அருள் செல்வநாயகம்
பெயர்: அருள் செல்வநாயகம்
பிறந்த இடம்: குருமண்வெளி, மட்டக்களப்பு (06.06.1926)
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்பு:
* தாம்பூல ராணி
நாவல்கள்:
* பாசக்குரல் - 1963
* மர்ம மாளிகை – 1973
* வாழ முடியாதவன்
* மாலதியின் மனோரதம்
* சூரிய காந்தி
* வாள்முனை வாழ்வு – 3 பாகங்கள்
* திலகசுந்தரி
நாடகத் தொகுப்பு:
* உயிர் தந்த ஓவியங்கள்
ஆராய்ச்சி நூல்கள்:
* நறுமலர் மாலை
* ஈழமும் தமிழரும்
* சீர்பாத குல வரலாறு
தேடித் தொகுத்து வெளியிட்ட நூல்கள்:
* விபுலானந்த அமுதம்
* விபுலானந்தத் தேன்
* விபுலானந்த வெள்ளம்
* விபுலானந்தக் கவிதைகள்
* விபுலானந்தச் செல்வம்
* விபுலானந்த ஆராய்வு
* விபுலானந்தக் கவிமலர்
* விபுலானந்த சொல்வளம்
* விபுலானந்த இன்பம்
* பூசனியாள் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு
* சதாரம் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு
* பாஞ்சாலி சுயம்வரம் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு
இவர் பற்றி:
* இவர் 23 நூல்களை படைத்துள்ளார். மட்டக்களப்பில் முதல்முதல் சிறுகதை தொகுதி வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது.இவரது 50 க்கும் மேற்பட்ட நாடகங்கள் இலங்கை, இந்திய, மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. சீர்பாத குல வரலாறு என்னும் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை 1968 அம் ஆண்டு சென்னையில் நடைபெற்றஇரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது. சென்னை சாகித்திய அகடமி வெளியிட்ட கலைக்களஞ்சியத்திலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. இவர் 02.09.1973 அன்று அமரத்துவம் அடைந்து விட்டார்.
No comments:
Post a Comment