திருக்கோணமலை இலங்கை தீவின் ஒரு சிறிய நிலபரப்புத்தான்! அந்த குறுகிய இடத்துக்குள் எமக்கே தெரியாமல் பல ஆச்சரியங்கள் புதைந்து கிடக்கின்றன. உலகின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காரணங்களால் பிரசித்தம் பெறுகின்றன. ஆனால், பல காரணங்களால் திருக்கோணமலையின் பிரசித்தம் வேணுமென்றே குறைக்கபட்டிருப்பது பலருக்கும் தெரியாததே!
இன்று திருக்கோணமலை என்று பலராலும் அழைக்கபடும் இவ்மாவட்டத்தின் உண்மை பெயர் “மச்சகேஸ்வரம்” என்று எத்தனை பேருக்கு தெரியும். (ஆதாரம்:- நிலாவெளி கல்வெட்டு)
திருமலையி ல் புகழ்பெற்ற திருக்கோணேஸ்வரம் மற்றும் சம்பந்தரின் திருக்கோணமலை பதிகம் ஆகியவை அமையப் பெறும்வரை இப்படியே அழைக்கபட்டு வந்து உள்ளது. எமக்கே உரிய சில கலாச்சாரங்கள் அந்நியர்களால் மட்டுமல்ல அயல்நாட்டவர்களாலும் மாறிவிட்டது!
ஆதிகாலத்தில் சோழர்கள் இலங்கையை முற்றுகையிட்டபோது அவர்களது ஆதிக்கம் நிறைந்த இடங்களில் ஒன்றாகவிருந்த திருக்கோணமலையில் பின்னர் சோழர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்பு வேண்டுமென்றே சில உள்நாட்டு மன்னவர்களால் பௌத்தமதம் உட்செலுத்தபட்டு இருக்கிறது என்பதை நிலாவெளி,ம்யிலான்குள ம் கல்வெட்டுகள் கூறி நிற்கின்றன. இவ்வாறு, உட்செலுத்தளுக்கு உள்ளாகிய இடங்களில் ஒன்றுதான் இப்போதைய திரியாய்! (முன்னைய ஒரு பதிவில் திரியாயில் பௌத்த விகாரை எச்சங்கள் உள்ளதை சொல்லி இருக்கிறேன்)
******** ******************** ******************** ******************** *****
இனி தெரியாத திருக்கோணமலை பதிவின் பிரகாரம், பலர் அறியாத திருக்கோணமலையில் அமைந்து உள்ள குளகோட்டன் குளத்தின் துன்பியல் கதையை பார்ப்போம்.
இன்று திருக்கோணமலைக்கு கந்தளாய் பிரதேசத்தின் ஊடாக பிரவேசிக்கும் பலரையும் வரவேற்கும் குளக்கோட்டன் குளத்தின் அணையில் ஒரு இளம் சிறுமி அமைதியாக உறங்கி கொண்டிருக்கிறாள் என்பதை பலரும் அறிந்து இருக்கமாட்டீர்கள்.
பல காலங்களுக்கு முன்பு குளக்கோட்டன் குளத்தின் அணை வெள்ளபெருக்கினால் ஒரு பகுதி உடைந்த போது அது ஒரு அபசகுனமாக கருதிய குளக்கோட்ட மன்னனின் சோதிடர்கள் மீளவும் குளக்கட்டு உடையாமல் இருக்க அணையை கட்டும் போதே கன்னிகழியாத ஒரு இளம் பெண்ணை உயிருடன் வைத்து கட்ட முடிவு செய்தார்கள். அதன்பிரகாரம் ராஜ பரம்பரையில் மன்னனின் மருமகளாகவிருந்த பெண்ணை அணையில் வைத்து உயிருடன் கட்டியிருக்கிறார்கள் . இதன் போது இறுதியாக எழுந்த பெண்ணின் அலறல சப்தத்தினை இப்போதும் கேட்கலாம் என்று அதன் அருகில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள். குளத்தின் அலைகள் கூட பெண்மை குரலில் பேசுவதாக கூறுவோர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்த நிகழ்வுக்கு பின்னர் ஏற்பட்ட எத்தனையோ அனர்த்தங்களின் போதும் குளத்தின் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நிகழ்கால தொழில்நுட்ப தரவுகள் கூறுகின்றன. (அதரம்:- நீர்பாசன திணைக்களம் திருமலை)
No comments:
Post a Comment