ஜீவா ஜீவரெத்தினம்:
பெயர்: காத்தமுத்து ஜோர்ஜ் ஜீவரெத்தினம்
புனைபெயர்கள்: ஜீவா, ஜீவரெத்தினம்
பிறந்த இடம்: துறைநீலாவணை (1933 – 1977)
படைப்பாற்றல்: கவிதை
படைப்புக்கள்:
* வாழும் கவிதை – கவிதைத் தொகுப்பு - 1963
விருதுகள்:
* கல்வி உயர்கல்வி அமைச்சின் சர்வதேவ ஆசிரியர் தினக் கவிதைப் போட்டி – முதலாமிடம், 10,000 ரூபா பரிசு – 1996
* மட்டக்களப்பு மாவட்டக் கலாச்சாரப் பேரவை கவிதைப் போட்டி - இரண்டாம் பரிசு – 1981
* கல்முனை எழுத்தாளர் சங்கம் - தங்கப் பதக்கம் பரிசு – 1967
* மகாபொல புலமைப் பரிசு கவிதைக்காக 5000 ரூபா பரிசு – 1984
* மானம் என்ற கவிதைக்கு - இலங்கை சாகித்திய மண்டல பரிசு – 1967
இவர் பற்றி:
* இவர் 1983 – 84 வரை சிந்தாமணியல் தொடர்ந்து மலையுதிர் மணிகள் என்ற தலைப்பில் கவிதை எழுதிவந்தார். இலங்கை வானொலியில் 1990 களில் காவியக் கலசம் என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இவரது முதலாவது கவிதை 'புத்தர் இன்றிருந்தால்' சுதந்திரனில் 1958 இல் வெளியானது. வீரகேசரி, சுதந்திரன், சிந்தாமணி, விவேகி, ஆனந்த சாகர், விடிவெள்ளி ஆகியவற்றில் இவரது படைப்புக்கள் வெளியாகின. புத்திரிகைகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். 'ஓ என் அருமை வண்டிக்காரா'என்ற இவரது கவிதையை ஏ.ஜே.கனகரெத்தினம் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவருக்கு சோதிடத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. தினபதியில் இவர் சோதிட ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்தார்.
No comments:
Post a Comment