Sunday, 15 August 2010

தமிழ் மணி ந. பாலேஸ்வரி

திருக்கோணமலை இலக்கியச் சோலையில் மலர்ந்த மூத்த பெண் எழுத்தாளர் தமிழ் மணி ந. பாலேஸ்வரி கடந்த பல ஆண்டுகளாக இலக்கியச் சேவை புரிந்து வருகின்றார். திரு. சி.வை. தாமோதரப்பிள்ளை, மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாத ஐயர் ஆகியோருடன் பழைய தமிழ் இலக்கியங்களை மறு பதிப்புச் செய்து அச்சு வாகனமேற்ற உதவிய திரு. தி. த. கனசுந்தரம் பிள்ளையினதும், அவரது சகோதரரும், ஈழத்தின் முதல் நாவலான மோகனாங்கியை எழுதிய சரவணமுத்துப் பிள்ளையினதும் பரம்பரையில் வந்த பாலேஸ்வரி பலமான இலக்கிய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டவர். தனது ஒன்பதாவது வயதில் ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தில் படிக்கும்போது எழுதத்தொடங்கிய இவர் இன்னும் தன் பேனாவைக் கீழே வைத்துவிடவில்லை. இருநூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை ஏற்கனவே எழுதி முடித்த இவர் இலங்கையில் ஆகக்கூடிய சிறுகதைகளை எழுதிய பெண் எழுத்தாளர் என்ற பெருமையையும் பெற்றுக்கொள்கின்றார். அது மட்டுமன்றி இலங்கையில் முதன் முதல் தமிழ் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் இவருக்கே போய்ச் சேருகின்றது.

No comments:

Post a Comment