Monday, 16 August 2010

அக்கரைப் பாக்கியன்:

அக்கரைப் பாக்கியன்:

பெயர்: க. பாக்கியராசா
புனைபெயர்: அக்கரைப் பாக்கியன்
பிறந்த இடம்: அக்கரைப்பற்று (8.9.1951)
படைப்பாற்றல்: கவிதை, நாடகம், இசைப்பாடல், கூத்து

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

    * அக்கறை – 1978
    * பலாக்கனி

விருதுகள்:

    * கவிவேந்தன் - அக்கரைப்பற்று இளைஞர் முன்னணி – 1973
    * கவி செல்வர் - அக்கரைப்பற்று சுபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீடம், கொழும்பு – 1993
    * பாவாணர் - தேசிய இளைஞர் பேரவை  - 1995
    * அம்பாரை மாவட்ட பாரதி நூற்றாண்டு கவிதைப் போட்டி – முதலாம் இடம், தங்கப்பதக்கம்
    * அகில இலங்கை நாவற்குழியூர் நடராசன் நினைவு வானொலிக் கவிதைப் போட்டி - மூன்றாவது இடம், ரூபா 3000 பரிசு
    * சர்வதேச ஆசிரியர் தினக் கவிதைப் போட்டி - இரண்டாம் இடம் - 1998

இவர் பற்றி:

    *

      இவரது படைப்புக்கள் தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மித்திரன், ஐக்கிய தீபம், முகில், சூடாமணி, வானோசை என்பவற்றில் வெளியாகியுள்ளன. இவர் இரணியன் வரை, கண்ணன் கருணை, போடியார் பொன்னம்பலம் ஆகிய வடமோடி கூத்துக்களை இயற்றியுள்ளார். நிம்மதி, புதுப்பெண்டாட்டி, நெஞ்சில் மூண்ட நெருப்பு, பாசத் துடிப்பு, வாழ்வின் ரகசியம், உறவைத் தேடி, பழகத் தெரிந்த மனமே, அன்னையின் அருள் ஆகிய நாடகங்களை எழுதியதுடன், நிழல், மனச்சிறை என்ற நாடகங்களில் நடித்தும் உள்ளார். இலங்கை வானொலியில் இவரது மெல்லிசைப் பாடல்கள் ஒலிபரப்பாகியுள்ளன.

No comments:

Post a Comment