இரா. பத்மநாதன்:
பெயர்: இராசதுரை பத்மநாதன்
புனைபெயர்கள்: இராஜ குமாரன், ஈழத்தரசன், மூன்றாலங்கன்றடியான், எழிலோன், வசந்தா, வானொலிமாமா
பிறந்த இடம்: மட்டக்களப்பு (31.08.1929)
படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, நாடகம்
படைப்புக்கள்:
* கோதண்டம் ஏந்திய கோமகன் - இவர் தினமுரசில் வாராவாரம் இலகு தமிழில் எழுதிய இராமாயண காப்பியத்தின் தொகுப்பு
* வர்ண சித்திர வேதாகமம் - வாராவாரம் எழுதிவந்த வேதாகமம் பைபிள் புதிய ஏற்பாடு கட்டுரைகளின் தொகுப்பு
விருதுகள்:
* கலைவாரிதி என்னும் பட்டம் - கிழக்கிலங்கை பத்திரிகைச் செய்தியாளர் சங்கம் - 1992
* கலைமணி விருது - இந்து கலாசார திணைக்களம் - 1995
* கலாபூஷணம் - கலாசார அமைச்சர் திரு. இலட்சுமணன் ராஜபக்சவினால் வழங்கப்பட்டது
இவர் பற்றி:
* இவர் சுதந்திரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராக சிலகாலம் பணியாற்றியவர். அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க தகவல் நிலைய தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக செயல்ப்பட்டவர்;. அமெரிக்க செய்தி தமிழ்மாத இதழின் ஆசிரியராகவும் அங்கம் வகித்தார். 1969 – 1984 வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். வானாலி நாடகங்கள், உரைச் சித்திரங்கள், நாட்டாரியல் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர். பங்கேற்பாளர். இக்கால கட்டத்தில் பிரதி ஞாயிறுகளில் சிறுவர் மலர் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி வானொலி மாமா என்று புகழ் பெற்றவர். இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த பின்பும் இவரது இலக்கியப் பணி தொடர்ந்தது. அகில இந்திய ரேடியோ சென்னை செய்திப் பிரிவில் பகுதிநேர செய்தி ஆசிரியராக அங்கே பணிபுரிந்தார். சென்னை இந்திய சினிமா பத்திரிகை எழுத்தாளர் சங்க செயற்குழு உறுப்பினர். வீரகேசரி, தினகரன், சுதந்திரன் பத்திரிகைகளின் தமிழக நிருபராகவும் பணியாற்றியிருக்கிறார். சில தமிழ்நாட்டு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். சிவாஜிகணேசன் நடித்த பாசமலர் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.
No comments:
Post a Comment