பெயர்: இரத்தினம். சிவலிங்கம்மாஸ்டர் சி
பிறந்த இடம்: மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு (28.3.1933)
படைப்பாற்றல்: கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம்
படைப்புக்கள்:
சிறுவர் நூல்கள்:
* பயங்கர இரவு
* அன்பு தந்த பரிசு
விருதுகள்:
* 1984 – 1995 ஆம் ஆண்டுக்குரிய வடகிழக்கு மாகாண சபையின் சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய மண்டலப் பரிசு
* நகைச்சுவைக் குமரன் என்னும் பட்டம் - புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது.
* வில்லிசைச் செல்வன் என்னும் பட்டம் - வித்துவான் பண்டிதமணி வி.சீ. கந்தையா வழங்கினார்.
* அருட்கலைத் திலகம் - சமயக் குரவர் கிருபானந்தவாரியார் வழங்கியது
* வில்லிசைச் செல்வர் - இந்து கலாச்சார அமைச்சல் சொல்லின் செல்வர் செ. இராசதுரை வழங்கியது
* கலாபூஷணம் - இலங்கை கலாச்சார அமைச்சு
* கலைக்குரிசில் - மட்டு இந்து சமய அபிவிருத்தி சங்கம்
* கனித் தமிழ்க் கதைஞன் - காத்தான்குடி பொதுமக்கள்
இவர் பற்றி:
* இவர் 17 வருடங்கள் தினபதி, சிந்தாமணி, பத்திரிகைகளில் துணைப்பத்திராசிரியராகப் பணிபுரிந்தார். இலங்கை வானொலியில் சிறுவர் நிகழ்ச்சி தயாரிப்பாளராக விளங்கியதுடன், இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்பில் சிறுவர் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்
No comments:
Post a Comment