Thursday, 19 August 2010

புரியாதது புரிந்த போது...


நான் பாக்கும் போதெல்லாம்
எனது கண்ணாடிக்குள்
இரண்டு கொள்ளிவாய்க்காண்கள்
என்னை அச்சுறுத்தும்-

இமைமூட முயலும் போது
மண்டையோட்டுக்குள்
மரணத்தின் அதிர்வுகள் எதிரொலிக்கும்-
விரல் சூப்பியவாறு
தொலைக்காட்சிக்கு முன்னமர்ந்து
நிலவு என்னைப் பின் தொடர்கிறது’
என்று பிதற்றியவனும் நான்தான்
தொண்டைக் குழியையும் மீறிச் சென்றவிதை
வயிற்றினுள் முளைக்கப் போவதாய்
அலறிய அந்த அவனும் நான்தான்-

எனக்குச் சூரியனோ
காற்றில் துடைத்துவிடப்பட்ட
கட்டாந்தரையில் புரளும்
ஒற்றைச் சருகுபோல மேற்கில்

சிறுவளர்ச்சியொன்றின் பின்னர்தான் தெரியவந்தது
நிலவு நம்மைப் பின்தொடர்வதில்லையென்பதும்
விதையொன்று முளைக்க
வளமான மண் தேவையென்பதும்-

அதுவரையில் எனக்குப் புரியாதிருந்தது
இல்லாதவொன்றை
இருப்பதாய்க் கனவுகாணும்
புனைவுகளில் அடிக்கடி
தொலைந்து போகுமொருவனென்று

No comments:

Post a Comment