: மண்டூர், கல்லடி, மட்டக்களப்பு (02.03.1949)
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை
படைப்புக்கள்:
* கொன்றைப் பூக்கள் - சிறுகதைத் தொகுப்பு – 1976
* பாதைமாறிய பறவைகள் - நாவல் - 1992
* சிறகொடிந்த பறவைகள் - 1993
விருதுகள், பரிசுகள்:
* சிறந்த சிறுகதைக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு
* சிறந்த நாவலுக்காக வட கிழக்கு மாகாண சபைப் பரிசு
* வகவம் கவிதைப் போட்டியில் பாராட்டும் பரிசும்
* மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை முத்தமிழ் விழா கவிதைப் போட்யில் முதலாமிடம்
* சார்க் அமைப்பின் இலங்கைப் பெண் எழுத்தாளருக்கான போட்டியில் பரிசு
* தமிழ்நாடு இதய கீதம் இலக்கிய பொதுநல இயக்கம் வழங்கிய சாதனையாளருக்கான விருது
இவர் பற்றி:
* இவர் ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியை. இவரது படைப்புக்கள் தாய்நாடு, வீரகேசரி, ஜோதி, தினகரன், தினபதி, மலர், களம், இணைகரம், கலைச்செல்வி, தென்றல் மற்றும் இலங்கை வானொலியிலும் இவரது சிறுகதை, கவிதை, நாடகம், வில்லிசை என்பன இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment