Thursday, 19 August 2010

எஸ்.பொன்னுத்துரையின் காழ்ப்புணர்ச்சியும் கோணங்கித்தனமும்

மட்டக்களப்புத்தமிழகம் என்னும் பத்து ரூபா விலையில் விற்பனைக்கு வந்துள்ள நு}லை நோக்கிற்கு எடுக்கும்பொழுது, செலாவணியிலுள்ள கதையொன்று ஞாபகத்திலெழுகின்றது. கலியாணத்தரகரொருவர் பெண்ணைப் பற்றிப் பலவாறு புகழலானார். “நிறத்திலே தங்கச் சிலை@ அழகிலே கோல மயில். குணத்திலே ஒப்பாருமிக்காருமிலர். குறைந்தது இரண்டு இலட்சங்களாவது சீனமாகக் கொண்டு வருவாள். ஏக புத்திரியாகையால் கூட்டியுந் தருவார்கள். இவ்வளவு பணமிருந்தும் வீட்டு வேலைகளைப் பம்பரமாகச் செய்வாள். சமையலில் நளபாகந் தோற்றுப் போகும். சினக்கவோ, அழவோ அவளுக்குத் தெரியாது. எதையுஞ் சிரித்துக் கொண்டு பொறுப்பாள். குலத்தின் உயர்வையும், குடும்பத்தின் மேன்மையையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.....” என்று அடுக்கிக் கொண்டே போன தரகர், சற்றே தரித்து, “ஆனால்....” என்று இழுக்கத் தொடங்கினார். “ஆனால்... என்ன தரகர்?” என்று மாப்பிள்ளை வீட்டார் ஆவலுடன் கேட்டார்கள். “இல்லை, ஒன்றுமில்லை.... பெண்ணை எல்லோரும் உரிலே அலியென்றுதான்.... அதைப் பார்த்தால் இவ்வளவு காசு வருமோ,” என்று தரகர் விளக்கினாராம்!

இதேபோல, மட்டக்களப்புத் தமிழகம் நல்ல தாளில், அழகிய முறையில் அச்சிடப்பட்டுள்ளது. கவர்ச்சியான பலபடங்களை வழுவழுப்புத் தாளில் அச்சிட்டுச் சேர்ந்திருக் கின்றார்கள். நு}லாசிரியரின் முழுப் பக்கப்படம் (5” ஒ 4”) நன்றாக உள்ளது. உறுதியாக அட்டை@ கெட்டியான கலிக்கோ பையின்டு@ பக்கக் குறிப்பு நாடா அத்தனையும் பொலிவு சேர்க்கின்றன. சில வேளைகளிலே தலையணை யாகவும் பயன்படத் தக்கதாகச் சுமார் அறுநு}று பக்கங்களைக் கொண்டுள்ளது. ‘நு}லாசிரி யரை வென்ற உரையாசிரியர்’ என்று புகழ்பெற்றார் மட்டக்களப்பு வித்துவான் பூபாலப்பிள்ளை அவர்கள். நு}லாசிரியரை வென்ற பதி;ப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் குரும்பசிட்டி மு. சபாரத்தினம் அவர்கள். திருமகள் அழுத்தகத்தினர் எப்பொழுதும் நு}ல்களை அழகாக அச்சிடுபவர்கள். இருப்பினும், மட்டக்களப்புத் தமிழகம் முதன்மைபெற்று விளங்குகின்றது. இத்தனையையுங் கூறிக் கொண்டு, கலியாணத் தரகரின் பாணியில், ஆனால் என்று இழுத்துக் கொண்டு பேனாவை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்த மேற்படுகின்றது.

ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம் இதுவரையிலும் தரமான நு}ல்களையே வெளியிட்டது. தமிழ்ப் புரவலர் ஈழகேசரிப் பொன்னையாக் கமக்காரரின் புகழும் ஒங்கிற்று. ஆனால் அந்தப் புகழுக்கு ஊறுசெய்து, நீங்காத கறையாக மட்டக்களப்புத் தமிழகம் நிலைபெற்று விட்டது. “வெளியீட்டு மன்றம் இதுவரையிற் கிழக்கிலங்கை நு}லாசிரியர் எவருடைய நு}லையேனும் வெளியிட வில்லை. இது பாரபட்சமான நடத்தை என்று சிலர் குறைகூறுகின்றார்கள். இதனை நிவிர்த்தி செய்வான் வேண்டியே, மட்டக்களப்புத் தமிழகத்தை வெளியிட்டோம்” என்கிற கருத்தை, மட்டக்களப்பில் நடைபெற்ற வெளியீட்டு விழாவிற்சிலர் தெரிவித்தார்கள். கிழக்கிலங்கையில் வித்துவான் கந்தையா ஒருவர்தான் தமிழறிந்தவர் என்று வெளியீட்டு மன்றத்தினர் நினைப்பார்களேயானால் அது தவறானதாகும். காக்கா பிடித்தற் கலையை நுண்கலையாகப் பயின்றமையும், பிரசாரப்பக்கத் துணையை வைத்திருக்கின்றதன்மையும் தமிழறிவின்அளவுகோல்களாக மாட்டா

No comments:

Post a Comment