Monday, 16 August 2010

மூனாக்கானா:

பெயர்: மு. கணபதிப்பிள்ளை
புனைபெயர்: மூனாக்கானா
பிறந்த இடம்: ஆரையம்பதி, மட்டக்களப்பு, இலங்கை (22-01-1924)
தொடர்புகளுக்கு: கந்தசாமி கோயிலடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு.
படைப்பாற்றல்: கவிதை, கிராமிய பாடல்கள், கட்டுரை

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுதிகள்:

    * இலக்கிய நெஞ்சம்

கவிதைத் தொகுதிகள்:

    * கவிதை நெஞ்சம்

விருதுகள்:

    * மட்டக்களப்பு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணிமன்றம் வருடாந்தப் போட்டி – முதற்பரிசு - இரண்டு தடவைகள் பெற்றுள்ளார்.
    * கலைமணி விருது – மட்டக்களப்பு மாவட்டக் கலாச்சாரப் பேரவை – 1987
    * கலாபூஷணம் விருது - இந்துசமயக் கலாச்சாரத் திணைக்களம் - 1995
    * மக்கள் கவிமணி விருது – மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை – 1996
    * கலையரசு விருது – மட்டக்களப்பு மாவட்டக் கல்வித் திணைக்களம் - 2000
    * தலைக்கோல் விருது – கிழக்குப் பல்பலைக்கழகம், இலங்கை - 2001

இவர்பற்றி:

 இவர் ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியர். அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். ஆரையூர் கவின்கலை மன்றத்தின் தலைவராகவும், இந்துசமயக் கலாச்சார அமைச்சின் மதியுரைக்குருவாகவும் விளங்கியுள்ளார்.  இவரது 'லெச்சுமி கலியாணம்' நாட்டுக்கூத்து கொழும்பிலும் பிற இடங்களிலும் பல தடவைகள் ஆடப்பட்டுள்ளது. கிராமியக் கலைகளான ஊஞ்சல் பாடல், காவியப் பாடல், காவடிப்பாடல், கொம்பு முறிப்பாடல், கிராமியக் கவிகள் முதலானவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு இயற்றிவருகிறார்.  'தாலாக்கோலம்', 'புழுகுப்புராணம்'  முதலான தலைப்புகளில் இவரது தொடர் கவிதைகள் 1948 களில் தினகரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியாகின.

No comments:

Post a Comment