Sunday, 15 August 2010

திருமலை சுந்தா

திருமலை சுந்தா என்ற நாமம் தாங்கி இலக்கியத் துறையில்
நீண்டகாலமாக பணியாற்றி வருகின்ற நாடறிந்த எழுத்தாளர் *"நான் அவள்'* என்னும்
குறுங்கதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நூலில் அறுபத்து நான்கு
குறுங்கதைகள் இடம்பெற்றுள்ளன.

"*பழசுகள்*' என்னும் குறுங்கதை எமது கலாசாரப் பின்னணியை தொட்டு நிற்கிறது.
கணவன், மனைவிக்கிடையே நடந்த சம்பாஷணை மூலம் இக்கதை நகர்ந்து செல்கின்றது.

 "*கடைசிக் கடிதம்'* வெளிநாட்டுக்கு மனைவியை அனுப்பி அவன் உழைக்கும் பணத்தில்
இங்கு சுகமாக வாழும் கணவன்மார்களுக்கு சாட்டை அடி கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
இக்கதை மூலம், ""*நீங்கள் பணத்துக்காக என்னை அனுப்பினீர்கள். நான் பணத்துக்காக
இங்கு விலை பேசப்பட்டு விட்டேன்''* உணர்வார்களா ஆண்கள்?

 "*என் அக்காவுக்கு கல்யாணம்'* என்னும் கதை தாய்மகள் சம்பாஷசணையுடன் நீண்டு
செல்கிறது. சாதாரண குடும்பத்தில் ஏற்படக்கூடிய சம்பவங்களை மையப்பப் பொருளாக
உள்வாங்கி மிக யதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

 "*ஆண்மகள்'*"காதலிக்கும் போது ஒன்றும் வேண்டாம் என்று சொன்ன என்ஜினியர்
மாப்பிள்ளை கல்யாணம் என்றவுடன் சீதனம் கேட்கிறார். இந்த உலகத்தில் வாழும்
ஆம்பிளையளை நினைச்சுத்தான் அம்மா....'' " கூறிநிற்கிறாள்.

*சீதனம் *இக்கதையின் மூலவேர். ஒரு குடும்பம் அதனோடு ஒட்டிய வலைப்பின்னல்,
தராதரம் பார்க்கும் பெற்றோர், மனதைப் பார்க்கும் மகள் ரேகா.

 "*கொடுத்து வைத்தவன்'* கதையில் படித்த மாஸ்டரும் படியாத பரமசிவமும், சவரியும்
வந்து போகிறார்கள். இக்கதையில் புதுமை ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

"*நாங்க இருவரும்'* என்னும் கதை முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி
வர்க்கத்திற்கும் உள்ள மனோபாவங்களை எடுத்துக் காட்டுகின்றது. தொழிலாளர்கள்
மணியன், சுனில் இருவரும் இனத்தால் வேறுபட்டிருந்தாலும் தொழிலாளவர்க்கம் என்ற
வகையில் தமது ஒற்றுமையைக் காட்டியுள்ளார்கள். தொழிலாளர்களை அடக்கியாள
நினைக்கும் முதலாளிகளுக்கு இக்கதை முகத்தில் அடித்துள்ளது. நல்ல கருப்பொருள்
என்ற வகையில் முற்போக்கான மனநிலையை உருவாக்கியுள்ளது.

*"சமத்துமருமகள்'* சாதாரண குடும்பக் கதையாக இருந்தபோதிலும் மாமிமருமகள் சண்டை
என்று வந்துவிட்டால், மகன் தாய் பக்கம் நின்று மனைவியை ஏசுவதும் மனைவி
கணவனுக்கிடையே பிரச்சினைகள் தோன்றுவதும் சகஜம். ஆனால், இந்தக் கதையின் ஓட்டம்
வித்தியாசமாக இருக்கிறது.

 "*குமிழிகள்* *உடைகின்ற வேகம்'* என்னும் கதை "*அண்ணலும் நோக்கினான் அவளும்
நோக்கினாள்'* நோக்குதலால் ஏற்பட்ட ஒரு சிறிய நேர இன்பம், அத்துடன் கதை
முடிவுற்றது. வயதுக்கோளாறோ தெரியவில்லை.

 "*இரண்டு தடவை'* கதையில் கணவனை இழந்த தாயும், கணவனைக் காப்பாற்றும் மகளும்
சித்திரிக்கப்பட்டுள்ளார்கள். தாய் அன்பு முதன்மை பெறுகின்றது.

 "*நெக்கிலஸ்*' புதுமனத் தம்பதியினருக்கிடையில் பிரிவையே ஏற்படுத்தக் காரணமாக
அமைந்த பொய் எவ்வளவு காலத்துக்கு உண்மையாகும்.

 "*இவர்களுக்கும் திருவிழா'* தேர்தலில் நிற்கின்ற பதவி ஆசை பிடித்தவர்களைப்
பற்றி, ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்துடன் சம்பாஷணையில் கூறும்
விடயங்கள் மூலம் கதை நகர்த்தப்பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு இக்கதை தினகரனில்
வெளிவந்துள்ளது.

"*விருந்துக்கு வராதவள்'* என்ற ஒரு யதார்த்தமான கதை கதாசிரியரின் படைப்பாற்றலை
வெளிப்படுத்தி நிற்கிறது. ""*நாங்க ஒரு நேர சாப்பாட்டோட வாழுற கூட்டம்
பாருங்க''* என்ற சொல்லாடல் மனத்தை நெருடி நிற்கிறது.

 "*பொங்கல் எங்களுக்கல்ல'* என்ற கதை திருகோணமலையின் நகரத்தில் வீடு வாடகைக்கு
எடுப்பதன் கஷ்டத்தையும், நிலாவெளியிலிருந்து நகரத்துக்கு வந்து வாடகைக்கு
குடியிருப்பவர்களின் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு தாயின்
மனநிலை இக்கதையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 "*பத்தரை மாற்றுத் தங்கம்'* கணவனைச் சந்தேகிக்கும் மனைவி. பின்பு கணவனை
நம்புகின்ற நிலை. இந்த இருபக்க நியாயத்துக்குமிடையில் அகப்பட்ட ஒரு
குடும்பத்தின் கதை.

 "*முடியாததென்று*' என்ற கதை நட்புக்கும், மனைவி என்ற பந்தத்திற்கும் இடையில்
ஏற்படுகின்ற ஒவ்வாமையை எண்ணி அங்கலாய்க்கும் ஒருவரின் கதை.

*குறுங்கதையில் பல அர்த்தப்பாடுகளை விளங்க வைத்துள்ளார் ஆசிரியர்.*

 "*பொங்கலுக்காகவல்ல'* என்ற கதையில் கடையில் வேலை பார்க்கும் ஓர் ஏழைத்
தொழிலாளியைப் பற்றி அவன் ஏழ்மையைப் பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments:

Post a Comment