Thursday, 19 August 2010

ஆறுமுகம் அரசரெத்தினம்

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளைக்கிராமத்தை சேர்ந்தவர். இவரது பாடசாலைக் காலத்திலேயே கலைகளிலே அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டவர் என்பது அவரிடம் இருக்கின்ற பல நினைவுச் சின்னங்கள் சான்றாகின்றன. பாடசாலைக்காலத்திலே விவாத அரங்குகளை நடாத்துவதிலேதான் தனது கலைத்துரைப்பயணம் ஆரம்பித்ததாகச் சொல்கிறார். .
இவர் இப்பிரதேசத்திலே இருக்கின்ற கலைஞர்களை ஒன்று திரட்டி களுதாவளைக் கலைக்கழகம் எனும் பேரிலே ஒரு கலைக்கழகத்தினையும், திருவருள் நூல் வெளியீட்டுக்குழு என்ற ஒரு அமைப்பினையும் உருவாக்கி பல நூல்களையும் வெளியிட்டு வருகின்றார். களுதாவளை கலைக்கழகம் மூலமாக பல கலைஞர்களை ஒன்று திரட்டி தமிழர்களுக்கே உரித்தான கரகம், கூத்து, வில்லிசை, போன்றவற்றை அரங்கேற்றி வருகின்றார்.
இவர் சிறந்த பேச்சாளரும்கூட. இவரது பேச்சினை எவரும் விரும்பி ரசிப்பார்கள். இவர் ஆலயங்களிலே சமய சம்மந்தமான பேச்சுகளை வழங்குவதில் வல்லவர், அதேபோல் இலக்கியப பேச்சுக்களிலே சளைத்தவரல்ல. இதனால்தான் இவருக்கு வெண்கலம் என்கின்ற பெயரும் வரக் காரணமாகிவிட்டது.

அதே போன்று இவர் பாடல்கள் எழுதிவருகின்றார் அதிலும் குறிப்பாக பக்திப்பாடல்களை எழுதுவதிலே சிறப்பானவர். இப்பிரதேச ஆலயங்கள் பலவற்றினைப் பற்றிய பல பாடல்களை இயற்றி இருக்கின்றார். அத்தோடு பல பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களையும் வெளியிட்டு இருக்கின்றார். இவரது திருவருள் நூல் வெளியீட்டுக்குழவின் மூலமாக பல புத்தகங்கள் இதுவரை வெளிவந்தது இருக்கின்றன1. முழுப் பெயர் - ஆறுமுகம் அரசரெத்தினம்
2. தொலைபேசி இல - 094652250306
3. உயர் கல்வி - யாழ்ப்பாண பல்கலைக் கழகம் - தமிழ் (சிறப்பு)
4. பதவிகள் -
* மட்டக்களப்பு கச்சேரியில் எழுது வினஞர்* மட்- மாங்கேணி வாகரைப்பகுதி காணி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்.
* வவுனியா முத்தையன் கட்டு படித்த வாலிபர் குடியேற்றத் திட்டத்தின் போறுப்பதிகாரி.
* மட்டக்களப்பு, கொக்கட்டிச் சோலைப் பகுதியில் விவசாயப் போதனாசிரியர்.
* மட்- சிசிலியா மகளிர் கல்லூரியில் விவசாயம், தமிழ் பாட ஆசிரியர்.
* மட்-பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் தமிழ் பாட ஆசிரியர்.
* தமிழ் மொழி பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்.
* உதவிக் கல்விப் பணிப்பாளர்.
பொதுப் பணிகள் -

1. மட்- களுதாவளை சைவ மகா சபைத் தலைவர்.
2. மட்-களுதாவளை இளம் விவசாயிகள் கழகச் செயலாளர், தலைவர்.
3. மட்- களுதாவளை கெனடி விளையாட்டுக்கலகத் தலைவர்.
4. மட்- களுதாவளை முதலாம், இரண்டாம் குறிச்சி கிராம் முன்னேற்றச சங்க செயலாளர், தலைவர், கணக்காய்வாளர்.
5. மட்- செட்டிபாளையம் கண்ணகை அம்மன் கோவில் வண்ணக்கர்,பரிபாலன சபைத் தலைவர்.
6. மட்-களுதாவளை சுயம்புளிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்.
7. மட்- களுதாவளை சிவசக்தி சிறி முருகன் ஆலய பரிபாலன சபை ஆலோசகர்.
8. பஜனாவளி இசை மன்ற உறுப்பினர், போசகர்.
9. மட்- களுதாவளை கிராமிய கலைக்கழக போசகர். கட்டுரைகள் -
பத்திரிகைகளில் எழுதிய சிறப்புமிக்க கட்டுரைகள்...
1. தினகரன்- சுவாமி விபுலானந்தரும் 7 ம் ஆண்டு தமிழ் பாடப் புத்தகமும்.
2. வீரகேசரி - ஈச்சுரமா? ஈச்சரமா? - ஆய்வுகளும் ஐதீகங்களும்.
3. வீரகேசரி - களுதாவளைப் பிள்ளையார் கும்பாபிசேகம்.
4. நாவலர் குரல் - நாவலர் ஐயாவின் சங்கீத பிரேமை.
5. நாவலர் குரல் - "குயின்" என்கிளவி.
சஞ்சிகைகளில் வெளிவந்த சிறப்புமிக்க கட்டுரைகள்...
1. சிசிலியராகம் - நீங்காத நினைவுகள்.
2. கமத்தொழில் விளக்கம் - விவசாயமும் விஞ்ஞானமும்.
3. கமத்தொழில் விளக்கம் - சுதந்திர இலங்கையின் பொருளியல் வளர்ச்சிக்கு விவசாயக் கல்வியின் முக்கியத்துவம்.
4. கமத்தொழில் விளக்கம் - தாவரங்களின் மாறல்கள்.
5. நிழல் - சிலம்பு எங்கே
6. நிழல் - கண்ணகை இடது தனத்தை திருகி எறிந்தது ஏன்.
7. பேழை - கவிதைக்கு நயம் எழுதுதல்.
8. மலரும் வாழ்வு - சிறப்பு மலர் - தனியார் கல்வி நிறுவனங்கள்.
9. ஞானக்கதிர் - ஈச்சுரமா? ஈச்சரமா?.
10. மலறும் வாழ்வு - இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்க்கையும் வளமும்.
11. மலரும் வாழ்வு - வாலியைக் கொன்றது நீதியா.
12. தொண்டன் - யாரைத்தான் நம்புவதோ.
13. காரை நகர் தமிழ் வளர்ச்சிக்கழக சிறப்பு மலர் - கார்த்திகேயப் புலவரும் விதான மாலையும்.
14. கூர்மதி - கனவு
15. கூர்மதி - மருந்தா? மந்திரமா? யந்திரமா?
16. எழுவான் - மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலில் கண்ணகை அம்மன் காவியங்கள்.
17. வாழட்டும் விபுலன் பணி - சுவாமி விபுலானந்தர் நினைவி தின விழா.
இதுவரை பத்து நூல்கள் பத்தாயிரம் பிரதிகளுக்குமேல் விநியோகிக்கப் பட்டுள்ளது.
தனித்துவம் - 50 வருடங்களாக வெண்கலமான குரலில் இலக்கிய, சமய பேச்சுக்கள். எழுத்தாளர், கவிஞர், நடிகர். இறுவட்டுக்கள் இதுவரை நான்கு வெளியிட்டுள்ளமை

No comments:

Post a Comment